அஜித் தலை… ரஜினி மலை… கட்சி மாறுகிறாரா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?

நடிகர் விஜய் மீதான வருமான வரி ரெய்டு குறித்து கருத்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடன் கருத்து கேட்டபோது, அவரெல்லாம் ஒரு பொருட்டல்ல, அஜித் தலை, ரஜினி மலை என்று கூறியுள்ளார். சமீபகாலமாக சர்ச்சைக்குரிய வகையிலும் தீவிர இந்துத்வாவை ஆதரிக்கும் வகையிலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்து வருகிறது. தென் மாவட்டங்களில் வலது கரம் போல் செயல்பட்டு வரும் ராஜேந்திர பாலாஜியை, அமெரிக்காவுக்குச் செல்லும் போது, உடன் அழைத்துச் சென்றிருந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக அமைச்சர்கள்
 

அஜித் தலை… ரஜினி மலை… கட்சி மாறுகிறாரா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?டிகர் விஜய் மீதான வருமான வரி ரெய்டு குறித்து கருத்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடன் கருத்து கேட்டபோது, அவரெல்லாம் ஒரு பொருட்டல்ல,  அஜித் தலை, ரஜினி மலை என்று கூறியுள்ளார்.

சமீபகாலமாக சர்ச்சைக்குரிய வகையிலும் தீவிர இந்துத்வாவை ஆதரிக்கும் வகையிலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்து வருகிறது. தென் மாவட்டங்களில் வலது கரம் போல் செயல்பட்டு வரும் ராஜேந்திர பாலாஜியை, அமெரிக்காவுக்குச் செல்லும் போது, உடன் அழைத்துச் சென்றிருந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் மத்தியில் எப்போதும் ரஜினிக்கு ஆதரவான கருத்துக்களையே கூறி வரும் ராஜேந்திர பாலாஜி, கமல் ஹாசன் பற்றி கடுமையாகவும் விமர்சித்து வந்துள்ளார். தற்போது விஜய்க்கு எதிராக, அஜீத்தை உயர்வாகப் பேசியுள்ளார்.

இந்து தீவிரவாதம் உருவாகும் என்று ராஜேந்திர பாலாஜி கூறியிருந்ததை, அதிமுகவின் சக அமைச்சர்கள் ரசிக்கவில்லை. அமைச்சரவைக் கூட்டத்திலே சலசலப்பு ஏற்பட்டது. ராஜேந்திர பாலாஜியிடம், பதவியிலிருந்து நீக்க முடியாது என்று நினைக்கிறீர்களா என்று முதலமைச்சர் கேட்டதாகவும், நீக்கித்தான் பாருங்களேன் என்று சவால் விடும் தொனியில் ராஜேந்திர பாலாஜி பேசியதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

இந்நிலையில் நள்ளிரவில் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசிய அதிமுக அமைச்சர்கள் என்று ஒரு விவகாரமும் அடிபடுகிறது. அதில் ராஜேந்திர பாலாஜி தான் முக்கியமானவராக இருக்கலாமோ என்ற கேள்வியும் எழுகிறது. இது வரையிலும் வெளிப்படையாக ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்காத அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்டத்தில், அதிமுகவின் முக்கியத் தலைவராக இருக்கிறார்.

ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத மாற்றுக்கட்சி அரசியல்வாதிகளை தன் பக்கம் இழுப்பதற்கு ரஜினிகாந்த் வியூகம் வகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ரஜினி கட்சியில் சேரப்போகிறோம் என்ற எண்ணத்தில் தான் ராஜேந்திர பாலாஜி இப்படி நடந்து கொள்கிறாரா? என்ற எண்ணம் அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது

http://www.A1TamilNews.com

From around the web