தொடரும் மழை! பொதுமக்கள் கடும் அவதி!

டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கிய பருவ மழை பரவலாக குறிப்பாக தென் தமிழகத்தில் கொட்டித் தீர்த்தது. சில இடங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இயல்பு வாழ்வு திரும்பி வரும் நிலையில் நேற்று முதலே மீண்டும் சென்னை உள்பட தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி,தஞ்சாவூர் மற்றும் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை முதலே மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நாகப்பட்டினம்
 

தொடரும் மழை! பொதுமக்கள் கடும் அவதி!

டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கிய பருவ மழை பரவலாக குறிப்பாக தென் தமிழகத்தில் கொட்டித் தீர்த்தது. சில இடங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இயல்பு வாழ்வு திரும்பி வரும் நிலையில் நேற்று முதலே மீண்டும் சென்னை உள்பட தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி,தஞ்சாவூர் மற்றும் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை முதலே மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ,வேதாரண்யம், திருதுறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் இரவு வரை தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுசேரியில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழையும், ஒரு சில மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

https://www.A1TamilNews.com

From around the web