தூத்துக்குடிக்கு செல்லவில்லை…. ரஜினிக்கு நீதிபதி அருணா ஜெகதீசன் விலக்கு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரம் மற்றும் துப்பாக்கிச் சூடு குறித்த் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தில் நேரில் சாட்சியம் அளிக்க ரஜினிக்கு விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்து விட்டனர். கலவரத்திற்கு அவர்களே காரணம் என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார். இது குறித்து விளக்கம் கேட்பதற்காக நீதிபதி அருணா ஜெகதீசன் ரஜினிக்கு நேரில் ஆஜராகும் படி நோட்டீஸ் அனுப்பியிருந்தார். நேரில் ஆஜரானால் ரசிகர்கள் கூட்டம் கூடி விடும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும்.
 

தூத்துக்குடிக்கு செல்லவில்லை…. ரஜினிக்கு நீதிபதி அருணா ஜெகதீசன் விலக்கு!தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரம் மற்றும் துப்பாக்கிச் சூடு குறித்த் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தில் நேரில் சாட்சியம் அளிக்க ரஜினிக்கு விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.

போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்து விட்டனர். கலவரத்திற்கு அவர்களே காரணம் என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார். இது குறித்து விளக்கம் கேட்பதற்காக நீதிபதி அருணா ஜெகதீசன் ரஜினிக்கு நேரில் ஆஜராகும் படி நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

நேரில் ஆஜரானால் ரசிகர்கள் கூட்டம் கூடி விடும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும். எனவே எழுத்து மூலம் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன், நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ரஜினி தரப்பில் பதில் அளிக்கப்பட்டிருந்தது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ரஜினிகாந்த் நேரில் சாட்சியம் அளிக்க விலக்கு அளித்துள்ளார். எழுத்து மூலம் கேள்விகளுக்கு ரஜினி பதில் அளிப்பார். ரஜினி தூத்துக்குடிக்கு நேரில் வருவதற்கு காவல்துறைக்கும் விருப்பம் இல்லையாம்!.

தூத்துக்குடிக்கு செல்லவில்லை…. ரஜினிக்கு நீதிபதி அருணா ஜெகதீசன் விலக்கு!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தை அடுத்து எரிவாயு குழாய் பிரச்சனை தற்போது எழுந்துள்ளது. நஞ்செய் விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் கொண்டு செல்வதற்கு குலையன்கரிசல் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஊருக்கு நடுவே செல்வதை எதிர்த்து பொட்டல்காடு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அரசுக்கு சொந்தமான இடம் வழியாக மாற்றுப் பாதையில் கொண்டு செல்ல வலியுறுத்துகிறார்கள்.

ஸ்டெர்லைட் பிரச்சனை தொடர்பான விசாரணை என்பதால் ரஜினி நேரில் வருவதை ஆதரித்தும் எதிர்த்தும் மக்கள் திரளக்கூடும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று காவல்துறையினரும் கருதவதாகத் தெரிகிறது.

ரஜினி தூத்துக்குடிக்கு வராதது காவல்துறையினருக்கு கொஞ்சம் நிம்மதி தான் போலிருக்கு!

http://www.A1TamilNews.com

 

From around the web