இதான் ராஜ ராஜா சோழன் சமாதியா? – உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து ஆய்வு தொடங்கியது!

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது உடையாளூர், இங்குதான் தமிழ் மன்னர்களில் ஒப்பற்றவனாகத் திகழ்ந்த ராஜராஜ சோழனின் சமாதி இருப்பதாகக் கூறி பலரும் ஒரு பாழடைந்த நிலையில் உள்ள சமாதி மற்றும் லிங்கத்தை வழிபட்டு வருகின்றனர். அங்கே ராஜராஜன் சமாதி இருப்பதற்கான ஆதாரங்கள் என சில பழைய கல்வெட்டுகளையும் காட்டுகின்றனர். இந்த நிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராஜராஜ சோழன் சமாதியைக் கண்டெடுத்து பராமரிப்பு செய்யவும், வங்க்கடலில் சிலை
 

 இதான் ராஜ ராஜா சோழன் சமாதியா? – உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து ஆய்வு தொடங்கியது!
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது உடையாளூர், இங்குதான் தமிழ் மன்னர்களில் ஒப்பற்றவனாகத் திகழ்ந்த ராஜராஜ சோழனின் சமாதி இருப்பதாகக் கூறி பலரும் ஒரு பாழடைந்த நிலையில் உள்ள சமாதி மற்றும் லிங்கத்தை வழிபட்டு வருகின்றனர். அங்கே ராஜராஜன் சமாதி இருப்பதற்கான ஆதாரங்கள் என சில பழைய கல்வெட்டுகளையும் காட்டுகின்றனர்.

இந்த நிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராஜராஜ சோழன் சமாதியைக் கண்டெடுத்து பராமரிப்பு செய்யவும், வங்க்கடலில் சிலை எழுப்பவும் பொது நல வழக்கு தொடர்ந்து இருந்தார். விசாரணை செய்த நீதிபதிகள் அரசுத் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

அரசு தரப்பில், ராஜராஜ சோழன் சமாதி இருந்ததற்கான அடையாளம் இல்லை என்று கூறப்பட்டது. மேலோட்டமாக பதில் சொல்லாமல், தொல்லியில் துறை மூலம் நவீன ஆராய்ச்சிகள் செய்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் உத்தரவிட்டனர்.

அதைத் தொடர்ந்து தமிழக தொல்லியில் துறை சார்பில் கும்பகோணம் அருகே உள்ள உடையாளூரில் ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. நவீன காமிராக்கள் உதவியுடன் பூமிக்கடியில் ஆய்வு செய்யும் பணிகளை தொல்லியல் துறை இயக்குனம் சிவானந்தம் தலைமையில் செய்து வருகிறார்கள். ஆளில்லா குட்டி விமானம் மூலம் காமிராக்களில் படம் பிடிக்கப்பட்டது.

கல்வெட்டு ஆராய்சிகள், மண்ணுக்கடியில் உள்ள கட்டிடங்கள், பொருட்களின் காலம் போன்ற ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப் படுகிறது.

ஆராய்ச்சிகளின் முடிவில், ராஜராஜ சோழன் சமாதி கண்டு பிடிக்கப்படுமா என்ற கேள்விக்கு விடை தெரியவரும்.

– வணக்கம் இந்தியா

From around the web