இந்தித் திணிப்பை வட மாநிலங்களே ஏற்றுக் கொள்ளாது – ரஜினிகாந்த்!

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு பதிலளித்த ரஜினிகாந்த், இந்தித் திணிப்பை வட மாநிலங்களே ஏற்றுக் கொள்ளாது என்று கூறியுள்ளார் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த் கூறியதாவது, “நம்ம நாடு மட்டுமல்ல,எந்த நாடாக இருந்தாலும் பொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டின் முன்னேற்றத்திற்கு, ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு ரொம்ப நல்லது. துரதிர்ஷ்டவசமா நம்ம நாட்டில் பொதுவான மொழியை கொண்டு வர முடியாது. இங்கே எந்த மொழியையும் திணிக்க முடியாது. இந்தியைத் திணித்தால், தமிழ்நாட்டில்
 

இந்தித் திணிப்பை வட மாநிலங்களே ஏற்றுக் கொள்ளாது – ரஜினிகாந்த்!சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு பதிலளித்த ரஜினிகாந்த், இந்தித் திணிப்பை வட மாநிலங்களே ஏற்றுக் கொள்ளாது என்று கூறியுள்ளார்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த் கூறியதாவது,

“நம்ம நாடு மட்டுமல்ல,எந்த நாடாக இருந்தாலும் பொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டின் முன்னேற்றத்திற்கு, ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு ரொம்ப நல்லது. துரதிர்ஷ்டவசமா நம்ம நாட்டில் பொதுவான மொழியை கொண்டு வர முடியாது.

இங்கே எந்த மொழியையும் திணிக்க முடியாது. இந்தியைத் திணித்தால், தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், தென் இந்தியாவின் எந்த மாநிலமும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். வட நாட்டிலேயும் பல மாநிலங்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்,” என்று கூறினார்.

ரசிகர்களை சந்திக்கும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு இப்போதைக்கு இல்லை என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். பேனர்கள் வைக்கக்கூடாது என்று ரசிகர்களுக்கு நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே அறிவுறுத்தியுள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களின் தள்ளுமுள்ளுவில், கேமிராவுக்கும் மைக்குக்குமான இணைப்பு வயர் அவர் மீது குறுக்கே விழுந்ததையும் கண்டுகொள்ளாமல், லாவகமாக தள்ளிவிட்டு நடந்து சென்றார்.

– வணக்கம் இந்தியா

From around the web