கை துண்டிக்கப்பட்ட உதவி சப் இன்ஸ்பெக்டருக்கு ஆப்பரேஷன் சக்சஸ் – மருத்துவர்கள் சாதனை!

ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் வேளையில் பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா நகரத்தில், உதவி சப் இன்ஸ்பெக்டர் ஹர்ஜித் சிங் மீது சரமாரியாக ஒரு கும்பல் தாக்கல் நடத்தியது. பாரம்பரிய சீக்கிய போர் வீரர் உடையில் இருந்தவர்கள் பயங்கரமான ஆயுதங்களால் தாக்கியிருக்கிறார்கள். இதில் ஹர்ஜித் சிங் கை மணிக்கட்டு பகுதியில் வெட்டுப்பட்டு துண்டாகி விட்டது. மேலும் பலரும் காயமடைந்துள்ளனர். துண்டான கையுடன் மருத்துவமனைக்கு விரைவாக அழைத்துச் செல்லப்பட்ட ஹர்ஜித் சிங்குக்கு மருத்துவர்கள் அவசரமாக அறுவை சிகிச்சை செய்தார்கள். பிஜிமெர்
 

கை துண்டிக்கப்பட்ட உதவி சப் இன்ஸ்பெக்டருக்கு ஆப்பரேஷன் சக்சஸ் – மருத்துவர்கள் சாதனை!ரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் வேளையில் பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா நகரத்தில், உதவி சப் இன்ஸ்பெக்டர் ஹர்ஜித் சிங் மீது சரமாரியாக ஒரு கும்பல் தாக்கல் நடத்தியது.

பாரம்பரிய சீக்கிய போர் வீரர் உடையில் இருந்தவர்கள் பயங்கரமான ஆயுதங்களால் தாக்கியிருக்கிறார்கள். இதில் ஹர்ஜித் சிங் கை மணிக்கட்டு பகுதியில் வெட்டுப்பட்டு துண்டாகி விட்டது. மேலும் பலரும் காயமடைந்துள்ளனர்.

துண்டான கையுடன் மருத்துவமனைக்கு விரைவாக அழைத்துச் செல்லப்பட்ட ஹர்ஜித் சிங்குக்கு மருத்துவர்கள் அவசரமாக அறுவை சிகிச்சை செய்தார்கள். பிஜிமெர் மருத்துவமனையில் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை ஏழரை மணி நேரம் நீடித்துள்ளது.

கை நரம்புகள், எலும்பு, தசைகள் என அனைத்தும் சேர்க்கப்பட்டு தற்போது ஹர்ஜித் சிங் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.  ஏழரை மணி நேர அறுவை சிகிச்சையை வெற்றி கரமாக முடித்துள்ள பிஜிமெர் மருத்துவமனை மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள். ஹர்ஜித் சிங் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன் என்று முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் கூறியுள்ளார்.

பஞ்சாப் டிஜிபி தின்கர் குப்தா கூறுகையில், அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த ப்ளாஸ்டிக் சர்ஜன் டாக்டரிடம் தகவல்கள் பெற்றேன். இன்னும் ஐந்து நாட்கள் கண்காணிப்பு முக்கியமானது. ஹர்ஜித் சிங் மிகவும் உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உதவி சப் இன்ஸ்பெக்டர் ஹர்ஜித் சிங் மீது தாக்குல் நடத்தி கையை துண்டித்த கும்பலைச் சார்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

A1TamilNews.com

 

From around the web