சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – பெல்லி டான்ஸ்

கடலும் மலையும் – தீவுப் பயணம் 18 ஞாயிற்றுக் கிழமை இரவு அட்லாண்டா திரும்ப வேண்டும். வெள்ளிக்கிழமை காலை விடிஞ்சாச்சு. மூணு வாரமா இருந்துட்டு ஊரை விட்டுப் போகனும்னா, ஒரு ஃபீலிங் வரத்தானே செய்யும். நண்பர் எங்களுக்காக இன்றைக்கு லீவு போட்டுட்டேன்னு சொல்லிட்டார். ஒரு பை நிறைய மாம்பழத்துடன் காலையிலேயே எங்க அப்பார்ட்மெண்டுக்கு வந்துட்டார். கால்ஃப் கோர்ஸ் வளாகத்திலே உள்ள மாமரத்திலே பரிச்சு, அவருடைய அப்பார்ட்மெண்டில் சில நாட்கள் பழுக்க வைத்துள்ளார். வாட் அ ஸ்மெல்,
 
கடலும் மலையும் – தீவுப் பயணம் 18
ஞாயிற்றுக் கிழமை இரவு அட்லாண்டா திரும்ப வேண்டும். வெள்ளிக்கிழமை காலை விடிஞ்சாச்சு. மூணு வாரமா இருந்துட்டு ஊரை விட்டுப் போகனும்னா, ஒரு ஃபீலிங் வரத்தானே செய்யும். நண்பர் எங்களுக்காக இன்றைக்கு லீவு போட்டுட்டேன்னு சொல்லிட்டார்.
 
ஒரு பை நிறைய மாம்பழத்துடன் காலையிலேயே எங்க அப்பார்ட்மெண்டுக்கு வந்துட்டார். கால்ஃப் கோர்ஸ் வளாகத்திலே உள்ள மாமரத்திலே பரிச்சு, அவருடைய அப்பார்ட்மெண்டில் சில நாட்கள் பழுக்க வைத்துள்ளார். வாட் அ ஸ்மெல், வாசத்தை மோப்பம் பிடிச்ச வீட்டம்மா சிரிச்சிகிட்டே லிவிங் ரூம் வந்தாங்க. மாம்பழத்தை ஓரமா வச்சிட்டு டீ குடிச்சி கிட்டே  அன்றைய ப்ளான் போட்டோம்.
 
நானும் நண்பரும் கம்பை எடுத்துக் கொண்டு இளநீர் பறிக்கப் புறப்பட்டோம். முதல்ல கால்ஃப் கோர்ஸுக்கு வெளியே கொஞ்ச தூரம் காரில் போய் கிராமம் மாதிரி இருந்த இடத்தில் நிறுத்தினார். அங்கே ஒரு முருங்கை மரம் காய்த்துக் குலுங்கிக் கொண்டிருந்தது. ஒருத்தர் முருங்கைப் பூவைப் பறித்து அப்படியே சாப்பிட்டுக் கொண்டிருந்தார். 
 
அரைகுறை ஆங்கிலத்தில், தி இஸ் குட் ஃபார் ஹெல்த் என்றார். நண்பர் முருங்கைக்காயும் வெரி குட் ஃபார் ஹெல்த் என்று சொன்னதும். ஹௌ டு யூ ஈட் என அவர் கேட்க, காய்கறிகளுடன் வேக வைத்து சாப்பிடலாம் என்று சொல்லிவிட்டு, கம்பைக் கட்டினார் நண்பர். கிட்டத்தட்ட 25 காய்கள் பறித்து இருப்போம். வழியில் இளநீரும் பறித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.
 
மனைவிக்கு மாம்பழம் பார்த்த ஆச்சரியமே போகல்ல. அதுக்குள்ளே இத்தனை முருங்கைக் காய்களைப் பார்த்ததும் கண்கள் விரிந்தது. ஏண்ணே இவ்வளவு நாளா கண்ணுல இதைக் காட்டல்லன்னு நண்பரைப் பார்த்து கம்ப்ளைண்ட். இல்லேம்மா, ஒரே ஒரு மரம் பக்கத்திலே இருக்கு  தினமும் அந்த வழியாத்தான் ஆபீஸ் போவேன். பிஞ்சா இருந்துச்சி. இப்போதான் சரியா விளைஞ்சிருக்குன்னார்.
 
ஃப்ளைட்லே விடுவாங்களா, அட்லாண்டா கொண்டுபோலாமான்னு கேட்டார் மனைவி. போகும் போது பறிச்சுத் தர்றேன். துண்டு துண்டா நறுக்கி கொண்டு போயிடுங்க. அப்படியே மாங்காயும் வேணும்ணேன்னு அடுத்த அஸ்திரம் எறிஞ்சாங்க வீட்டம்மா. மாங்காயையும் துண்டு துண்டா நறுக்கி கொண்டு போனும்ன்னார் நண்பர்.
 
முந்தின நாள் அப்செட் ஆன அம்மணி, மாம்பழம், முருங்கைக்காய்ன்னு காலையிலேயே குஷியாயிட்டாங்க. பிள்ளைங்களும் முழிச்சி வந்துட்டாங்க. பசங்களுக்கு மாம்பழமும் இளநீரும் தான் ப்ரேக்ஃபாஸ்ட் ஆயிடுச்சு. கொஞ்ச நேரம் கழித்து ஸ்விம்மிங் பூலில் பசங்களுடன் கொஞ்ச நேரம் ஆடினோம். மத்தியானம் சாப்பிட்டுட்டு 4 மணி வாக்கில் வெளியே கிளம்பினோம்.
 
நேரே போனது ஒரு வாழைத்தோட்டத்திற்கு. நேந்திரன் வாழைக்காய் பயிரிட்டுருந்தாங்க. அவங்க வாழைத்தாரை கரைக்கு கொண்டுவரும் ரோப் சிஸ்டம் புதுமையா இருந்துச்சு. உள்ளே போய் வாழை மடலைப் பிடித்து விளையாடி, சில இலைகளை அறுத்து எடுத்து வந்தோம், அங்கே இருந்தவர்களின் அனுமதியோடு. அப்படியே வெளியே வந்து கொஞ்ச தூரம் போனா, கோழி, ஆடு, மாடுன்னு ஒரு சின்ன ப்ரைவேட் பண்ணை இருந்தது. 
 
என்னப்பா இது இப்படி எங்களை தமிழ்நாட்டுக்கு கூட்டிட்டுப் போய் இன்ப அதிர்ச்சி கொடுத்தா தாங்க மாட்டோமப்பா என்று சத்தமாகவே சொல்லிட்டேன். பிள்ளைங்களுக்கு முற்றிலும் புதிய அனுபவமாயிடுச்சி. வழியில் கடலோரக் காட்சிகள், மலையோரக் காட்சிகள் என அற்புதமாக இருந்தது. சற்று இருட்டத் தொடங்கியது. சரி, சீக்கிரமாப் போவோம்ன்னு ஒரு சின்ன சாலையில் சென்று ஓரிடத்தில் நிறுத்தினார்.
 
அங்கே வரிசையா வேப்பமரங்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. நம்ப முடியவில்லை.கொழுந்து இலையைப் பறித்து கடித்துப் பார்த்த பின்னரே நம்பினேன். ஒரு ப்ரைவேட் சாலையின் இருபக்கமும் வேப்பமரங்கள் வரிசையாக வளர்ந்திருந்தார்கள்.
 
கிட்டத்தட்ட இருள் சூழ்ந்துவிட்டது. அங்கிருந்து கிளம்பி 15 நிமிடத்தில் ஒரு ரெஸ்டாரண்ட் முன்பு காரை நிறுத்தினார். பெரிசா பசிக்கல்லியே என்றார் மனைவி. வாங்க போகலாம் ஒரு காரணம் இருக்கு என்று அழைத்துச் சென்றார். பாருடன் கூடிய ரெஸ்டாரண்ட். மனைவி வேறு அர்த்தம் புரிந்து கொண்டார் போலும். என் மீது பார்வை நேராகக் குத்தியது.
 
ஐந்து பேரும் உக்காரக்கூடிய டேபிளில் அமர்ந்தோம். இந்திய உணவு வகைகள் தான். மீன், இறால் வகை உணவுகளை ஆர்டர் செய்தோம். கொஞ்ச நேரத்தில் அங்கே ஒரு மங்கை வந்தார். டான்ஸ் உடை அணிந்து கையில் ஒரு வாளுடன் வந்தார். ஒன்றும் புரியவில்லை. திடிரென இசை மாறியது. வந்தவர் ஆடத்தொடங்கினார். அது பெல்லி டான்ஸாம். வாவ்.. அருமையாக இருந்தது. பின்னர் நெருப்புப் பந்தங்களுடனும் ஆடினார். சுமார் அரைமணி நேரம் ஆட்டம் தொடர்ந்தது. 
 
இப்போ புரியுதா ஏன் வந்தோம்ன்னு பார்வையாலே கேட்டார் நண்பர். எல்லோருமே ரசித்துப் பார்த்தோம். உடையைப் பார்த்து கொஞ்சம் ஏதோ போல் முதலில் உணர்ந்தாலும், அவர் ஆட்டத்தில் விரசம் தெரியவில்லை. புதிய அனுபவம் தான்.
 
கிளம்பி வீடு வந்து சேர்ந்தோம். காலையில் சீக்கிரம் எழுந்திருக்கனும். மீண்டும் அதே ஃபெர்ரி இடத்திற்கு போகிறோம். தயாராக இருங்கள் என்று சொல்லிவிட்டு நண்பர் அவர் வீட்டுக்குத் தூங்கப் போனார்.
 
இன்னும் சில அனுபவங்களைப் பகிர்கிறோம்.
 
– அட்லாண்டா கண்ணன்
 
முந்தைய வாரம்
 

From around the web