ப்யார் ப்ரேமம் காதல் – விமர்சனம்

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா முதல் முறை ஒரு தயாரிப்பாளராக அவதாரமெடுத்துள்ள படம் இந்த ப்யார் ப்ரேமம் காதல். ஐடி நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் ஹரீஷ் கல்யாண் ரொம்ப வெகுளித்தனமான இளைஞன். பல மாதங்களாக பக்கத்து நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் ரைசாவை ஒருதலையாக ரூட் விடுகிறார். திடீரென்று ரைசா, ஹரீஷ் வேலைப் பார்க்கும் நிறுவனத்தில், அதுவும் ஹரீஷுக்கு பக்கத்து சீட்டுக்கே வந்துவிடுகிறார். இருவரும் பழக ஆரம்பிக்கிறார்கள். அது படுக்கை வரைப் போகிறது. அப்போது காதலைச்
 
 
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா முதல் முறை ஒரு தயாரிப்பாளராக அவதாரமெடுத்துள்ள படம் இந்த ப்யார் ப்ரேமம் காதல். 
 
ஐடி நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் ஹரீஷ் கல்யாண் ரொம்ப வெகுளித்தனமான இளைஞன். பல மாதங்களாக பக்கத்து நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் ரைசாவை ஒருதலையாக ரூட் விடுகிறார். திடீரென்று ரைசா, ஹரீஷ் வேலைப் பார்க்கும் நிறுவனத்தில், அதுவும் ஹரீஷுக்கு பக்கத்து சீட்டுக்கே வந்துவிடுகிறார். இருவரும் பழக ஆரம்பிக்கிறார்கள். அது படுக்கை வரைப் போகிறது. அப்போது காதலைச் சொல்கிறார் ஹரீஷ். ஆனால் திருமணம் செட் ஆகாது என்று சொல்லிவிட்டு, பழக்கத்தை வேண்டுமானால் தொடரலாம் என்கிறார் ரைசா. 
 
ஹரீஷின் அம்மா ரேகாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, உடனடியாக ஹரீஷுக்கு திருமணம் பண்ணிப் பார்க்க ஆசைப்படுகிறார்கள். வேறு பெண்ணைப் பார்த்தார்களா? ரைசாவுடனான ஹரீஷின் காதல் திருமணத்தில் முடிந்ததா? என்பதையெல்லாம் தியேட்டரில் பார்த்துக் கொள்ளுங்கள்.
 
முழுக்க முழுக்க காதல் படம். இன்னும்கூட ஜாலியாகச் சொல்லியிருக்க முடியும். ஆனால் இதுவே போதும் என நினைத்துவிட்டார் புது இயக்குநர் இளன். 
 
ஹரீஷ் – ரைசா இருவருமே நிஜமான காதலர்களாகவே மாறியிருக்கிறார்கள். பார்ப்பவர்களே வெட்கப்படும் அளவுக்கு அப்படி ஒரு நெருக்கம். அதுவே ஒருகட்டத்தில் கொஞ்சம் திகட்டவும் செய்கிறது. பிக்பாஸில் பார்த்ததை விட இந்தப் படத்தில் செம க்யூட்டாக இருக்கிறார் ரைசா.
 
ஹரீஷ் – ரைசா ஜோடிக்கு ஏத்த மூடியாக யுவனின் இசை. சில பாடல்களில் வேறு ஏதோ சாயல் தெரிந்தாலும், கேட்க வைத்துவிடுகிறார். அதுதான் யுவன் ஸ்பெஷல். 
 
ஆனந்த்பாபு ரொம்ப நாள் கழித்து ஸ்கோர் செய்திருக்கிறார். 
 
ஹரிஷூக்கு அட்வைஸ் பண்ணும் முனிஷ்காந்த் காமெடி ஓகே. ஆனால் அவரை இன்னும் கூட நன்றாகப் பயன்படுத்தியிருக்கலாம்.
 
ராஜா பட்டாச்சார்யாவின் ஒளிப்பதிவு கலர்ஃபுல். இந்த மாதிரிப் படங்களுக்கு இப்படித்தான் காட்சிகள் இருக்க வேண்டும் என்பதில் இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் தெளிவாக இருந்திருக்கிறார்கள். 
 
காதல் படம்… ஜாலியான காட்சிகள்… கொஞ்சூண்டு கருத்து. படத்தை நம்பி பார்க்கலாம்!
 
Rating: 2.5/5.0
 
 
– வணக்கம் இந்தியா
 

From around the web