அண்ணனுக்கு ஆப்பரேஷன்… நலம் விசாரித்தார் ரஜினி!

பெங்களூரு: அண்ணன் சத்யநாராயணா கெய்க்வாட்- ஐ பெங்களூரு மருத்துவமனையில் நலம் விசாரித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். பெங்களூரில் வசித்து வரும் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணாவுக்கு கால் மூட்டு வலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார் என்றும், அங்கு அவருக்கு சிறிய ஆப்பரேஷன் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சிகிச்சைக்குப் பிறகு உடல்நலத்துடன் மருத்துவமனையிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். அவரை நலம் விசாரிக்க மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் ரஜினிகாந்த். மருத்துவரிடம் அண்ணனின் உடல்நலம் பற்றி விசாரித்து தெரிந்து கொண்டார். அவருடைய
 

அண்ணனுக்கு ஆப்பரேஷன்… நலம் விசாரித்தார் ரஜினி!

பெங்களூரு: அண்ணன் சத்யநாராயணா கெய்க்வாட்- ஐ பெங்களூரு மருத்துவமனையில் நலம் விசாரித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

பெங்களூரில் வசித்து வரும் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணாவுக்கு கால் மூட்டு வலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார் என்றும், அங்கு அவருக்கு சிறிய ஆப்பரேஷன் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிகிச்சைக்குப் பிறகு உடல்நலத்துடன் மருத்துவமனையிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். அவரை நலம் விசாரிக்க மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் ரஜினிகாந்த். மருத்துவரிடம் அண்ணனின் உடல்நலம் பற்றி விசாரித்து தெரிந்து கொண்டார்.

அவருடைய அண்ணன் மற்றும் மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்களுடன் சிரித்த முகத்துடன் கைகளை உயர்த்தி  அனைவருடனும் சேர்ந்து ரஜினி ‘தம்ப்ஸ் அப்’ காட்டுவது போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. ரஜினியுடன் மருத்துவமனை ஊழியர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்துள்ளனர்.

அண்ணனுக்கு ஆப்பரேஷன்… நலம் விசாரித்தார் ரஜினி!

ரஜினி ரசிகர்களுடன் மிகவும் நெருக்கமாக பழகும் சத்யநாராயணாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதை கேள்விப்பட்ட ரசிகர்கள், விரைவில் குணமடைய கோவில்களில் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

ஆப்பரேஷன் நல்ல பலன் அளித்துள்ளதால், சத்யநாராயணா வேகமாக குணமடைந்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் வீடு திரும்புவார் என்று தெரிகிறது.

 

From around the web