சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – பட்டம் பறக்கட்டும்!

கடலும் மலையும் – தீவுப் பயணம் 8 சனிக்கிழமை எல் ஜுங்கே போனதிலேருந்து நாலு நாளா அலைச்சலா இருக்குங்க.. நாளைக்கு எங்கேயும் போக வேண்டாம். வீட்டிலேயே இருப்போம்ங்க” ன்னு சொல்லிட்டு தான் தூங்கப்போனாங்க இல்லத்தரசி. வீட்டம்மா பேச்சுக்கு மறு பேச்சு உண்டா என்ன? நாளைக்கு பசங்க ரெண்டு பேருக்கும் கால்ஃப் கோர்ஸ்லே ஏதாவது எண்டெர்டெய்ன் பண்ணிட்டு, அம்மணிக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுப்போம்னு நெனைச்சிகிட்டே தூங்கிட்டேன். வெகஷேனே அவங்களுக்கு ரெஸ்டுக்கும் சேர்த்து தானே.. மெதுவா எந்திருச்சி, ப்ரெட்
 

 

 கடலும் மலையும் – தீவுப் பயணம் 8

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – பட்டம் பறக்கட்டும்!

னிக்கிழமை எல் ஜுங்கே போனதிலேருந்து நாலு நாளா அலைச்சலா இருக்குங்க.. நாளைக்கு எங்கேயும் போக வேண்டாம். வீட்டிலேயே இருப்போம்ங்க” ன்னு சொல்லிட்டு தான் தூங்கப்போனாங்க இல்லத்தரசி.

வீட்டம்மா பேச்சுக்கு மறு பேச்சு உண்டா என்ன? நாளைக்கு பசங்க ரெண்டு பேருக்கும் கால்ஃப் கோர்ஸ்லே ஏதாவது எண்டெர்டெய்ன் பண்ணிட்டு, அம்மணிக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுப்போம்னு நெனைச்சிகிட்டே தூங்கிட்டேன். வெகஷேனே அவங்களுக்கு ரெஸ்டுக்கும் சேர்த்து தானே..

மெதுவா எந்திருச்சி, ப்ரெட் ஆம்லெட் போட்டு பசங்களுக்கும் கொடுத்துட்டு அம்மணியை தொந்தரவு பண்ணாமல், நாங்க மூணு பேரும் கால்ஃப் கிட் எடுத்துகிட்டு நடந்தோம். இன்னைக்கு ஆட்டத்தில் பொண்ணும் நானும் கொஞ்சம் தேறின மாதிரி தெரிஞ்சுது. பையனுக்குத் தான் போரடிச்சிடுச்சிட்டு. சும்மா பேச்சுக்கு “இந்த மாதிரி க்ரவுண்ட்ல நானெல்லாம் பட்டம் தான் விட்டுருக்கேன். இங்கே வந்து கால்ஃப் ஆடுறேன் பாரு.. எல்லாம் கம்ப்யூட்டர் வேலையாலத் தான்னு” ஏதோப் பேசப் போக, பையன் கரெக்டா அவன் பாயிண்ட்க்கு வந்தான்..

“ஏன், இப்போவும் பட்டம் விடலாமே ப்பா” ன்னு கொக்கி போட்டான்

“இந்த ஊர்லே ஏதுடா பட்டம்”

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – பட்டம் பறக்கட்டும்!

“நான் பார்த்தேனே. நேத்து ஃபோர்ட்டுக்கு போனோம்லே. அங்கே இருக்கே” ன்னு புடிச்சிட்டான்.

பொண்டாட்டிக்கு ரெஸ்ட் கொடுக்கலாம்னு பார்த்தா, வாயைக் கொடுத்து வம்பை வாங்கியாச்சே.. என்ன செய்யலாம்?

“அம்மா கிட்டே கேளு. சரின்னா போகலாம்”

இந்த அம்மாக்கள் இருக்காங்களே, நம்மகிட்ட தான் “நோ”. புள்ளைங்ககிட்டே “யெஸ்” தான். எங்க வீட்டுலே இப்படித்தான். எங்கம்மாவும் அப்படித்தான்.

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – பட்டம் பறக்கட்டும்!

நேத்து சொன்னது எதுவுமே நினைப்பு இல்லாத மாதிரி, “சாப்பிட்டுட்டு கிளம்புவோம்டா” ன்னு புள்ளைகிட்ட சொல்லியாச்சு. நமக்கென்ன வம்பு.. குளிச்சிட்டு முதல் ஆளா ரெடி ஆயிட்டோம்லே.

இன்னைக்கு மேடம் கார் ஓட்டட்டும்ன்னு, சாவியைக் கொடுத்திட்டேன். காத்திருந்த மாதிரி மறு பேச்சு சொல்லாம வாங்கிட்டாங்க.. மீண்டும் பழைய சான் யுவான்..அவங்களுக்கு ஹிஸ்டாரிக்கல் ப்ளேசஸ் ரொம்ப புடிக்கும். பட்டம் வாங்க ஃபோர்ட்க்கு போலாம்ன்னதும், சரி சொன்னதுக்கு அதுவும் ஒரு காரணம். ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்ன்னு, காரை பார்க் பண்ணிட்டு, இந்த வழியாப் போலாம்னு வேறு ஒரு ரோட்டில் கூட்டிச் சென்றேன்.

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – பட்டம் பறக்கட்டும்!

அங்கே ஒரு பழமையான சர்ச்.. கதீட்ரல் பஸலிக்கா ன்னு பேரு. இன்றைய அமெரிக்காவில் இருக்கும் பழமை வாய்ந்த சர்ச் இது தான். 1521ல் முதல்ல கட்டியிருக்காங்க. புயலில் சேதமடைந்த பிறகு 1540ல் புதுப்பிச்சுருக்காங்க. ஸ்பானிஷ் கட்டிடக் கலையின் முக்கியமான சான்று.

பார்த்ததும் வீட்டம்மாவுக்கு சர்ப்ரைஸ், சந்தோஷம். அதானே நமக்குத் தேவை.. 4 மணிக்கெல்லாம் சர்ச் மூடிடுறாங்க. அப்புறம் அப்படியே நடந்து போய் பையனுக்கு பட்டம் வாங்கி, எல் மோரோ ஃபோர்ட் முன்னாடி இருக்குற புல் தரையில் பட்டம் விட்டோம். அக்காவுக்கு ஒன்னு, தம்பிக்கு ஒன்னுன்னு வாங்குனோம். ரெண்டு பேருக்கும் போட்டி வேற!. கடல் ஓரம்< உயரமான இடம், ஜிலுஜிலுன்னு காத்து.. பட்டமும் நல்லா பறக்குது.. நமக்கும் நல்லா இருக்கு.. நிறையப் பேரு பட்டம் வாங்கி பறக்க விடுறாங்க. விதவிதமான பட்டங்களும் கிடைக்குது.

பையனும் பொண்ணும் பட்டம் விட்டாலும், நம்ம மைண்ட்டும் சின்ன வயசுக்குப் போயிடுச்சு.. பட்டம் விட்டுட்டு சான் யுவான் க்ரூஸ் போர்ட் பக்கம் வந்தோம்.. அங்கே க்ரூஸ் கப்பல் ஒன்னு கிளம்புர நேரம் போலே.. நெறையப் பேரு சான் யுவானைச் சுத்திப் பாத்துட்டு திரும்பவும் க்ரூஸ்க்கு லைன்ல காத்திகிட்டு இருந்தாங்க. கொஞ்ச நேரம் வேடிக்கைப் பார்த்துட்டு காருக்குப் போனோம்..

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – பட்டம் பறக்கட்டும்!

“அப்பா, நாம க்ரூஸ்ல போலாமா” – இது பொண்ணோட கேள்வி.

தம்பி இன்னும் கொஞ்சம் பெரிய பையனானதும் போலாம்ன்னு அம்மாவே பதில் சொல்லிட்டாங்க.

நாலு பேருக்குமே ஒரு சந்தோஷமான நாளா அமைஞ்சது.. போர்ட்டோ ரிக்கோவில் நாங்க சுத்துன இடம் இன்னும் நிறைய இருக்கு..

தொடரும்..

– அட்லாண்டா கண்ணன்

From around the web