ஒரு ஊராட்சி முழுவதும் அரிசி வழங்கிய ரஜினி ரசிகர்! 900 குடும்பத்திற்கு தலா 10 கிலோ!!

பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வரும் நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் ரஜினி ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சுபகரக்குடிநீர், முகக்கவசம், மருத்துவப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் போன்றவற்றுடன் காய்கறி, மளிகை, அரிசி உள்ளிட்ட அன்றாடத் தேவைப் பொருட்களும் இந்த நிவாரணப் பணிகள் மூலம் வழங்கி வருகிறார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் ரஜினி ரசிகர் ஒருவர் ஒட்டு மொத்த கிராம மக்களுக்கும்,
 

ஒரு ஊராட்சி முழுவதும் அரிசி வழங்கிய ரஜினி ரசிகர்! 900 குடும்பத்திற்கு தலா 10 கிலோ!!ல்வேறு தன்னார்வ அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வரும் நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் ரஜினி ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுபகரக்குடிநீர், முகக்கவசம், மருத்துவப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் போன்றவற்றுடன் காய்கறி, மளிகை, அரிசி உள்ளிட்ட அன்றாடத் தேவைப் பொருட்களும் இந்த நிவாரணப் பணிகள் மூலம் வழங்கி வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ரஜினி ரசிகர் ஒருவர் ஒட்டு மொத்த கிராம மக்களுக்கும், குடும்பத்திற்கு தலா 10 கிலோ அரிசி வழங்கி அசத்தியுள்ளார். பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட சிறுவானூர் என்ற ஊராட்சியில் தான் இந்த நிவாரணப்பணிகள் நடந்துள்ளது.

ஒரு ஊராட்சி முழுவதும் அரிசி வழங்கிய ரஜினி ரசிகர்! 900 குடும்பத்திற்கு தலா 10 கிலோ!!

திருவள்ளூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் இணைச் செயலாளராக இருந்து வரும் சி.பி.ரமேஷ்குமார் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். 9 டன் அரிசியை, தலா 10 கிலோ மூட்டைகளாக 900 மூட்டைகள் வாங்கியுள்ளனர். 

பின்னர் ஊராட்சியின் ஒவ்வொரு பகுதிக்கும் எடுத்துச் சென்று, அவரவர் வீடுகளுக்கு அருகிலேயே இந்த அரிசி மூட்டைகளை கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்கியுள்ளார். உடன் ரஜினி மக்கள் மன்றத்தின் கிராம நிர்வாகிகளும் இருந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து உதவி செய்துள்ளனர்.

ஒரு ஊராட்சி முழுவதும் அரிசி வழங்கிய ரஜினி ரசிகர்! 900 குடும்பத்திற்கு தலா 10 கிலோ!!

சில இடங்களில் ஒவ்வொரு தெருவுக்குள்ளும் மினி லாரியை கொண்டு சென்று, வீட்டு அருகிலேயே அரிசி மூட்டைகளை கொடுத்த போது, அதை வாங்கிய பயனாளர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீண்டதூரம் அரிசி மூட்டைகளை சுமந்து செல்லும் சிரமத்தைக் கொடுக்க வேண்டாம் என்று மக்கள் வசிக்கும் அந்தந்த பகுதியிலேயே வினியோகம் செய்ததாக ரமேஷ்குமார் தெரிவித்தார்.

ஒரு கிராமம் முழுவதற்கும் இலவசமாக அரிசி வினியோகம் செய்துள்ளது அந்தப் பகுதியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

 

From around the web