சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – வியேக்கஸ் பயோ பே!

கடலும் மலையும் – தீவுப் பயணம் 16 ரிசார்ட்டில் வந்து எங்களை கூட்டிட்டுப் போன வேன் வந்து நின்ன இடம் எஸ்பெரன்ஸா. அங்கே ஒரு இடத்தில் எங்களை இறக்கி விட்டு காத்திருக்கச் சொன்னர்கள். அருகில் பீச் ஓரம் வாக்கிங் போவதற்கு நல்ல இடமாக இருந்தது. அரை மணி நேரத்திற்கும் மேலாகும் என்று சொன்னதால், ஒரு நடை போய்ட்டு வந்தோம். பின்னர், அங்கிருந்து இன்னொரு வேனில் இன்னும் நிறைய பேருடன் கூட்டிச் சென்றார்கள். இருட்டத் தொடங்கி விட்டது.
 

கடலும் மலையும் – தீவுப் பயணம் 16

ரிசார்ட்டில் வந்து எங்களை கூட்டிட்டுப் போன வேன் வந்து நின்ன இடம் எஸ்பெரன்ஸா. அங்கே ஒரு இடத்தில் எங்களை இறக்கி விட்டு காத்திருக்கச் சொன்னர்கள். அருகில் பீச் ஓரம் வாக்கிங் போவதற்கு நல்ல இடமாக இருந்தது. அரை மணி நேரத்திற்கும் மேலாகும் என்று சொன்னதால், ஒரு நடை போய்ட்டு வந்தோம். 
 
பின்னர், அங்கிருந்து இன்னொரு வேனில் இன்னும் நிறைய பேருடன் கூட்டிச் சென்றார்கள். இருட்டத் தொடங்கி விட்டது. வேன் கொஞ்ச தூரம் நல்ல ரோட்டில் போனது. அதன் பிறகு வண்டித்தடம் மாதிரியான வழியில் போக ஆரம்பித்தது. பக்கத்திலிருக்கும் மரங்களை உரசிக் கொண்டெல்லாம் போகும் போது கொஞ்சம் பயம் தான். 
 
என்னமோ காட்டுக்குள்ளே நம்மளை கடத்திட்டுப் போற மாதிரி ஒரு ஃபீலிங். பள்ளம் மேடு என இருந்ததால் தூக்கி தூக்கி வேறு போட்டது. ஒரு வழியா ஒரு இடத்தில் கடற்கரை பக்கம் வந்து சேர்ந்தோம்.
 
அங்கே டூர் கைடுகள் சிலர் நின்று கொண்டிருந்தார்கள். ஒரு படகும் இருந்தது. முழுக்க முழுக்க பேட்டரியில் இயங்கும் படகு அது. மோட்டார் ஓடுதா இல்லையா என்றெல்லாம் தெரியவில்லை. மனைவியும் மகனும் படகில் ஏறிக் கொண்டார்கள். அங்கே ஏற்கனவே நிறைய பேர் படகில் இருந்தார்கள்.
 
நானும் மகளும் காயாக் -குக்காக வெயிட் பண்ணினோம். எல்லோரும் காயாக்கில் போகத்தான் ஆசைப்பட்டோம். தனித்தனியாக துடுப்பை போட்டுச் செல்ல வேண்டும். பையனுக்கு அவ்வளவு தூரம் தனியாக வரமுடியுமான்னு சந்தேகம், மனைவிக்கு. அதனால் அம்மாவும் பையனும் படகிலும், அப்பாவும் பொண்ணும் காயாக்கிலும் என்று முடிவு செய்தோம். 
 
படகிலே ஜாலியா உக்கார்ந்துகிட்டு, நின்னுகிட்டு அவங்க ரெண்டு பேரும் கிளம்பிப் போக, கொஞ்ச நேரத்தில் நாங்க ரெண்டு பேரும் ஆளுக்கொரு காயக்கில் , கூட்டத்தோடு கூட்டமாக கிளம்பினோம். லைஃப் ஜாக்கெட் போட்டுக் கொண்டு காயக்கில் இருட்டில் கடலுக்குள் போகிறோம். முன்னால் ஒரு கைடும் பின்னால் ஒரு கைடும் டார்ச் லைட் வெளிச்சம் காட்டிக்கொண்டு வந்தார்கள்.
 
எவ்வளவு தூரம் என்று தெரியாது, ஒரு அரை மணி நேரம் இருக்கலாம். கடலுக்கு மத்தியில் ஒரிடத்தில் நிறுத்தினார்கள். அப்போது தான் கவனிக்க ஆரம்பித்தோம். அந்தப் பகுதியை நெருங்க நெருங்க, எங்கள் காயக்கின் அடியில் ஒளி தெரிய ஆரம்பித்தது. 
 
நாங்கள் வந்த இடம் உலகிலேயே அதிகளவில் ஒளி வீசும்  “பயோலூம்னிசென்ட் பே (Bioluminescent Bay)”. போர்ட்டோரிக்கோ மெயின் தீவில்  “லா பர்குவாரா” என்ற ஒரு ஊரில் பயோ பே போனோம் என்று முன்னர் கூறியிருந்தோம் அல்லவா!. அது எல்லாம் இந்த  “பயோ பே” அருகில் ஒன்னுமே கிடையாது என்று சொல்லலாம். 
 
அந்தக்கடல் நடுவே நங்கூரம் பாய்ச்சியது போல் ஒரு தூண் மாதிரி இருந்தது. எத்தனை அடி ஆழம் என்று தெரியாது. அந்தத்தூணில் ஓவ்வொரு காயக்கையும் இணைத்துக் கட்டினார்கள். பின்னர் முதல் ஆசாமியாக டூர் கைடு ஒருவர் கடலுக்குள் குதித்தார். அடேங்கப்பா. அத்தனைப் பிரகாசமான ஒளி வெள்ளம். மையிருட்டில் கடலுக்கு மத்தியில் இப்படி ஒரு அதிசயமா என்று மலைத்துப் போனோம்.
அடுத்து, விருப்பப்படுபவர்கள் கடலில் குதிக்கலாம் என்றார்கள். எம் பொண்ணு முத ஆளா, நான் நான் என்று கத்தினாள். இளம் கன்று பயமறியாது என்று சும்மாவா நம்ம முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். எனக்கு அவளை நினைத்துப் பயம். ஆனாலும், சரிம்மான்னு சொல்லி குதிக்கச் சொன்னேன்.சுத்தியும் ஒளி வெள்ளத்தைப் பார்த்து பிள்ளைக்கு அப்படி ஒரு சந்தோஷம். 
 
அட, நாமளும் இனிமே சும்மா இருந்தா எப்படின்னு, சட்டுன்னு குதித்தேன். அப்பாவுக்கும்ம் பொண்ணுக்கும் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாளாக அமைந்தது. நீச்சல் அடித்து, கையை காலை உதறி ஆட்டம் போட்டோம். எங்கள் கைடுகள் ரொம்பவே நல்லவர்கள். எங்களுடன் வந்த அனைவரையும் கடலில் குதிக்க வைத்து மகிழ்ச்சியுடன் ஆட்டம் போட வைத்து நிறைய நேரம் அனுமதித்தார்கள். எல்லோரும் டயர்ட் ஆன பிறகே, கரைக்கு திரும்ப மீண்டும் காயக்கில் ஏறினோம்.
 
இந்த இடத்திற்கு மஸ்கிட்டோ பே என்று பெயர். அதான் கொசு தாங்க.  ஆனால் இந்த ஒளி வெள்ளத்திற்கு காரணம் கொசு இல்லே. ஒரு வித நுண்ணுயிர். மின்மினிப் பூச்சி மாதிரி, கடலுக்குள் இருக்கும் நுண்ணுயிரினம். மிக அதிகமான எண்ணிக்கையில் இருப்பதால், தண்ணீரை தொட்டதும் மின்னுகின்றன. மிகவும் பாதுகாக்கப்பட்ட இடம். சாதாரண மோட்டார் படகுக்கு அனுமதி இல்லை. 
 
வியேக்கஸ் தீவின் சுற்றுலாப் பொருளாதாரத்திற்கு இந்த பயோ பே தான் ஆதாரமான ஒன்றாகும். இரவில் ஒளிர்ந்த வியேக்கஸை, பகலில் பார்த்த அனுபவமும் இருக்கு. அடுத்த வாரம் தொடர்கிறோம்.
 
– அட்லாண்டா கண்ணன்
 
முந்தைய வாரம்
 
https://www.youtube.com/watch?v=VwfG9s1A8pI&feature=youtu.be

From around the web