ரஜினி ரசிகர்கள் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்.. பின்னணியில் திமுக?

சென்னை: ஒரே நேரத்தில் சுமார் 100 ரஜினி ரசிகர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெருமளவிலான எண்ணிக்கையில் ரஜினி ரசிகர்கள் சமூகத் தளங்களில் செயல்பட்டு வருகிறார்கள். சமூகத் தளங்களில் ரஜினிக்கு எதிரான கருத்துகளுக்கு பதிலடி கொடுப்பதுடன், அவ்வப்போது ரஜினி தொடர்பான ட்வீட்களை ட்ரெண்ட் செய்வதிலும் இவர்களின் பங்களிப்பு முக்கியமானது. #அன்றே_சொன்ன_ரஜினி உட்பட சமீபத்தில் #ரஜினிபயத்தில்திமுக வரை ஏராளமான ரஜினி ஆதரவு ட்வீட்கள் அகில இந்திய அளவிலும், உலக அளவிலும் ட்ரெண்டானது. இதன் பின்னணியில், ரஜினி மக்கள் மன்றத்தில் எந்தப்
 

சென்னை: ஒரே நேரத்தில் சுமார் 100 ரஜினி ரசிகர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பெருமளவிலான எண்ணிக்கையில் ரஜினி ரசிகர்கள் சமூகத் தளங்களில் செயல்பட்டு வருகிறார்கள். சமூகத் தளங்களில் ரஜினிக்கு எதிரான கருத்துகளுக்கு பதிலடி கொடுப்பதுடன், அவ்வப்போது ரஜினி தொடர்பான ட்வீட்களை ட்ரெண்ட் செய்வதிலும் இவர்களின் பங்களிப்பு முக்கியமானது.

ரஜினி ரசிகர்கள் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்.. பின்னணியில் திமுக?

#அன்றே_சொன்ன_ரஜினி உட்பட சமீபத்தில் #ரஜினிபயத்தில்திமுக வரை ஏராளமான ரஜினி ஆதரவு ட்வீட்கள் அகில இந்திய அளவிலும், உலக அளவிலும் ட்ரெண்டானது. இதன் பின்னணியில், ரஜினி மக்கள் மன்றத்தில் எந்தப் பதவியிலும் இல்லாத உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரஜினி ரசிகர்கள் இருக்கிறார்கள் எனத் தெரிகிறது.

தற்போது சுமார் 100 ரஜினி ரசிகர்களின் ட்விட்டர் கணக்குகளை ஒரே நாளில் முடக்கியுள்ளார்களாம்.  இதற்குப் பின்னணியில் தொலைக்காட்சி ஒன்றின் ட்விட்டர் கருத்துக் கணிப்பில் திமுகவை விட ரஜினி முந்தியதும், #ரஜினிபயத்தில்திமுக என்ற ஹேஷ்டேகுடனான ட்வீட்களும் காரணம் என்றும் கூறப்படுகிறது.

 

ஆயிரம் பேர்களுக்கு மேல் பின் தொடர்பவர்கள் உள்ள ட்விட்டர் கணக்குகளாகப் பார்த்து, அவதூறு புகார் அளித்து இந்த முடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் ரசிகர்கள் தரப்பில் கூறுகிறார்கள். இதற்கு திமுகவின் ஐடி பிரிவு தான் காரணம் என்றும் ரசிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டாலும் சோர்ந்து விடாமல் உடனடியாக இன்னொரு கணக்கைத் தொடங்கி விடுகிறார்கள். உடனடியாகவே ரசிகர்களும் அந்த புதிய கணக்கை பின் தொடர் ஆரம்பித்து விடுகிறார்கள்.

தேர்தல் களத்தில் தொண்டர்கள் பலத்தைக் காட்டும் காலம் மாறிப்போய், சமூகத் தளங்களில் பலத்தை காட்டும் அளவுக்கு தமிழக அரசியல் மாற்றம் கண்டுள்ளதா?. ட்விட்களும், ட்ரெண்டிங்களும் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையை மாற்றுமா?

– வணக்கம் இந்தியா

From around the web