திமுகவுக்கும் கருணாநிதிக்கும் அரசியலில் ‘மறு ஜென்மம்’ தந்த ரஜினிகாந்த்!

ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூகத் தளங்களில் மட்டுமே வரலாற்றைப் படிப்பவர்களுக்கு, மீண்டும் சில உண்மைகளை சொல்லவேண்டும். 1977ல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக முதன் முதலாக ஆட்சிக்கு வந்தது. அன்றிலிருந்து இந்த நிமிடம் வரை திமுக என்றுமே பெரும்பான்மையான தமிழக மக்களின் அபிமானம் பெற்ற கட்சியாக இருந்ததில்லை. 1977 முதல் 1987 வரை, அதாவது எம்ஜிஆர் மறையும் வரை திமுகவால் ஆட்சிக்கு வரமுடியவில்லை. தொடர்ந்து மூன்று முறை எம்ஜிஆர் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார்.
 

திமுகவுக்கும் கருணாநிதிக்கும் அரசியலில் ‘மறு ஜென்மம்’ தந்த ரஜினிகாந்த்!பேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூகத் தளங்களில் மட்டுமே வரலாற்றைப் படிப்பவர்களுக்கு, மீண்டும் சில உண்மைகளை சொல்லவேண்டும். 1977ல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக முதன் முதலாக ஆட்சிக்கு வந்தது. அன்றிலிருந்து இந்த நிமிடம் வரை திமுக என்றுமே பெரும்பான்மையான தமிழக மக்களின் அபிமானம் பெற்ற கட்சியாக இருந்ததில்லை.

1977 முதல் 1987 வரை, அதாவது எம்ஜிஆர் மறையும் வரை திமுகவால் ஆட்சிக்கு வரமுடியவில்லை. தொடர்ந்து மூன்று முறை எம்ஜிஆர் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். அவர் மறைந்தபின் அதிமுக இரண்டாக பிளவுபட்டது. இரட்டை இலை முடக்கப்பட்டது.

இரண்டாக பிளவு பட்ட அதிமுகவை எதிர்த்து 1989 சட்டமன்ற தேர்தலில் திமுக 150 இடங்கள் பெற்று ஆட்சி அமைத்தது. இதில் திமுக ஓட்டு சதவிதம் 37.89%, காங்கிரஸ் 19% ஜெயலலிதா அதிமுக 22.37%, ஜானகி அதிமுக 9.19% அதிமுக இரண்டாக உடைந்தும் கூட திமுகவால், பிளவுபட்ட இரண்டு அதிமுகவை விடவும் வெறும் 6% வாக்குகளைத்தான் அதிகம் பெற முடிந்தது.

அதற்கு பின் 1996ல் திமுக வரலாற்று வெற்றியை பெற்றது. 1991 முதல் ஜெயலலிதா நடந்துகொண்ட விதத்தை பார்த்து வெறுப்பின் உச்சியில் இருந்தனர் தமிழக மக்கள். கடந்த 41 வருடங்களில் அப்படி ஒரு வெறுப்பு எந்த கட்சியின் மீதும், எந்த தேர்தலிலும் இருந்ததில்லை. ஒ.கே. அதிமுக வேண்டாம், ஆனால் யாருக்கு வாக்களிப்பது ? . உண்மையில் மீண்டும் திமுகவுக்கு வாக்களிப்பதை மக்கள் அன்று விரும்பவில்லை. இங்கு சில விஷயங்களை உன்னிப்பாக, மிகத்தெளிவாக கவனிக்கவேண்டும்.

1996 தேர்தலில் வாக்களித்த மிகப் பெரும்பான்மையான மக்களிடம் இன்றும் இருக்கும் எண்ணம், ரஜினி 96ல் அரசியலுக்கு வந்திருக்கவேண்டும், வந்திருந்தால் நிச்சயம் முதல்வராகியிருப்பார் என்பதுதான்.

நரசிம்மராவை டெல்லியில் சந்தித்து ஜெயலலிதாவுடன் கூட்டணி வேண்டாம் என வலியுறுத்தியபோது நரசிம்மராவ் சொன்னது ” நீங்கள் கட்சி ஆரம்பித்தால் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்பதுதான். ஆனால் ரஜினி உடன்படவில்லை. பின் காங்கிரஸ் உடைந்து தமாகா உருவானபோது அதன் தலைவர் பதவியை ரஜினிக்காக காலியாக வைத்து ரஜினியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க தயாராக இருந்தார் மூப்பனார். இதற்கும் ரஜினி ஒப்புக் கொள்ளவில்லை.

ஆக காங்கிரசும் சரி, தமாகாவும் சரி திமுகவுடன் கூட்டணி சேர தயாராக இல்லை. இந்திய கம்யூனிஸ்ட் தவிர அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எதுவுமே திமுகவுடன் கூட்டணி சேர அப்போது தயாராக இல்லை என்பது தான் உண்மை நிலவரம். மதிமுக, பாமக, மார்க்சிஸ்ட் என எல்லோருமே தனி அணி அமைத்தனர்.

அப்போது ரஜினிகாந்தின் முயற்சியால் மட்டுமே தமாகா, திமுகவுடன் கூட்டணியில் இணைந்தது. காங்கிரசில் இருந்து பிரிந்த புதிய கட்சியான தமாகாவுக்கு 40சட்டசபை தொகுதிகளையும், 20 பாராளுமன்ற தொகுதிகளையும் திமுக தந்தது என்றால் அன்று திமுக எவ்வளவு மோசமான நிலைமையில் இருந்திருக்கும் ? திமுக 17 பாராளூமன்ற தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. தனக்கு கொடுக்கப்பட்ட 40 தொகுதிகளில் 39ல் தமாகா வென்றது.

சைக்கிள் சின்னத்தை தேர்ந்தெடுத்து பட்டிதொட்டி எங்கும் அண்ணாமலை சைக்கிள் என்றே பிரச்சாரம் நடந்தது. ஆக புதிதாக ஆரம்பித்த ஒரு கட்சி ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே தோற்றது. அதே கட்சியின் முதல்வர் வேட்பாளராக ரஜினிகாந்த் நின்றிருந்தால் என்னவாகி இருக்கும். 1996ல் திமுக ஆட்சிக்கு வந்தது முழுக்க முழுக்க ரஜினிகாந்த் மட்டுமே என்று நான் சொல்லவில்லை.

ஆனால் ரஜினி ஆதரவு இல்லை என்றால் நிச்சயமாக திமுக ஆட்சியமைத்திருக்க வாய்ப்பேயில்லை. மொத்தத்தில் மீண்டும் திமுக தன் சுய பலத்தால் ஆட்சியமைக்கவில்லை என்பதே உண்மை. திமுகவுக்கு அது மறு ஜென்மம். அதை தந்தவர் ரஜினிகாந்த் என்பதே மிகையில்லாத உண்மை.

– மனோகரன்

A1TamilNews.com

From around the web