ராஜா ரங்குஸ்கி விமர்சனம்

காதலுக்காக கொலைப்பழியில் சிக்கும் சாதாரண ஒரு போலீஸ் இளைஞர், அந்த பழியிலிருந்து எப்படித் தப்பிக்கிறான் என்பதுதான் ராஜா ரங்குஸ்கி. அதென்ன ராஜா ரங்குஸ்கி? ஒன்றுமில்லை… ராஜா என்பது நாயகன் பெயர். ரங்குஸ்கி என்பது நாயகியின் பெயர்! ஒரு த்ரில்லர் படத்துக்கு தேவையான திரைக்கதையை ஓரளவு பக்காவாகவே உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் தரணிதரன். கதைக்குத் தேவையில்லாத எந்த விஷயத்தையும் திணிக்காததால், காட்சிகள் நேர்த்தியாக அமைந்துள்ளன. யார் கொலையாளி என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு நிறைய ட்விஸ்டுகள். மெட்ரோ படத்தில் நடித்த
 

காதலுக்காக கொலைப்பழியில் சிக்கும் சாதாரண ஒரு போலீஸ் இளைஞர், அந்த பழியிலிருந்து எப்படித் தப்பிக்கிறான் என்பதுதான் ராஜா ரங்குஸ்கி.

அதென்ன ராஜா ரங்குஸ்கி? ஒன்றுமில்லை… ராஜா என்பது நாயகன் பெயர். ரங்குஸ்கி என்பது நாயகியின் பெயர்!

ஒரு த்ரில்லர் படத்துக்கு தேவையான திரைக்கதையை ஓரளவு பக்காவாகவே உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் தரணிதரன்.

கதைக்குத் தேவையில்லாத எந்த விஷயத்தையும் திணிக்காததால், காட்சிகள் நேர்த்தியாக அமைந்துள்ளன. யார் கொலையாளி என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு நிறைய ட்விஸ்டுகள்.

மெட்ரோ படத்தில் நடித்த சிரிஷ்தான் ஹீரோ. ரங்குஸ்கியாக ஹீரோயின் சாந்தினி. இருவருமே தங்கள் பாத்திரங்களை நன்றாகவே செய்துள்ளனர். சாந்தினிக்கு படத்தில் கூடுதல் முக்கியத்துவம். அதை உணர்ந்து நடித்துள்ளார்.

கல்லூரி வினோத் அவ்வப்போது படத்தை கலகலப்பாக்குகிறார். அனுபமா குமார் ஓகே. ஆனால் அந்த ஜெயக்குமார் ஜானகிராமன்தான் ஓவர் ஆக்டிங்.

முதல் பாதி நல்ல ஷார்ப்பாக உள்ளது. இரண்டாம் பாதியில் பாடல்கள் வேகத்தைக் குறைக்கின்றன.

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும், அந்த பட்டுக் குட்டி செல்லம் பாடலும் அருமை. ஒளிப்பதிவும் பிரமாதம்.

எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் போனால், திருப்தியான த்ரில்லர் பார்த்துவிட்டு வரலாம்.

Rating: 3.0/5.0

 

From around the web