சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்டோ ரிக்கோ – ஒரு அறிமுகம்!

Bienvenido a San Juan Luis Muñoz Marín Aeropuerto Internacional. La hora local es veintitrés horas dos minutos சான் யுவான் லுயிஸ் முனோஸ் மரின் பன்னாட்டு விமான நிலையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. தற்போதைய உள்ளூர் நேரம் இரவு பதினோரு மணி இரண்டு நிமிடம்.” அறிவிப்புப் பலகை அன்போடு வரவேற்றது. போர்ட்டோ ரிக்கோ, ஆங்கிலத்தில் Puerto Rico, உள்ளூர் மக்களின் உச்சரிப்பில் புயெர்த்தோ ரிக்கோ சுற்றுலா
 
  சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்டோ ரிக்கோ – ஒரு அறிமுகம்!
 
Bienvenido a San Juan Luis Muñoz Marín Aeropuerto Internacional. La hora local es veintitrés horas dos minutos
 
சான் யுவான் லுயிஸ் முனோஸ் மரின் பன்னாட்டு விமான நிலையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. தற்போதைய உள்ளூர் நேரம் இரவு பதினோரு மணி இரண்டு நிமிடம்.” அறிவிப்புப் பலகை அன்போடு வரவேற்றது.
 
போர்ட்டோ ரிக்கோ, ஆங்கிலத்தில் Puerto Rico, உள்ளூர் மக்களின் உச்சரிப்பில் புயெர்த்தோ ரிக்கோ சுற்றுலா செல்ல வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசையும் நண்பரின் நச்சரிப்பும் சேர்ந்து, இதோ வந்து விட்டோம்.
 
அட்லாண்டாவிலிருந்து டெல்டாவில் மூன்றரை மணி நேரம் மயாமிக்கு மேலாக பறந்து, அட்லாண்டிக் பெருங்கடல் மேலே, டொம்னிக்கன் தீவை எட்டிப்பார்த்து, சான் யுவானில் தரை இறங்கியாகிற்று.
 
லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு மனைவி, குழந்தைகளுடன் வெளியே வந்தால், நண்பர் காத்துக்கொண்டிருந்தார். அவர் வாங்கி வந்திருந்த மெக்டொனல்ஸ் பர்கர் அந்த இரவு நேரப் பசிக்கு அறுசுவை உணவாக தெரிந்தது.
சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்டோ ரிக்கோ – ஒரு அறிமுகம்!
 நேஷனல் கார் ரென்டலில் முன் பதிவு செய்து வைத்திருந்த காரை எடுத்துக்கொண்டு கிளம்பினோம். நண்பர் முன்னால் செல்ல அவரைப்;  பின் தொடர்ந்தோம்.
 
சாலை மற்றும் போக்குவரத்து விதிகள் அமெரிக்கா போலவே இருந்ததால் வித்தியாசம் தெரியவில்லை. மலைகள், வளைவுகள், டோல்கேட் என்று கடந்து அபார்ட்மெண்ட் சென்று சேர ஒரு மணி நேரம் ஆகிவிட்டது”
 
சில ஆண்டுகளுக்கு முன்னால், கடுமையான புயலால் உருக்குலைந்து போன போர்டோ ரிக்கோவின் வீடியோக்கள், படங்கள், செய்திகளைப் பார்த்த போது மீண்டும் நினைவுகளுக்குள் போனேன். நாம் பார்த்து விட்டு வந்த இடங்கள் இப்படி உருமாறிப் போனதே என்ற இனம் புரியாத உணர்வு ஏற்பட்டது. போர்ட்டோ ரிக்கோவின் முக்கியப் பொருளாதாரமே சுற்றுலாதான். புயல் பாதிப்புகளிலிருந்து மீண்டு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த போர்ட்டோரிக்கோ சுற்றுலா, கொரோனா பேரிடரால் மீண்டும் தடைபட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்டோ ரிக்கோ – ஒரு அறிமுகம்!

சுற்றுலாவா? அப்படி என்றால் என்ன என்ற அளவிற்கு நிலைமை ஏற்பட்டுள்ளது. நம்மவர்கள் பலருக்கும் போர்ட்டோ ரிக்கோ சுற்றுலா போவதற்கு ஆர்வம் இருப்பதை தெரிந்து இருக்கிறேன். நாங்கள் சென்று வந்த பிறகு எங்களுக்குத் தெரிந்த நண்பர்கள் சிலரும் போய் வந்துள்ளார்கள். கொரோனா பேரிடர் காலத்தில் பழைய அனுபவங்களை அசைபோடுவதிலும் ஒரு அலாதி சுகம் தானே!

போர்டோ ரிக்கோவின் சுற்றுலாத் தொழிலுக்கும்  சிறு உதவியாக இருக்கக்கூடும் என்ற எண்ணத்தில், அமெரிக்கக் குடிமகனாக ஒரு சிறு பங்களிப்பாக இருக்கட்டுமே என்று எங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். போர்ட்டோ ரிக்கோ செல்ல விரும்புவர்களுக்கு உதவியாக இருந்தால் மிக்க மகிழ்ச்சி.
சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்டோ ரிக்கோ – ஒரு அறிமுகம்!
 அங்கு  பார்த்து ரசித்து அனுபவித்தவைகளை  வாரம் தோறும் பகிர்ந்து கொள்கிறோம். 
 
– அட்லாண்டா கண்ணன்

From around the web