சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – தனாமா ஆற்றில் ட்யூபிங்!

கடலும் மலையும் – தீவுப் பயணம் 14 இந்த ஒரு இடத்துக்கு மட்டும் போயிட்டு இன்னைக்கு சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுங்க. பேமெண்ட் பண்ணிட்டேன். போய் உங்க பேரச் சொன்னதும், அவங்க கூட்டிட்டுப் போவாங்கன்னு,” ஒரு விசிட்டிங் கார்டைக் கொடுத்தார் நண்பர். ஏற்கனவே அவர் அங்கே போய்ட்டு வந்தவர். அந்தப் பழக்கத்தில் விசிட்டிங் கார்டு எல்லாம் வாங்கி வந்திருப்பாரு போல. அவர் சொன்ன ஊர் உத்வாதோ. பான்சே போகும் நெடுஞ்சாலையில் போய், பான்சேவுக்கு முன்னதாக இறங்கி, மலைச்சாலையில் செல்ல
 

கடலும் மலையும் – தீவுப் பயணம் 14

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ –  தனாமா ஆற்றில் ட்யூபிங்!ந்த ஒரு இடத்துக்கு மட்டும் போயிட்டு இன்னைக்கு சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுங்க. பேமெண்ட் பண்ணிட்டேன். போய் உங்க பேரச் சொன்னதும், அவங்க கூட்டிட்டுப் போவாங்கன்னு,” ஒரு விசிட்டிங் கார்டைக் கொடுத்தார் நண்பர். ஏற்கனவே அவர் அங்கே போய்ட்டு வந்தவர். அந்தப் பழக்கத்தில் விசிட்டிங் கார்டு எல்லாம் வாங்கி வந்திருப்பாரு போல.

அவர் சொன்ன ஊர் உத்வாதோ. பான்சே போகும் நெடுஞ்சாலையில் போய், பான்சேவுக்கு முன்னதாக இறங்கி, மலைச்சாலையில் செல்ல வேண்டும். ஒன்றரை மணி நேரப் பயணம். மலைப் பாதையில் முதல் முதலாக தனியாக நாங்கள் நால்வரும் சென்றோம். அதுவும் ஏற்கனவே போகாத புதிய பாதை எங்களுக்கு. நான்கு வழி, இரண்டு வழி என மாறி மாறிச் சென்று நண்பர் குறிப்பிட்ட இடத்தை காலை பத்து மணி வாக்கில் சென்றடைந்தோம்.

கிளைச்சாலையில் வீடு / அலுவலகம் போல் இடம் அது. பார்த்ததும், சரியான இடத்திற்குத்தான் வந்தோமா என்று ஒரு சந்தேகம். டூரிஸ்டுகள் வரும் இடம் மாதிரியே தெரியல்ல. ஓரமாக காரை நிறுத்தும் போது அங்கே சில கார்கள் பார்க் செய்யப்பட்டதைப் பார்த்ததும், சரியான இடமாத்தான் இருக்குமோன்னு தோணிச்சு.

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ –  தனாமா ஆற்றில் ட்யூபிங்!

இறங்கிப் போய் வரவேற்பரையில் இருந்தவரிடம், எங்கள் பெயரைச் சொன்னதும், “நாலு பேரு தானே, பத்து நிமிஷத்தில் கிளம்புவோம். இன்னும் ஒரு குடும்பம் வரவேண்டி இருக்கிறதுன்னு,” சொன்னார். அங்கே 6 – 7 பேர் இருந்தார்கள்.

கிட்டத்தட்ட 15 பேர் கிளம்பினோம். எல்லோருக்கும் லைஃப் ஜாக்கெட் கொடுத்தாங்க. ட்ரெஸ் நனைஞ்சிடும். மாத்தனும்ன்னா இங்கே மாத்திடுங்கன்னு சொன்னாங்க. நண்பர் ஏற்கனவே சொன்னதால, ட்ரெஸ், ஷூ எல்லாம் ரெடியாகத்தான் வந்திருந்தோம்.

ரோட்டை விட்டு, இறங்கி ஒரு மலைச் சரிவில் நடக்க ஆரம்பித்தோம். போறோம் போறோம் ரெண்டு மைலுக்கு மேலே இருக்கலாம். ரெயின் ஃபாராஸ்ட் – ஐ விட வித்தியாசமான காடு இது. உயர்ந்த மரங்கள் நிறைய இருந்தது. ஒரு சின்ன ஓடை மாதிரி ஒன்னு குறுக்கே வந்தது. அதைத் தாண்டிப் போகனுமோன்னு நினைச்சா, வெயிட் பண்ணுங்கன்னு டூர் கைடுகள் ரெண்டு பேரும் பக்கத்திலே எங்கேயோ போனாங்க.

வரும் போது ஆளுக்கு நாலு கார் / ஜீப் சைஸ் காற்றடைத்த ட்யூப்கள் கொண்டு வந்தாங்க. இன்னொரு தடவை போய், ஆளுக்கு ஒன்னு என்ற கணக்கில் ட்யூப்கள் வந்தது. எங்கே போறோம், எப்படி இருக்கும்ன்னு ட்ரிப் குறிப்பு கொடுத்தாங்க. நாங்க கடைசின்னு பின்வாங்கிட்டோம். மத்தவங்களைப் பார்த்துட்டு இறங்கலாம்னுதான்.

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ –  தனாமா ஆற்றில் ட்யூபிங்!

ட்யூபை ஓடையில் போட்டு ஒரு கைடு பிடித்துக் கொண்டார். முட்டு அளவு தண்ணீரே இருந்த அந்த இடத்தில், டூரிஸ்ட் ஒருத்தர் உக்கார்ந்து காலை முன்னால் நீட்டிக் கொண்டார். ட்யூபை விட்டதும் மெல்ல மெல்ல நகர்ந்து கொஞ்ச தூரம் போய், நீர் ஓடாமல் தேக்கமாக இருந்த இடத்தில் நின்று கொண்டது. அங்கே இன்னொரு கைடு, மேலும் போக விடாமல், ட்யூபில் இருந்து கொண்டே பார்த்துக் கொண்டார்.

இப்படி ஒவ்வொருவராக ட்யூப் மேலே ஏறி அந்த தடாகம் போன்ற இடத்திற்குப் போய் சேர்ந்தோம். கைடுகள் இருவரும் ஒருவர் பின் ஒருவராக ஓடைக்குள் இழுத்து விட்டனர் ஒரு கைடு முன்னால் செல்ல, இன்னொருவர் கடைசியாக வந்தார். இருவர் கையிலும் நீளமான கம்பு இருந்தது.

சமவெளி போல் இருந்த ஓடையில், மெதுவான நீரோட்டத்தில் மேலே பார்த்துக் கொண்டே மெல்ல மெல்ல நகரந்து கொண்டிருந்தது எங்கள் ட்யூப். கொஞ்ச நேரத்தில் ஓடை போய், நதி மாதிரி அகலமாகவும் ஆழமாகவும் தெரிந்தது. கரையோரம் உயரமான மலைகள், பாறைகள். லைட்டா பயம் வர ஆரம்பிச்சுது. சட்டென்று ஆறு ஒரு குகைக்குள் நுழைந்தது. திடீர் இருட்டு.. கைடுகள் தலையில் டார்ச் எரிய ஆரம்பித்தது. அப்படி ஒரு அமைதி எல்லார்கிட்டேயும்.

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ –  தனாமா ஆற்றில் ட்யூபிங்!

கைடுகள் பேச்சுக் கொடுத்து, அந்த குகைப் பத்தி சொன்னாங்க. லைட்டா திரும்பிப் பார்க்க ட்ரை பண்ணினேன். ட்யூப்லே இருந்து தண்ணிக்குள் விழுந்துட்டேன். பிள்ளைங்க ‘டாடி’ ன்னு கத்திட்டாங்க. அப்பா ஸ்விம் பண்ணுறேன்ம்மான்னு சொல்லி சமாளிச்சேன். பிரச்சனை என்னன்னா, திரும்பவும் ட்யூப் மேலே ஏற முடியல்ல.

கைடுங்க கம்பை தண்ணியில் துடுப்பு போல் போட்டு என் பக்கம் வந்து சேர்ந்தாங்க. ட்யூபை பிடித்துக் கொள்ள ஒரு வழியா ஏறி உக்காந்தேன். அப்புறம் திரும்பிப் பார்க்கவே இல்லை.. குகை முடிந்து வெளியே வந்துட்டோம். ஆறு அகலமாகத் தெரிந்தது. தூரத்தில் ஆற்றின் குறுக்கே ஒரு நடை பாலமும் தெரிந்தது.

பாலத்திற்கு கொஞ்சம் முன்னே, இடது பக்கமா ஒவ்வொருவரா கரையேறினோம். அவரவர் ட்யூபை கையில் எடுத்துக் கொண்டு பாலத்தில் நடந்து ஆற்றைக் கடந்தோம். இப்போ மீண்டும் ட்ரெக்கிங், மூச்சு வாங்க நடந்து, குகைக்கு மேலேயும் நடந்து வந்தோம். ஆரம்பித்த இடத்தில் ட்யூபுகளை விட்டு விட்டு, மேலும் நடந்து கார் பார்க்கிங் செய்த இடத்திற்கு வந்துட்டோம்.

செம்ம பசி.. நல்லவேளை நண்பர் ஏற்கனவே சொல்லியிருந்ததால், லஞ்ச் ரெடி பண்ணி கொண்டு வந்துட்டோம். இல்லேன்னா ஏழெட்டு மைல்களுக்கு மெக்டோனல்ஸ் கூட கிடையாது. காரில் உக்கார்ந்தே சாப்பிட்டுட்டு மெல்ல கிளம்பி மீண்டும் மலைச்சாலைக்குள் பயணித்து அப்பார்ட்மெண்ட் வந்து சேர்ந்தோம்.

போய் வந்தது, ‘தனாமா ரிவர் ட்யூபிங் ட்ரிப்’. இந்த டூர் ஆர்கனைஸர்ஸ் கட்டணம் குறைவானவர்கள். நண்பரின் அலுவலகத்தில் உள்ள உள்ளூர்காரர்கள் பரிந்துரையில் அவர் போய் வந்ததால், நம்பிக்கையுடன் எங்களை அனுப்பி வைத்தார். பத்திரமாக வந்து சேர்ந்தோம். ஒரு வித்தியாசமான அட்வெஞ்சர் ட்ரிப்.

அடுத்த நாள் பயணத்திற்கு ஆயத்தமாக உடைகள் எடுத்து வைத்து விட்டு, ட்ரெக்கிங், ட்யூபிங் களைப்பும் சேர, சீக்கிரமாகவே தூங்கப் போனோம்.

அடுத்த ஸ்டாப் ஒரு குட்டித் தீவு.. தொடர்கிறோம்..

– அட்லாண்டா கண்ணன்

முந்தைய வாரம்

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – பான்சே நல்ல பான்சே!

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ –  பார்க்-கும் பன்றிக்கறியும் 

 

From around the web