தமிழகத்தின் தாகம் தீர்க்கும் ரஜினி மக்கள் மன்றம்!

சென்னை: அரசியல், பதவி, புகழ் என எதையுமே எதிர்ப்பாராமல், தான் நடிக்க வந்த ஆரம்ப காலத்திலிருந்து தமிழக மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை விளம்பரமின்றி செய்து வருகிறார் ரஜினிகாந்த். மாணவர்களுக்கு கல்வி உதவி, ஏழை மக்களுக்கு மருத்துவ உதவி, இலவச திருமணங்கள், ஈழத் தமிழருக்காக போராட்டங்கள் மற்றும் நிதி உதவிகள், தானே புயல் நிவாரணம், சென்னை பெருவெள்ளத்தின்போது கோடிக்கணக்கான ரூபாய்க்கு உதவிகள், கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு கூட செய்யாத அளவுக்கு
 

தமிழகத்தின் தாகம் தீர்க்கும் ரஜினி மக்கள் மன்றம்!
சென்னை: அரசியல், பதவி, புகழ் என எதையுமே எதிர்ப்பாராமல், தான் நடிக்க வந்த ஆரம்ப காலத்திலிருந்து தமிழக மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை விளம்பரமின்றி செய்து வருகிறார் ரஜினிகாந்த். மாணவர்களுக்கு கல்வி உதவி, ஏழை மக்களுக்கு மருத்துவ உதவி, இலவச திருமணங்கள், ஈழத் தமிழருக்காக போராட்டங்கள் மற்றும் நிதி உதவிகள், தானே புயல் நிவாரணம், சென்னை பெருவெள்ளத்தின்போது கோடிக்கணக்கான ரூபாய்க்கு உதவிகள், கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு கூட செய்யாத அளவுக்கு நிவாரண உதவிகள், இலவச வீடுகள்… என ஏராளமான உதவிகளை தனி மனிதராக, தனது மக்கள் மன்றம் மூலம் தொடர்ந்து செய்து வருகிறார் ரஜினிகாந்த்.

இப்போது ரஜினி மக்கள் மன்றம் கையிலெடுத்திருப்பது தண்ணீர்ப் பிரச்சினை. தலையாய பிரச்சினை. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகம் கொடிய வறட்சியில் சிக்கியுள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னை மழையைப் பார்த்தே 190 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. இதிலிருந்து மக்களைக் காக்க, ரஜினியின் நேரடி உத்தரவின்பேரில் கடந்த மூன்று மாதங்களாக ரஜினி மக்கள் மன்றத்தினர் தண்ணீர் விநியோகத்தைத் தொடங்கினர். வறட்சியால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், வட சென்னை போன்ற பகுதிகளில் லாரிகளில் குடிநீரை ஏற்றிச் சென்று மக்களுக்கு இலவசமாக வழங்குகின்றனர். ஏதோ விளம்பரத்துக்காக செய்யாமல், தினசரி ஒரு அரசு செய்ய வேண்டிய வேலையை ரஜினி மன்றத்தினர் செய்கின்றனர்.

இவ்வளவு மாவட்டங்களில் இலவச தண்ணீர் வழங்கி வந்தாலும் தங்கள் மீது மீடியாவின் வெளிச்சம் படவில்லை என்ற ஆதங்கம் அவர்களுக்கு இருந்தாலும், அதைக் கடந்து தங்கள் சேவையைத் தொடர்கின்றனர்.

ஆனால் சமூக வலைத் தளங்களில் அவர்களின் பணிகள் பரவலாக மக்களைச் சேர்கின்றன. இதன் விளைவு இன்று #தாகம்_தீர்க்கும்_RMM என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆகி உள்ளது.

மற்ற மாவட்டங்களிலும் ரஜினி மக்கள் மன்றத்தினர் மக்களுக்கு குடிநீர் வழங்கும் முயற்சியில் உள்ளனர்.

மக்கள் மன்றத்தினரின் இந்த சேவையை ரஜினிகாந்த் கேட்டறிந்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

From around the web