டெல்லி வன்முறை.. மத்திய அரசுக்கு ரஜினிகாந்த் கடும் கண்டனம்!

டெல்லியில் நடந்து வரும் வன்முறைக்கு மத்திய அரசின் புலனாய்வுத் துறையின் தோல்வி தான் காரணம். வன்முறையை தடுக்கத் தவறிவிட்டது மத்திய அரசு என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். போயஸ் தோட்டத்தில் வீட்டிற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் கூறியதாவது: “டெல்லியில் நடக்கும் வன்முறைக்கு காரணம் மத்திய அரசின் உளவுத்துறையின் தோல்வி. இதற்காக மத்திய அரசை நான் கடுமையாக கண்டிக்கிறேன். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வந்திருக்கும் வேளையில் மத்திய அரசு மிகவும் ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டும். உளவுத்துறை அவங்க வேலையை
 

டெல்லி வன்முறை.. மத்திய அரசுக்கு ரஜினிகாந்த் கடும் கண்டனம்!டெல்லியில் நடந்து வரும் வன்முறைக்கு மத்திய அரசின் புலனாய்வுத் துறையின் தோல்வி தான் காரணம். வன்முறையை தடுக்கத் தவறிவிட்டது மத்திய அரசு என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

போயஸ் தோட்டத்தில் வீட்டிற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் கூறியதாவது:

“டெல்லியில் நடக்கும் வன்முறைக்கு காரணம் மத்திய அரசின் உளவுத்துறையின் தோல்வி. இதற்காக மத்திய அரசை நான் கடுமையாக கண்டிக்கிறேன். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வந்திருக்கும் வேளையில் மத்திய அரசு மிகவும் ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டும்.

உளவுத்துறை அவங்க வேலையை சரியாக செய்யவில்லை. வன்முறையை இரும்புக் கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும். இனிமேலாவது மத்திய அரசு ஜாக்கிரதையாக இருப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கிறேன்.

உளவுத்துறை தோல்வி என்றால் உள்துறை அமைச்சகம் தோல்வி தான். அவர்கள் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.”

ரஜினிகாந்தின் மத்திய அரசு மீதான கண்டனம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இடையே ஆங்கிலத்திலும் பதிலளித்துள்ளதால் தேசிய ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது ரஜினியின் பேட்டி. வடக்கேயும் ரஜினியின் கண்டனம் குறித்து விவாதிக்கப்படுகிறது.

http://www.A1TamilNews.com

From around the web