தர்பாரை தாண்டுமா அண்ணாத்த? ஒரு ரஜினி ரசிகரின் எதிர்பார்ப்பு!

தர்பார் தலைவர் ரஜினியின் சமீபத்திய வெற்றிப்படம்… ஆம் அழுத்தியே சொல்கிறேன். மிகப்பெரிய வெற்றிப்படம் தான்.. அவரின் மேல் உள்ள காழ்புணர்ச்சி மற்றும் அவரின் நெருங்கி வரும் அரசியல் வருகை குறித்த பயத்தினால் பலர் கதறுவதை போல தர்பார் சுமாரான வெற்றிப்படம் கூட இல்லை.. சூப்பர்ஹிட் வெற்றிப்படம். இது வரை அதிக முறை ( 8 முறை )திரையரங்கில் நான் ரசித்த ஒரே படம். ஒரு முறை கூட சலிப்பைத் தரவில்லை. ரஜினி ரசிகன் என்பதான் நீ சலிப்படையவில்லை
 

தர்பாரை தாண்டுமா அண்ணாத்த? ஒரு ரஜினி ரசிகரின் எதிர்பார்ப்பு!ர்பார் தலைவர் ரஜினியின் சமீபத்திய வெற்றிப்படம்… ஆம் அழுத்தியே சொல்கிறேன். மிகப்பெரிய வெற்றிப்படம் தான்.. அவரின் மேல் உள்ள காழ்புணர்ச்சி மற்றும் அவரின் நெருங்கி வரும் அரசியல் வருகை குறித்த பயத்தினால் பலர் கதறுவதை போல தர்பார் சுமாரான வெற்றிப்படம் கூட இல்லை.. சூப்பர்ஹிட் வெற்றிப்படம்.

இது வரை அதிக முறை ( 8 முறை )திரையரங்கில் நான் ரசித்த ஒரே படம். ஒரு முறை கூட சலிப்பைத் தரவில்லை. ரஜினி ரசிகன் என்பதான் நீ சலிப்படையவில்லை என்று கூடச் சொல்லலாம். ஆனால் நான் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் புதிய ஆடியன்ஸின் உடன் தான் பார்த்தேன். படம் முடியும் போது நிறைவாக வெளியில் சென்றனர். இந்த பாக்ஸ் ஆபிஸ் கணக்குகளை தாண்டி நிறைவான ஆடியன்ஸை கொண்டே நான் வெற்றிப்படம் என்று கணிக்கிறேன்.

வேறு நடிகரின் படம் இதே நீண்ட விடுமுறையில் சோலோவாக வந்து ஆடியன்ஸை திருப்திபடுத்தியிருந்தால் வாரம் ஒரு ட்ராக்கர்ஸை விட்டு ட்வீட் போட செய்திருப்பார்கள்… ஆனால் தர்பார் படத்துக்கு தயாரிப்பாளரே ட்வீட் செய்யவில்லை என்பது தான் வெறுப்பரசியலின் உச்சம்.

சரி இனி தர்பார் அனுபவம். ரஜினியின் முந்தைய படமான பேட்ட தந்த அதே உற்சாகம் தர்பாரில் தொடர்ந்தது.. அதைவிட அதிகம் ரசித்தேன் என்பது தான் இத்தனை முறை தியேட்டர் செல்ல காரணம்.. பேட்டயும் மிகச்சிறந்த படம்.. தர்பார் இன்னும் கொண்டாட்டமான படம்..ரஜினிக்கு எழுபது வயது என்று அவரை தெரியாதவர்களிடம் கூறினால் நம்ப மறுப்பர். ஆம் அவ்ளோ அழகு.. முருகதாஸ் சந்தோஸ் சிவன் பியூர் மேஜிக் நிகழ்ந்த இடம்.. அடுத்தது அனிருத்தின் இசை.. பேட்ட படத்தை விட இசையின் வீச்சு குறைவு என்றாலும் சலைக்காத உற்சாகம் தந்தது.. இன்றோவிலிருந்து இறுதிவரை சும்மா கிழி தான்.

அறிமுகக்காட்சிக்கான பில்டப்பை டைட்டில் முதலே கொண்டு சென்று டின் டின் டின் என அனியின் பேக்ரவுண்ட்டில் அறிமுகமாகும் முதல் சீனிலேயே தெரிந்துவிட்டது படம் 80 களின் ரஜினியை காட்டவிருக்கிறது என்று. அடுத்து அடுத்து என செம ஸ்பீட் திரைக்கதை.70 களின் கதாநாயகன் இன்றைய யோகிபாபுவுடனும் காமெடியில் சிரிக்க வைக்கிறார் என்பதெல்லாம் ரஜினியால் மட்டுமே முடிந்த சாதனை. ரஜினி நிற்பது நடப்பது திரும்புவது முடி கோதுவது சிரிப்பது ஆடுவது உடைகள் என ரஜினி ரசிகனாக முருகதாஸ் படத்தில் வாழ்ந்திருக்கிறார்.

திகட்டாத அழகு.. தெவிட்டாத அமுது என ரஜினி மேஜிக் தான் படமெங்கும். அந்த ப்ரீ இண்டரவெல் ப்ளாக் திரைக்கதை இது வரை எந்த இந்திய படத்திலும் நிகழாத மேஜிக். அதே போல இண்டரவெல் முடிந்து வரும் அரை மணி நேரமும் அசத்தல் திரைக்கதை. என் தலைவனயாடா வயச வச்சு கிண்டல் பண்றீங்க.. பாருங்கடா என் தலைவன் வயசனு வச்சார் பாருங்க ஒரு ஜிம் சீன். படையப்பா பைட்டுக்கு குறையாத எனர்ஜி. கூஸ்பம்ப் என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே.

அதை ஒவ்வொரு ரஜினி ரசிகனும் உணர்ந்த இடம்.. அதே போல படமெங்கிலும் சின்ன சின்ன எக்ஸ்பிரன்சன்கள் வாவ் மொமண்டுகள் என அக்மார்க் 80 களின் ரஜினி படம். க்ளைமேக்சில் வில்லனிடம் கத்தியை வீசிவிட்டு பார்வையில் கனல் தெறிக்க ஒரு நடை நடப்பார் பாருங்கள். தலைவா காண கண் கோடி வேண்டும்.மொத்தத்தில் தர்பார் கடந்த பத்தாண்டுகளில் எனக்கு மிகவும் பிடித்த ரஜினி படம் என்று தான் சொல்வேன். பேட்டயை தாண்டியது தர்பார். தர்பாரை தாண்டுமா சிவா படம் என்பதற்கு ஐம் வெயிட்டிங்.

– ஜெ. ஜெயசீலன்

http://www.A1TamilNews.com

From around the web