இனிமேல் எங்க கிட்ட அனுமதி வாங்கிட்டு தான் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வரனும்! ராஜ் தாக்கரே அதிரடி!!

மஹாராஷ்ட்ரா மராட்டியர்களுக்கே என்ற கொள்கை முழக்கத்துடன் செயல்பட்டு வரும் மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே, மஹாராஷ்ட்ராவுக்குள் வருவதற்கு முன்வெளிமாநிலத்தவர்கள் அனுமதி பெற வேண்டும் என்று கூறியுள்ளார் “வேலைதேடி மும்பை வரும் வெளிமாநிலத்தவர் மஹாராஷ்ட்ரா மாநில அரசு, போலீஸ் , மற்றும் மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியிடடம் முன் அனுமதி பெறவேண்டும். வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறியதால் உண்டான வர்த்தக, தொழில்சாலை பணி காலியிடங்களில் மராத்தி இளைஞர்களை சேர்க்க வேண்டும் என்று அறிவித்துள்ளார். ஹரியானா மாநிலத்தில் இருந்து வடகிழக்கு
 
இனிமேல் எங்க கிட்ட அனுமதி வாங்கிட்டு தான் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வரனும்! ராஜ் தாக்கரே அதிரடி!!மஹாராஷ்ட்ரா மராட்டியர்களுக்கே என்ற கொள்கை முழக்கத்துடன் செயல்பட்டு வரும் 
மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே, மஹாராஷ்ட்ராவுக்குள் வருவதற்கு முன்வெளிமாநிலத்தவர்கள்  அனுமதி பெற வேண்டும் என்று கூறியுள்ளார்

“வேலைதேடி  மும்பை வரும் வெளிமாநிலத்தவர்  மஹாராஷ்ட்ரா மாநில அரசு, போலீஸ் , மற்றும் மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியிடடம்  முன் அனுமதி பெறவேண்டும். வெளிமாநில தொழிலாளர்கள்  வெளியேறியதால்  உண்டான வர்த்தக, தொழில்சாலை பணி காலியிடங்களில்  மராத்தி இளைஞர்களை  சேர்க்க வேண்டும்  என்று அறிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தில் இருந்து வடகிழக்கு மாநிலத்துக்கு சென்ற ரயிலில் இருந்த தொழிலாளர்கள் பீகார் மாநிலம் தன்பூர் ரயில்நிலையத்தில் தாக்கப் பட்டனர்.  ம.பி.யில் இருந்து நாகாலாந்துக்கு பஸ்ஸில் சென்ற தொழிலாளர்கள் பீகாரில் தாக்கப் பட்டனர்.

மஹாராஷ்ட்ராவுக்குள் வருவதற்கு முன் அனுமதி வேண்டும் என்று ராஜ் தாக்கரே போர்க்கொடி தூக்கியுள்ளார். இந்த சம்பவவங்களை வைத்து பார்க்கும்போது எல்லா மாநில முதல்வர்களும் சொந்த மாநிலத்திலேயே, தங்கள் தொழிலாளர்களுக்குத் தேவையான  வேலைவாய்ப்பை உருவாக்குவது தான் நீண்ட கால தீர்வாக இருக்க முடியும்.

புலம் திரும்பும் தமிழக தொழிலாளர்களுக்கும் தமிழ்நாட்டிலேயே  வேலைஉத்தரவாதம், அளிப்பதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

–  வி.எச்.கே. ஹரிஹரன்
 

From around the web