சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – பான்சே நல்ல பான்சே!

நேற்றைய மலைப் பூங்கா அனுபவமும், ஷாப்பிங், சினிமாவும் நல்லா இருந்தாலும், முழு பன்றியை க்ரில் செய்ததைப் பார்த்த டென்ஷன் பசங்களுக்கும் வீட்டம்மாவுக்கும் இருந்தது. “புதன் கிழமை காலையில் வேற ப்ளான் இருக்கு, இன்னைக்கும் நாளைக்கும் பான்சே, சான் யுவான் பாத்துட்டு வாங்க. சான் யுவான்லே இன்னும் நிறைய இடம் இருக்கு. பான்சே இரண்டாவது பெரிய நகரம். டவுண்டவுண் நல்லா இருக்கும். மத்தியானம் சாப்பிட்டுட்டு போனா கூட போதும். சாயங்காலம் அப்படியே கடற்கரை போய்ட்டு வந்தா சரியா
 
சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ –  பான்சே நல்ல பான்சே!
நேற்றைய மலைப் பூங்கா அனுபவமும், ஷாப்பிங், சினிமாவும் நல்லா இருந்தாலும், முழு பன்றியை க்ரில் செய்ததைப் பார்த்த டென்ஷன் பசங்களுக்கும் வீட்டம்மாவுக்கும் இருந்தது. 
 
“புதன் கிழமை காலையில் வேற ப்ளான் இருக்கு, இன்னைக்கும் நாளைக்கும் பான்சே, சான் யுவான் பாத்துட்டு வாங்க. சான் யுவான்லே இன்னும் நிறைய இடம் இருக்கு. பான்சே இரண்டாவது பெரிய நகரம். டவுண்டவுண் நல்லா இருக்கும். மத்தியானம் சாப்பிட்டுட்டு போனா கூட போதும். சாயங்காலம் அப்படியே கடற்கரை போய்ட்டு வந்தா சரியா இருக்கும்ன்னு” நண்பன் சொல்லிட்டு ஆபீஸ் கிளம்பிட்டாரு.
 
கால்ஃப் கோர்ஸ் உள்ளே அப்பார்ட்மெண்ட் என்பதால், அந்த ஏரியாவே ஏகப்பட்ட மரங்களுடனும் தென்னை மரத்துடனும் நல்லா இருக்கு. காலையில்  வாக்கிங் போயிட்டு பசங்களுடன் சைக்கிளில் ஒரு ரவுண்ட் அடிச்சாலே மத்தியானம் ஆயிடுது. 
 
சான் யுவான் ரெண்டு மூணு தடவை போயாச்சு. பான்சே போகலாம்ன்னு ஏக மனதா முடிவு செய்தோம். அரை மணி நேரத்துக்கு கொஞ்சம் அதிகமான தூரம். டவுண்டவுணில் பார்க் செய்து விட்டு சுற்றி வந்தோம். பான்சே நகரத்திற்கு 1500 ஆண்டுமுதலாகவே வரலாறு இருக்கிறது. பான்சே டே லியோன் என்ற ஸ்பானிஷ்காரர் தான் இந்த இடத்தை ஆக்கிரமித்து நகரை உருவாக்கினார். 
 
நகரின் மத்தியில் பூங்காவும் அதைச் சுற்றி கடை வீதிகளும் இருக்கிறது. ஒரு பக்கம் பழைய தீ அணைப்பு நிலையம் இருக்கிறது. அதைப் பாத்துட்டு, “என்னங்க இங்கேயும் திமுக கட்சிக்கு ப்ராஞ்ச் இருக்கான்னு சம்சாரம் அப்பாவியா கேட்டாங்க.”
 
கருப்பு சிவப்பு ன்னாலே திமுகன்னு நம்ம மனசிலே செட்டாயிருக்குல்ல. போதாத குறைக்கு அந்த பில்டிங் மத்தியிலே உதய சூரியன் சின்னமும் இருந்தா அவங்க கன்ஃபுயூஸ் ஆனதிலே தப்பே இல்லையே? பார்கே டே பம்பாஸ் என்று ஸ்பானிஷில் அழைக்கப்படுகிறது. ஃபயர் சர்வீஸ் ஸ்டேஷன்னு அர்த்தம்.  அது ஏன் கருப்பு சிவப்பு கலரில் இந்த கட்டிடம் இருக்குன்னு தெரியல்ல. 
 
ஒரு வேளை இதைப் பார்த்திருந்தா, அறிவாலயத்தை இந்த மாடலில் கருணாநிதி கட்டியிருப்பாரோ என்னவோ? அப்படியே போனா அங்கே ஒரு பழைய கட்டிடம் இருந்தது. மியூஸியம்ன்னு சொன்னாங்க. ஒரு பழமையான சர்ச்-ம் பான்சே வில் இருக்கு. பான்சே கதீட்ரல் என்று பெயர். 1650 களிலேயே கட்டப்பட்டது. பல புயல்களில் சேதமடைந்து புதுப்பிக்கப்பட்டது. பழைய கட்டிடங்களைப் பார்த்ததும் மனைவிக்கு படு குஷி.. பான்சே கரீபியன் கடல் அருகே உள்ள சமவெளிப் பகுதி. அங்கிருந்து மேற்கு நோக்கி போனால் மலைப் பிரதேசம் வரும். 
 
காப்பி எஸ்டேட்கள் எல்லாம் அங்கே இருந்துள்ளது. இப்போதும் ஒரு சில காப்பி எஸ்டேட் இருப்பதாகச் சொன்னார்கள்.போர்டோ ரிக்கோவின் தென்பகுதியில் பான்சே தான் முக்கிய வர்த்தக நகரமும் ஆகும். ஒரு காலத்தில், ஊரைச் சுற்றிலும் விவசாயம், எஸ்டேட்கள் என பொருளாதார முக்கியத்துவம் இருந்துள்ளது. தென் பகுதியில் உள்ள நகரங்களுக்கு ரயில் போக்குவரத்தும் இருந்திருக்கிறது. 
 
அமெரிக்க மருத்துவக் கம்பெனிகள் போர்டோ ரிக்கோவை ஆக்கிரமித்த பிறகு விவசாயம் முற்றிலும் அழிந்துள்ளது. மிகக் குறைந்த அளவிலேயே வாழை விவசாயமும், கோழி, மாட்டுப் பண்ணைகளும் தற்போது உள்ளது. இருப்பினும் பான்சே தான, மக்கள் தொகையிலும் பரப்பளவிலும் இன்னமும் இரண்டாவது பெரிய நகரமாகும்.இரவு நேர பார்களுக்கும் பிரசித்து பெற்றது.
 
நகரைச் சுத்திப் பாத்துட்டு, பான்சே பீச் பக்கம் போனோம். கடற்கரை ஓரம் நடைபாதை போல் பிரம்மாண்டமாக கட்டி, அருகே கடை வீதி போல் கடைகள் இருக்கிறது. மியூசிக் ப்ரோக்ராம் நடத்துவதற்கும் பெரிய ஆடிட்டோரியம் போல் உள்ளது. 
 
வழியிலேயே ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிட்டு விட்டு அப்பார்ட்மெண்ட் திரும்பினோம். அடுத்தநாள் போவதற்கு நண்பன் ஒரு இடத்தைச் சொல்லியிருந்தார். அங்கு போவதற்கு காலையிலேயெ கிளம்பனும். அந்த விவரத்துடன் தொடர்கிறேன்.
 
– அட்லாண்டா கண்ணன்
 

From around the web