இந்த தீபாவளிக்காவது ரிலீசாகுமா? ரஜினியின் 2.ஓ லேட்டஸ்ட் நிலவரம்!

லைகா நிறுவனம் தயாரிக்கும் 2.ஓ படம் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக, பல ஆயிரம் கலைஞர்களின் உழைப்பில் உருவாகிக் கொண்டுள்ளது. இந்தப் படத்துக்கு நிறைய கிராபிக்ஸ் வேலைகள் இருப்பதால் ரிலீஸ் தேதியை அறுதியிட்டுச் சொல்ல முடியாமல் உள்ளனர். 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸாகும் என முதலில் அறிவிக்கப்பட்ட இந்தப் படம், பின்னர் இந்த வருடம் ஜனவரி 25-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதன்பின்னர் ஏப்ரல் மாதம் ரிலீஸ் என
 

இந்த தீபாவளிக்காவது ரிலீசாகுமா? ரஜினியின் 2.ஓ லேட்டஸ்ட் நிலவரம்!

லைகா நிறுவனம் தயாரிக்கும் 2.ஓ படம் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக, பல ஆயிரம் கலைஞர்களின் உழைப்பில் உருவாகிக் கொண்டுள்ளது.

இந்தப் படத்துக்கு நிறைய கிராபிக்ஸ் வேலைகள் இருப்பதால் ரிலீஸ் தேதியை அறுதியிட்டுச் சொல்ல முடியாமல் உள்ளனர்.

2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸாகும் என முதலில் அறிவிக்கப்பட்ட இந்தப் படம், பின்னர் இந்த வருடம் ஜனவரி 25-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதன்பின்னர் ஏப்ரல் மாதம் ரிலீஸ் என மாற்றப்பட்டது. ஆனால், அப்படியும் கிராபிக்ஸ் வேலைகள் முடியாததால், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு ரஜினி நடித்த ‘காலா’வை ரிலீஸ் செய்தனர்.

இந்த ஆண்டு தீபாவளிக்கு ‘2.0’ ரிலீஸாகும் என ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர். ஆனால், தற்போதைய நிலைப்படி இந்த ஆண்டும் ரிலீஸாவது சந்தேகம்தான் என தகவல் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க 3 டியில் உருவாகும் படம் இது. எனவே படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் நினைத்தபடி முடியாததால், அடுத்த ஜனவரிக்கு படத்தைத் தள்ளிப் போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் இதுகுறித்து லைகா நிறுவனம் எந்த தகவலையும் அதிகாரப்பூர்வமாகச் சொல்லவில்லை.

-வணக்கம் இந்தியா

From around the web