‘ஓட்டுகளுக்காக  இந்து முஸ்லீம் மதப்பிரச்சனையை உருவாக்கும் பாஜக’ – ராஜ் தாக்கரே அட்டாக்!

விக்ரோலி: இந்தி தேசியமொழி இல்லை என்று இந்திக்காரர்களிடமே அதிரடியாகச் சொன்ன ராஜ் தாக்கரே பாஜக மதத்தைப் பயன்படுத்தி ஓட்டு வாங்கப் பார்க்கிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார். மும்பை புறநகர்ப்பகுதியான விக்ரோலியில் பேசிய மஹாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, “பாஜக அரசுக்கு வேறு பிரச்சனைகள் பற்றி பேச எதுவும் இல்லாததால், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே பிரச்சனைகளை உருவாக்கப் பார்க்கிறார்கள். ராமர் கோவில் விவகாரத்தில் கலவரத்தை இந்த அரசாங்கம் உருவாக்கக் கூடும். ராமர் கோவில்
 
விக்ரோலி: இந்தி தேசியமொழி இல்லை என்று இந்திக்காரர்களிடமே அதிரடியாகச் சொன்ன ராஜ் தாக்கரே பாஜக மதத்தைப் பயன்படுத்தி ஓட்டு வாங்கப் பார்க்கிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
 
மும்பை புறநகர்ப்பகுதியான விக்ரோலியில் பேசிய மஹாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, “பாஜக அரசுக்கு வேறு பிரச்சனைகள் பற்றி பேச எதுவும் இல்லாததால், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே பிரச்சனைகளை உருவாக்கப் பார்க்கிறார்கள். 
 
ராமர் கோவில் விவகாரத்தில் கலவரத்தை  இந்த அரசாங்கம் உருவாக்கக் கூடும். ராமர் கோவில் கட்டுவது எனக்கு உடன்பாடு தான். ஆனால் இப்போது அவசரமாக கட்டத் தேவையில்லை. பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு கட்டிக் கொள்ளலாம்.” என்று கூறியுள்ளார்.
 
மேலும், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அனுமார் தலித் இனத்தைச் சார்ந்தவர் என்று கருத்து தெரிவித்துள்ளதற்கு ராஜ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
மஹாராஷ்ட்ரா வேலைவாய்ப்புகள் மஹாராஷ்ட்ரா இளைஞர்களுக்கே, உத்தரபிரதேச மாநில வேலைவாய்ப்புகள் உத்தர பிரதேச இளைஞர்களுக்கே என்ற கருத்தில் மாறுபாடு இல்லை. வெளி மாநிலத்தவர்களால் மஹாராஷ்ட்ராவில் வேலைவாய்ப்பு பிரச்சனைகள் ஏற்படுகிறது. வேலை இல்லாத்திண்டாட்டம் உருவாகியுள்ளது என்றும் ராஜ் தாக்கரே கூறியுள்ளார்.
 
பாஜக மீது தொடர்ந்து அதிரடியாக குற்றம் சாட்டி வரும் ராஜ் தாக்கரேவுக்கு, ஆதரவு பெருகி வருகிறது. வரப்போகும் தேர்தலில் காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் சேருவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 
மஹாராஷ்ட்ராவில் பாராளுமன்றத்துடன் சட்டமன்றத்திற்கும் சேர்த்து தேர்தல் வர உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக அங்கு பாஜக தலைமையில் ஃப்ட்னாவிஸ் முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். 
 
பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்டி வரும் ராகுல்காந்தி,  மஹாராஷ்ட்ராவின் அதிரடி அரசியல்வாதி ராஜ் தாக்கரேவையும் வளைப்பாரா என்ற எதிர்பார்ப்புகளும் உருவாகி உள்ளது.
 
– வணக்கம் இந்தியா

From around the web