ரஜினி பிறந்தநாள்.. கனேடிய ரஜினி ரசிகர்களின் புதுமையான கொண்டாட்டம்!

ட்ரோண்டோ: ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள அவருடைய ரசிகர்கள் ஒவ்வொரு விதமாக கொண்டாடி வருகிறார்கள். கனடாவில் பிறந்து வளர்ந்த தமிழர்களும் ரஜினியின் தீவிர ரசிகர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது. ட்ரோண்டோவில் பிறந்து வளர்ந்து அங்கேயே வசிக்கும் ஜலஜா, பனுஜன் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் சிறு வயதிலிருந்தே ரஜினி ரசிகர்களாம். ஒவ்வொரு ஆண்டும் ரஜினியின் பிறந்தநாளை வித்தியாசமாகக் கொண்டாடுவார்களாம். இந்த ஆண்டு புதுமையாக ஒரு வீடியோ மூலம் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல விரும்பியுள்ளார்கள்.
 
 
ட்ரோண்டோ:  ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள அவருடைய ரசிகர்கள் ஒவ்வொரு விதமாக கொண்டாடி வருகிறார்கள். கனடாவில் பிறந்து வளர்ந்த தமிழர்களும் ரஜினியின் தீவிர ரசிகர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது.
 
ட்ரோண்டோவில் பிறந்து வளர்ந்து அங்கேயே வசிக்கும் ஜலஜா, பனுஜன் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் சிறு வயதிலிருந்தே ரஜினி ரசிகர்களாம். ஒவ்வொரு ஆண்டும் ரஜினியின் பிறந்தநாளை வித்தியாசமாகக் கொண்டாடுவார்களாம். இந்த ஆண்டு புதுமையாக ஒரு வீடியோ மூலம் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல விரும்பியுள்ளார்கள்.
 
ரஜினிகாந்த் நடித்த படங்களின் பிரபலமான பாடல்களை ஒரு கலகலப்பான கருத்துடன் படமாக்கியுள்ளார்கள். மாப்பிள்ளை என்று பெயரிடப்பட்டுள்ள இந்த 6 நிமிட வீடியோவில், ஒரு இளைஞனுக்கு, அவருடைய பெற்றோர் பெண் பார்த்து, படங்களை மொபைல் போனில் அனுப்புகிறார்கள்.  காலையில் படுக்கையிலிருந்து எழுந்த அந்த இளைஞன் ஒவ்வொரு பெண்ணையும், ரஜினி படங்களின் வெவ்வேறு ஹீரோயினாக நினைத்து கனவில் டூயட் பாடிப் பார்க்கிறார். கடைசியில் அவருடைய அம்மா யாரை தேர்வு செய்துள்ளாய் என கேட்கவும் அங்கே நீலாம்பரியாக காட்சி அளிக்கிறார் மணப்பெண். 
 
இந்த கருத்தை , தர்மதுரையில் மாசி மாசம், தளபதியில் சுந்தரி நீ கண்ணால் சேதி, பாட்ஷா படத்தில் ஸ்டைலு ஸ்டைலு தான், வீரா படத்தில் மாடத்திலே கன்னி,  கடைசியில் காலா படத்தில் வாடி என் தங்கச்சிலை என்று முடிகிறது. நடனம் அமைத்துள்ள ஜலஜா, சிறுவயதிலிருந்தே நாட்டியம் பயின்று, நடனம் அமைத்து வருகிறார். ஆட்டிசம் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான அமைப்பில் பணியாற்றி வரும் ஜலஜா, பிற அமைப்புகளில் தன்னார்வப்பணிகளும் ஆற்றி வருகிறார். சிறு வயதிலிருந்தே தீவிர ரஜினி ரசிகராம்.
 
மாப்பிள்ளையாக நடித்த பனுஜன், உடன் நடித்தவர்கள், கேமிரா என  குழுவினர் அனைவருமே ரஜினி ரசிகர்கள் தானாம். உள்ளூர் தமிழ் அமைப்புகள் மூலம் தன்னார்வப் பணிகள் செய்து வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்கள்.
 
2.0 படம் பற்றி கூறும் போது, தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு கொண்டு செல்லும் முதல் படம். கருப்பு வெள்ளை முதல் அனிமேஷன், 3டி என அனைத்து தொழில்நுட்பங்களிலும் நடித்த ஒரே தமிழ் நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே. இந்த படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. நண்பர்களுடம் தியேட்டரில் கண்டு மகிழ்ந்தோம். திரைப்பட ஆர்வம் உள்ளவர்களுக்கு, 2.0 மிகப்பெரிய உந்துதலாக இருக்கிறது என்று பனுஜனும், ஜலஜாவும் கூறினார்கள்.
 
பேட்ட படம் வேற லெவலில் இருக்கும், பாடல்கள் அருமையாக இருக்கு, எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றும் தெரிவித்தார்கள்.
 
உலகின் கிழக்கே ஜப்பானியர்கள் ஒரு புறம் ரஜினிக்கு ரசிகர்கள் என்றால், நேர் மேற்கே கனடாவிலேயே பிறந்து வளர்ந்த தமிழ் வம்சாவளியினரும் தீவிர ரஜினி ரசிகர்கள் என்பது ஆச்சரியமான ஒன்று தான்.
 
ரஜினிகாந்த் அடிக்கடி சொல்வது போல், இது எல்லாம் அவருக்கு கிடைத்துள்ள ஆண்டவன் அருளால் தான் போலும்!
 
 

From around the web