ரஜினியை தரக்குறைவாகப் பேசிய பத்திரிகையாளர்… ‘வெச்சு செய்த’ ரசிகர்கள்!

சென்னை: சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், “தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் எப்போது வந்தாலும் அதில் தனது கட்சி போட்டியிடத் தயாராகவே உள்ளது,” என்றார். பலமுறை கேட்டபோதும், இந்த பதிலை அவர் உறுதியாகத் தெரிவித்தார். நேற்று தேர்தல் நாளில் ரஜினியின் ரசிகர்கள் #அடுத்த_ஓட்டு_ரஜினிக்கே என்ற ஹேஷ்டேகை இந்தியா முழுக்க ட்ரெண்டாக்கி அதிரவைத்தார்கள். இன்றும் சமூக வலைத்தளங்களில் அந்த ஹேஷ்டேக் வலம் வந்து கொண்டுள்ளது. இந்த சூழலில் அதுபற்றி ரஜினியிடமே கேள்வி கேட்டனர் செய்தியாளர்கள். அதற்கு பதிலளித்த
 

ரஜினியை தரக்குறைவாகப் பேசிய பத்திரிகையாளர்… ‘வெச்சு செய்த’ ரசிகர்கள்!சென்னை: சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், “தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் எப்போது வந்தாலும் அதில் தனது கட்சி போட்டியிடத் தயாராகவே உள்ளது,” என்றார். பலமுறை கேட்டபோதும், இந்த பதிலை அவர் உறுதியாகத் தெரிவித்தார்.

நேற்று தேர்தல் நாளில் ரஜினியின் ரசிகர்கள் #அடுத்த_ஓட்டு_ரஜினிக்கே என்ற ஹேஷ்டேகை இந்தியா முழுக்க ட்ரெண்டாக்கி அதிரவைத்தார்கள். இன்றும் சமூக வலைத்தளங்களில் அந்த ஹேஷ்டேக் வலம் வந்து கொண்டுள்ளது. இந்த சூழலில் அதுபற்றி ரஜினியிடமே கேள்வி கேட்டனர் செய்தியாளர்கள். அதற்கு பதிலளித்த ரஜினி, “அரசியல் ஆர்வமுள்ள எனது ரசிகர்களை நிச்சயம் ஏமாற்ற மாட்டேன். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறேன்,” என்றார்.

ரஜினியின் 2 நிமிடப் பேட்டி மீண்டும் வலைதளங்களில் வைரலானது. பல செய்திச் சேனல்கள் ரஜினி பேட்டி பற்றி விவாதங்களை நடத்தின. அதில் ஒரு சேனலில் ஆங்கிலப் பத்திரிகையாளர் ஒருவரிடம் கருத்துக் கேட்டது. அவர் உடனே, “ரஜினி களமிறங்கட்டும்… வச்சி செய்ய காத்திருக்கிறோம். 1996-லிருந்து அரசியலில் இருப்பதாகச் சொன்னார்… எங்கே இருந்தார்.. இப்போதுதான் திடீரன்று வந்திருக்கிறார்,” என்றெல்லாம் பேசியிருந்தார்.

ரஜினி ரசிகர்கள் மத்தியில் இந்த விமர்சனம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த பத்திரிகையாளரின் ட்விட்டர் பக்கத்தில் தங்கள் அதிருப்தியையும் எதிர்ப்பையும் பதிவு செய்தனர். உடனே அந்த பத்திரிகையாளர் ரசிகர் ஒருவரின் கருத்தை எடுத்துப் போட்டு, இந்த ரஜினிகாந்த் பக்தரின் சென்னை முகவரி கிடைக்குமா? எனக் கேட்டிருந்தார்.

முகவரி கிடைத்தால் என்ன செய்வீர்கள்… என ஆரம்பித்து, தங்கள் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

பல நடுநிலை பதிவர்கள், அந்த பத்திரிகையாளர் பேசியது தவறு என்றும், ரஜினிகாந்த் மீது வன்மத்தோடு கருத்து தெரிவித்துள்ளதாகவும் அவருக்கு பதிலளித்துள்ளனர்.

மற்றொரு ரசிகரின் கமெண்டை எடுத்துப் பதிவிட்டு, அதை சென்னை போலீசுக்கு டேக் செய்துள்ளார். அதற்கு பதிலளித்த ஒரு பதிவர், “இந்த கமெண்டில் எதற்காக சென்னை போலீசை டேக் செய்துள்ளீர்கள்? உங்கள் நோக்கம் என்ன என்று சென்னை போலீசுக்குத் தெரியாதா? ஒரு பத்திரிகையாளர் செய்கிற வேலையா இது… ஏன் மூன்றாம் தர நபர் மாதிரி நடந்து கொள்கிறீர்கள்?” என்று கேட்டுள்ளார்.

ரஜினி அரசியல் என்று வந்தாலே பல பத்திரிகையாளர்கள் ஊடகங்களில் வாய்க்கு வந்ததை அடித்து விடுகிறார்கள். உண்மை என்ன என்பது கூடத் தெரியாமல் ரஜினியை ஒருதலைப் பட்சமாக விமர்சிப்பது தொடர்கிறது. 

ரஜினியை விமர்சனம் செய்கிறேன் பேர்வழி என்று கிளம்பிய அந்தப் பத்திரிகையாளர், இப்போது அம்பலப்பட்டு நிற்கிறார். அவரது பின்னணி, அவர் எந்தக் கட்சிக்கு விசுவாசமாக செயல்படுகிறார் என்பதையெல்லாம் மக்களே இப்போது அவரது ட்விட்டர் பக்கத்திலேயே புட்டுப்புட்டு வைத்துள்ளனர்.

அந்த பத்திரிகையாளரின் ட்வீட்களிலிருந்து ஒரு சாம்பிள்:

 

From around the web