தலைவர் 168 – ரஜினியின் புத்தம் புதிய தோற்றம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் அவருடைய தோற்றம் வெளியாகியுள்ளது. தர்பார் வசூல், வருமானவரி, குடியுரிமை சட்டம் தொடர்பான பேட்டி என்று ரஜினி பற்றிய பரபரப்பான தகவல்கள் மீடியாவை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் வேளையில், மனிதர் சத்தமில்லாமல் தலைவர்168 படப்படிப்பில் கலந்து கொண்டு இருக்கிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் ரஜினி கிராமத்து ஹீரோவாக வருகிறார் என்று கூறப்படுகிறது. மீனா, குஷ்பு ஆகிய இருவருடன் நயன்தாராவும் நடிக்க
 

தலைவர் 168 – ரஜினியின் புத்தம் புதிய தோற்றம்!சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் அவருடைய தோற்றம் வெளியாகியுள்ளது.

தர்பார் வசூல், வருமானவரி, குடியுரிமை சட்டம் தொடர்பான பேட்டி என்று ரஜினி பற்றிய பரபரப்பான தகவல்கள் மீடியாவை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் வேளையில், மனிதர் சத்தமில்லாமல் தலைவர்168 படப்படிப்பில் கலந்து கொண்டு இருக்கிறார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் ரஜினி கிராமத்து ஹீரோவாக வருகிறார் என்று கூறப்படுகிறது. மீனா, குஷ்பு ஆகிய இருவருடன் நயன்தாராவும் நடிக்க உள்ளார். நாட்டாமை படத்தில் வயதான வேடத்தில் குஷ்புவும், இளமையான ஹீரோயினாக மீனாவும் நடித்து இருந்தார்கள். அதே போல் இருவருக்கும் ரஜினியுடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பு இருக்குமோ என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

இந்நிலையில் தெலுங்கு கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ராகுல் சிப்லிகுஞ்ச் என்பவர் ரஜினியை படப்படிப்பு தளத்தில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். படப்படிப்பின் நடுவே எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ரஜினியின் இளமையான தோற்றம் இடம் பெற்றுள்ளது. பின்னணியில் போலீஸ் ஸ்டேஷன், நீதிமன்றம் போன்ற கட்டிடம் உள்ளது.

அருணாச்சலம் படத்தில் ருத்திராட்சையுடன் நடித்து இருப்பார். அந்த ருத்திராட்சையும் படத்தில் முக்கிய இடம் பெற்றிருக்கும். மீண்டும் கழுத்தில் ருத்திராட்ச்சை அணிந்து இந்தப் படத்தில் ரஜினி நடித்து வருகிறார். பைரவி படத்தில் தொடங்கிய தாடி சென்டிமெண்ட் இந்தப் படத்திலும் தொடர்கிறது. தாடியுடன் தோன்றினாலும் 80களில் வெளிவந்த தனிகாட்டு ராஜா படத்தைப் போலவே இளமையாக தெரிகிறார்.

முதன் முதலாக ரஜினி படத்திற்கு இமான் இசை அமைக்கிறார் என்பதுவும் குறிப்பிடத் தக்கது.

https://A1TamilNews.com

 

From around the web