ஜெய்ப்பூரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – தர்பார் இறுதிகட்டப் படப்பிடிப்பு?

ஜெய்ப்பூர்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படப்பிடிப்பிற்காக , ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் முகாமிட்டுள்ளார். லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் ஏப்ரல் மாதம் 10 தேதி தொடங்கியது. படப்பிடிப்பில் பங்கேற்ற ரஜினிகாந்த், நாடாளுமன்றத் தேர்தலுக்காக சென்னை வந்தார். பின்னர் மும்பையிலிருந்தே டெல்லிக்குச் சென்று பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றவர் பின்னர் சென்னை வந்தார். ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு முடிந்து விடும் என்று கூறப்பட்டது.
 

ஜெய்ப்பூரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – தர்பார் இறுதிகட்டப் படப்பிடிப்பு?ஜெய்ப்பூர்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படப்பிடிப்பிற்காக , ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் முகாமிட்டுள்ளார். லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு  மும்பையில் ஏப்ரல் மாதம் 10 தேதி தொடங்கியது.

படப்பிடிப்பில் பங்கேற்ற ரஜினிகாந்த், நாடாளுமன்றத் தேர்தலுக்காக சென்னை வந்தார். பின்னர் மும்பையிலிருந்தே டெல்லிக்குச் சென்று பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றவர் பின்னர் சென்னை வந்தார். ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு முடிந்து விடும் என்று கூறப்பட்டது.

மழை காரணமாக படப்பிடிப்பு தள்ளிப் போனது. தற்போது படப்பிடிப்பிற்காக ஜெய்ப்பூர் சென்றுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் ஜெய்ப்பூர் சென்ற விமானத்தில், பயணி ஒருவர் எடுத்த புகைப்படம் சமூகத்தளத்தில் வலம் வந்தது.

ஜெய்ப்பூரில் முன்னணி ஓட்டல் ஒன்றில் தங்கியிருக்கும் ரஜினியை, அதே ஓட்டலில் தங்கியுள்ள ரசிகர் ஒருவர் சந்தித்துள்ளார். இருவரும் ஓட்டலில் உள்ள ஜிம்மில் சந்தித்துள்ளனர். அங்கே ரஜினிகாந்த், பளூ தூக்குதல் உள்ளிட்ட உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாக அந்த ரசிகர் தகவல் தெரிவித்துள்ளார். 

உடற்பயிற்சி முடிந்த பின்னர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ரசிகரிடம், தமிழர் என்று தெரிந்ததும் சிறிது நேரம் தமிழிலேயே உரையாடிக் கொண்டிருந்துள்ளார் ரஜினிகாந்த். அவருடன் படம் எடுத்துக் கொண்ட பிறகு தனது அறைக்குச் சென்றுள்ளார் ரஜினி.

ஜெய்ப்பூரில் ரஜினி – நயன்தாரா தொடர்பான பாடல் காட்சிகள் படமாக்கப் படுவதாகத் தெரிகிறது. வசனம் மற்றும் சண்டைக் காட்சிகள் மும்பையில் முழுவதுமாக எடுக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. ஜெய்ப்பூர் படப்பிடிப்புடன், தர்பார் படப்பிடிப்பு நிறைவு பெறும் எனவும் தெரிகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் 80களில் வெளியான அடுத்த வாரிசு படத்தின் பாடல் காட்சிகள் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், உதய்பூர் பகுதிகளில் படமாக்கப் பட்டிருந்தது. அதற்குப் பிறகு ஜெய்ப்பூருக்கு படப்பிடிப்பிற்காக, இப்போது தான் ரஜினிகாந்த் சென்றுள்ளார்.

நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் மாதம் தர்பார் ஆடியோ வெளியாகும் என்று படத்தின் இசையமைப்பாளர் அனிருத் கூறியிருந்தார். பொங்கலுக்கு உலகமெங்கும் தர்பார் வெளியாகிறது.

– வணக்கம் இந்தியா

 

From around the web