திமுகவில் இணைந்த மதுரை ரஜினி மக்கள் மன்ற இளைஞரணியினர்!

மதுரை ரஜினி மக்கள் மன்றத்தின் இளைஞரணியைச் சேர்ந்த 50 பேர் திமுகவில் இணைந்துள்ளனர். இளைஞரணி நிர்வாகியாக இருந்த நாகேந்திரனுக்கும் ரஜினி மக்கள் மன்றத்தின் மற்ற நிர்வாகிகளுக்கும் இடையே புகைச்சல் இருந்து வந்ததாகத் தெரிகிறது. அதிருப்தியில் இருந்தவரை, திமுக எம்.எல்.ஏ மூர்த்தியிடம் வட்டச்செயலாளர் துரைப்பாண்டியன் அழைத்துச் சென்றுள்ளார். பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இளைஞரணியைச் சேர்ந்த 50 பேர் திமுகவில் ஐக்கியமாவது என்ற முடிவை எடுத்துள்ளனர். பின்னர் நாகேந்திரன் உள்ளிட்ட அனைவரும் மதுரை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான
 

திமுகவில் இணைந்த மதுரை ரஜினி மக்கள் மன்ற இளைஞரணியினர்!மதுரை ரஜினி மக்கள் மன்றத்தின் இளைஞரணியைச் சேர்ந்த 50 பேர் திமுகவில் இணைந்துள்ளனர். 

இளைஞரணி நிர்வாகியாக இருந்த நாகேந்திரனுக்கும் ரஜினி மக்கள் மன்றத்தின் மற்ற நிர்வாகிகளுக்கும் இடையே புகைச்சல் இருந்து வந்ததாகத் தெரிகிறது. அதிருப்தியில் இருந்தவரை, திமுக எம்.எல்.ஏ மூர்த்தியிடம் வட்டச்செயலாளர் துரைப்பாண்டியன் அழைத்துச் சென்றுள்ளார்.

பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இளைஞரணியைச் சேர்ந்த 50 பேர் திமுகவில் ஐக்கியமாவது என்ற முடிவை எடுத்துள்ளனர். பின்னர் நாகேந்திரன் உள்ளிட்ட அனைவரும்  மதுரை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான மூர்த்தியை சந்தித்து திமுகவில் இணைந்துள்ளனர். 

உடன் வண்டியூர் பகுதிச் செயலாளர் பாண்டியராஜா மற்றும் வட்டச் செயலாளர் துரைப்பாண்டியன், திமுக வழக்கறிஞர் செல்வகணேசன், பகுதி இளைஞரணி அமைப்பாளர் திருமலை ராஜா ஆகியோரும் இருந்துள்ளனர். புதிதாக இணைந்த நாகேந்திரனுக்கு இளைஞரணியில் பதவி கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

ரஜினி மக்கள் மன்றத்தில், குறிப்பாக இளைஞரணியில் அதிருப்தியுடன் இருப்பவர்களை வலை வீசிப் பிடிக்க திமுகவினர் ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது. ரஜினி மக்கள் மன்றம் மட்டுமல்லாமல் பிற கட்சியில் துடிப்பாக செயல்படும் இளைஞர்களை திமுகவுக்கு இழுப்பதற்காக உதயநிதி ஸ்டாலின்  வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மதுரையில் நடந்துள்ள இந்த இணைப்பு விழாவில் சமூக விலகல், முகக்கவசம் உள்ளிட்ட கொரொனா கால விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றும் தெரிகிறது.

A1TamilNews.com

 

From around the web