சிபிஐ அலுவலகம் முற்றுகை – டெல்லியில் ராகுல் காந்தி கைது

டெல்லி: சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா கட்டாய விடுப்பில் செல்ல எடுக்கப்பட்ட நடவடிக்கையை கண்டித்து இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் உள்ள சிபிஐ அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். அதேபோல, நாடு முழுவதும் உள்ள சிபிஐ அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் ஆர்ப்பட்டத்தை தொடங்கியது. டெல்லி சிபிஐ அலுவலகம் முன்பு ராகுல் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இருந்தது. அதன்படி இன்று சிபிஐ தலைமை அலுவலகம் நோக்கி ராகுல் காந்தி
 

சிபிஐ அலுவலகம் முற்றுகை – டெல்லியில் ராகுல் காந்தி கைதுசிபிஐ அலுவலகம் முற்றுகை – டெல்லியில் ராகுல் காந்தி கைது
டெல்லி: சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா கட்டாய விடுப்பில் செல்ல எடுக்கப்பட்ட நடவடிக்கையை கண்டித்து இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் உள்ள சிபிஐ அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். அதேபோல, நாடு முழுவதும் உள்ள சிபிஐ அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் ஆர்ப்பட்டத்தை தொடங்கியது. டெல்லி சிபிஐ அலுவலகம் முன்பு ராகுல் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இருந்தது.

அதன்படி இன்று சிபிஐ தலைமை அலுவலகம் நோக்கி ராகுல் காந்தி தலைமையில் பேரணிநடைபெற்றது. இதில் காங்கிரஸ் மற்றும் தோழமைக் கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும் திரளாகப் பங்கேற்றனர். டெல்லியில் தயால் சிங் கல்லூரியில் இருந்து புறப்பட்ட பேரணி சிபிஐ தலைமையகத்தில் முடிவடைந்தது.

பின்னர் சிபிஐ தலைமையகத்தின் முன்பாக, ராகுல்காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஐ அமைப்பை மத்திய அரசு வளைக்கப் பார்ப்பதாகக் கூறி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.சி.பி.ஐ. தலைமையகங்களுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள தடுப்புக்களை உடைக்க காங்கிரஸ் தொண்டர்கள் முயன்றனர்.

இதை தொடர்ந்து மத்திய அரசு நிறுவனங்களை முற்றுகையிட்டதாக ராகுல் காந்தி மற்றும் பல சக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதுபோல் லக்னோ, பெங்களூரு மற்றும் பாட்னா உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகங்களுக்கு அருகே ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. சண்டிகரில் காங்கிரஸ் தொழிலாளர்களுக்கு எதிராக தண்ணீர் பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டன.

– வணக்கம் இந்தியா

From around the web