விஜய் சேதுபதி, சசிகுமாருக்கு ரஜினி தந்த கௌரவம்!

சென்னை : சக நடிகர்களை, திறமையான கலைஞர்களை பாராட்டுவதில் ரஜினிக்கு நிகர் ரஜினி தான். இதனை மீண்டும் ஒரு முறை ‘பேட்ட’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நிரூபித்துவிட்டார் ரஜினி. தன்னுடன் நடித்த விஜய் சேதுபதி பற்றி ரஜினி பேசுகையில், “ஜித்து என்றொரு கேரக்டர். இதை யார் பண்ணுறாங்கன்னு தெரியல எனக்கு. யார் பண்ணப் போறாங்கன்னு மைண்ட்ல ஓடிக்கிட்டே இருக்கு. கார்த்திக் சுப்பராஜ்கிட்ட கேட்டேன். விஜய் சேதுபதியைக் கேக்கலாமா சார்னு கேட்டார். ஒத்துக்குவாரான்னு கேட்டேன். அடுத்தநாள், சார்,
 

விஜய் சேதுபதி, சசிகுமாருக்கு ரஜினி தந்த கௌரவம்!

சென்னை : சக நடிகர்களை, திறமையான கலைஞர்களை பாராட்டுவதில் ரஜினிக்கு நிகர் ரஜினி தான். இதனை மீண்டும் ஒரு முறை ‘பேட்ட’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நிரூபித்துவிட்டார் ரஜினி.

தன்னுடன் நடித்த விஜய் சேதுபதி பற்றி ரஜினி பேசுகையில், “ஜித்து என்றொரு கேரக்டர். இதை யார் பண்ணுறாங்கன்னு தெரியல எனக்கு. யார் பண்ணப் போறாங்கன்னு மைண்ட்ல ஓடிக்கிட்டே இருக்கு. கார்த்திக் சுப்பராஜ்கிட்ட கேட்டேன். விஜய் சேதுபதியைக் கேக்கலாமா சார்னு கேட்டார். ஒத்துக்குவாரான்னு கேட்டேன். அடுத்தநாள், சார், ஒத்துக்கிட்டார் சார்னு கார்த்திக் வந்து சொன்னார்.

இங்கே ஒரு விஷயம் சொல்லியாகணும். விஜய் சேதுபதியை சாதாரணமான நடிகன்னு நினைச்சிடாதீங்க. அவர் மகா நடிகன். அவ்வளவு அற்புதமான நடிகன். ஒவ்வொரு ஷாட்டுக்கும் புதுசு புதுசா பண்றாரு. முன்னாடி என்ன பண்ணினோம், இப்ப இப்படி பண்ணினா நல்லாருக்குமா, வேற பண்ணலாமான்னு யோசிச்சிக்கிட்டே இருக்காரு.

விஜய் சேதுபதி நல்ல நடிகன் மட்டுமில்ல. நல்ல மனிதனும் கூட. அவரோட பழகும்போதுதான் அவரோட நல்ல மனசு தெரிஞ்சுது. அவரோட பேச்சு, சிந்தனை, செயல் எல்லாமே வித்தியாசமா இருக்கு. புக்ஸ் படிக்கிறீங்களான்னு கேட்டேன். இல்லேன்னாரு. நிறைய படங்கள் பாக்கறீங்களான்னு கேட்டேன். இல்ல சார்னு சொன்னாரு. எல்லாத்தையுமே ரிவர்ஸா யோசிச்சுப் பார்ப்பேன்னு சொன்னாரு. ஒரு சைக்கியாட்ரிஸ்ட் மாதிரி யோசிச்சு செயல்படுறாரு விஜய் சேதுபதி.

ரொம்ப வருஷத்துக்குப் பிறகு நல்ல நடிகர் கூட நடிச்ச அனுபவம் கிடைச்சிச்சு. விஜய் சேதுபதி நல்லா இருக்கணும். உதவி செய்ற அவரோட நல்ல மனசுக்கு என்னோட வாழ்த்துகள்,” என்றார்.

சசிகுமார்

தொடர்ந்து சசிகுமார் பற்றி பேசுகையில்,” ‘பேட்ட’ படத்தில் மாலிக் என்றொரு கேரக்டர். கிட்டத்தட்ட 20 நாள் ஷூட்டிங்ல இருக்கணும். இந்தக் கேரக்டருக்கு யார் யாரையெல்லாம் போடலாம்னு யோசிச்சதைச் சொன்னா, அந்தப் பேரையெல்லாம் சொன்னா, ஆச்சரியமாயிருவீங்க. கார்த்திக், இந்தப் படம் ஷோலே மாதிரி பிரம்மாண்டமான படமா ஆயிரும் கார்த்திக்னு சொன்னேன்.

கடைசிக் கட்டத்துலதான் கார்த்திக் வந்து, இந்தக் கேரக்டருக்கு சசிகுமார் சார்கிட்ட கேட்டேன். சரின்னு சொல்லிட்டார்னு சொன்னார். எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருச்சு.

படம் ஷூட்டிங் சமயத்துல சசிகுமார்கிட்டே நிறைய பேசிட்டிருந்தேன். என்னோட 44 வருஷ சினிமா வாழ்க்கையில, ரெண்டு, மூணு நல்ல மனிதர்களைப் பார்த்து பிரமிச்சிருக்கேன். இப்படிலாம் ஒரு நல்ல மனசோட ஒருத்தர் இருக்க முடியுமான்னா, அது சசிகுமார். அப்படியொரு நல்லவர் அவர். நல்லது செய்யணும்னே நினைச்சிட்டிருக்கறவர். செயல்பட்டுக்கிட்டிருக்கறவர்.

சசிகுமார், ஒரு தாடி வைச்ச குழந்தை. அப்படியொரு மனசு அவருக்கு. சசிகுமார் நல்லாருக்கணும். சொந்தப் படமெல்லாம் எடுக்காம, நல்ல நல்ல கேரக்டர்கள் செஞ்சு நடிச்சிக்கிட்டே இருக்கணும்,” என்றார் ரஜினி.

மேலும் சிம்ரன், த்ரிஷா, நவாசுதின் சித்திக், பாபி சிம்ஹா போன்றோரின் நடிப்புத் திறமையும் பாராட்டினார் ரஜினி.

– வணக்கம் இந்தியா

From around the web