ரயில்நிலைய ப்ளாட்பாரம் டிக்கெட் உயர்வு! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

ரயிலில் பயணம் செய்பவர்களை SENT OFF செய்யவும், வருபவர்களை வரவேற்கவும் ரயில் நிலையம் வரை செல்பவர்கள் உண்டு. லக்கேஜ் அதிகம் இருக்கும் போது ஆட்டோ மேன் முதல் வியாபாரிகள் வரை அனைவரும் PLATFORM ல் அடைக்கலம் தேடுவார்கள். குறைந்த சேவைகள் மட்டுமே நடைபெற்று வரும் எக்மோர் ரயில் நிலையங்களிலேயே இந்த நிலை எனில் 24 மணி நேரமும் இடைவிடாது இயங்கி வரும் செண்ட்ரல் ரயில் நிலையத்தில் சாதாரண நாட்களிலேயே கூட்டம் இருக்கும். வரப்போகிற விடுமுறைக் காலமான கோடையில்
 

ரயில்நிலைய  ப்ளாட்பாரம்  டிக்கெட் உயர்வு! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

யிலில் பயணம் செய்பவர்களை SENT OFF செய்யவும், வருபவர்களை வரவேற்கவும் ரயில் நிலையம் வரை செல்பவர்கள் உண்டு. லக்கேஜ் அதிகம் இருக்கும் போது ஆட்டோ மேன் முதல் வியாபாரிகள் வரை அனைவரும் PLATFORM ல் அடைக்கலம் தேடுவார்கள்.

குறைந்த சேவைகள் மட்டுமே நடைபெற்று வரும் எக்மோர் ரயில் நிலையங்களிலேயே இந்த நிலை எனில் 24 மணி நேரமும் இடைவிடாது இயங்கி வரும் செண்ட்ரல் ரயில் நிலையத்தில் சாதாரண நாட்களிலேயே கூட்டம் இருக்கும்.

வரப்போகிற விடுமுறைக் காலமான கோடையில் அலைமோதும் மக்கள் கூட்டம். இதைத் குறைக்கும் வகையிலும் ரயிலில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பிற்காகவும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை 3மாத காலத்திற்கு நடை மேடை டிக்கெட் விலை உயர்த்தப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தற்போது 10ரூபாயாக இருக்கும் டிக்கெட் விலை 5ரூபாய் கட்டண உயர்வுடன் ரூபாய் 15ஆக வசூலிக்கப்படும் எனவும் ஜூலை 1ம் தேதி முதல் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் துவங்கியவுடன் மறுபடியும் ரூபாய்10 மட்டுமே நடைமேடை கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

https://www.A1TamilNews.com

From around the web