சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ –  பார்க்-கும் பன்றிக்கறியும்

கடலும் மலையும் – தீவுப் பயணம் 12 நாளைக்கு மலைப்பக்கம் போகலாம், இன்னைக்கு மாதிரியே லஞ்ச் கொண்டு போயிடலாம்னு நண்பன் சொல்லிவிட்டு போனார். நேற்று மாதிரியே கொஞ்சம் லேட்டா எழுந்திருச்சி, ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சிட்டு, லஞ்சும் எடுத்துட்டு கிளம்பினோம். வயாமா டவுண்டவுணுக்குள் ரவுண்ட் அடிச்சிட்டு, கார் மலை மேலே ஏற ஆரம்பிச்சிது. இருவழிச்சாலை , நம்ம ஊட்டி, கொடைக்கானல் மாதிரியே வளைவுச்சாலை. ஹேர்பின் பெண்டுகள் எதுவும் பாக்கல்ல. ஒரு பக்கம் படு பாதாளமா, மறுபக்கம் மலையடிவாரம்னு வழக்கமான மலைப்பாதை
 
 கடலும் மலையும் – தீவுப் பயணம் 12
நாளைக்கு மலைப்பக்கம் போகலாம், இன்னைக்கு மாதிரியே லஞ்ச் கொண்டு போயிடலாம்னு நண்பன் சொல்லிவிட்டு போனார். நேற்று மாதிரியே கொஞ்சம் லேட்டா எழுந்திருச்சி, ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சிட்டு, லஞ்சும் எடுத்துட்டு கிளம்பினோம்.
 
வயாமா டவுண்டவுணுக்குள் ரவுண்ட் அடிச்சிட்டு, கார் மலை மேலே ஏற ஆரம்பிச்சிது. இருவழிச்சாலை , நம்ம ஊட்டி, கொடைக்கானல் மாதிரியே வளைவுச்சாலை. ஹேர்பின் பெண்டுகள் எதுவும் பாக்கல்ல. ஒரு பக்கம் படு பாதாளமா, மறுபக்கம் மலையடிவாரம்னு வழக்கமான மலைப்பாதை மாதிரி தான் இருக்கு. ஆங்காங்கே மாமரங்கள் தெரிஞ்சிது. காய்கள் எதுவும் தெரியல்ல. நம்மாளுகிட்ட கேட்டா, என்னவோ மலையில் இருக்கிற மாமரம் இங்கு காய்க்காதாம். ஏன்னு புரியல்லப்பான்னு சொன்னான்.
நம்ம பொண்ணு, அங்கிள் பாலினேஷன் இல்லாமல் இருக்கும் அதான் காய்க்காமல் இருக்கும்ன்னு விளக்கம் சொன்னாங்க. நட்ட நடு காடு, ரோட்டில் கார்கள் எதுவும் தெரியல்ல. வண்டிய ஓரங்கட்டுன்னு சொல்ல, நிறுத்தினேன். கார்ல இருங்க. இதோ வந்திடுறேன்னு இறங்குனாரு. ட்ரங்கிலிருந்து ஒரு கூர்மையான கத்தியை எடுத்தார். நானும் வண்டியை ப்ரேக் போட்டுட்டு கூட போனேன்.  முன்னாடி சுமார் 50 அடி தூரத்தில் மலையடிவாரத்தில் ஒரு வாழைமரம் தனியா நிக்குது. அதுலே மூணு நாலு சீப்பு இருக்கிற செவ்வாழைத்தார் தொங்குது. நம்மாளு இந்த ஏரியாவுக்கு அடிக்கடி வருவாரு போலிருக்கு. இடம் பொருள் எல்லாம் தெரிஞ்சி வச்சிருக்காரு.
சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ –  பார்க்-கும் பன்றிக்கறியும்
நம்மாளு பட்டுனு கத்தியை போட்டு சட்டுன்னு புடிச்சி, தூக்கி வந்தாரு. ட்ரங்கை திறன்னு சொல்லு உள்ளே போட்டுட்டு வா போலாம்பா ன்னு கூலா சொன்னாரு. எனக்கு உடம்பெல்லாம் உதறல். வீட்டம்மா, பிள்ளைங்க எல்லாம் ஒரு மாதிரி பாக்குறாங்க.
சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ –  பார்க்-கும் பன்றிக்கறியும்
வண்டியை ஸ்டார்ட் பண்ணி கொஞ்ச தூரம் போனப்புறம் தான், ஏம்பா இது தப்பு இல்லேன்னு கேட்க. அவரு நாயகன் ஸ்டைலில் தப்பே இல்லே. இது யாரோட சொந்த வாழை மரம் கிடையாது. மலையில் தானா முளைச்சி காய்ச்சிருக்கு. பாத்தீங்களா பின்னாடி ஊரு எங்க இருந்தது. இன்னும் தூரம் போனாலும் ஊரு வராது ஒரு பார்க்கு தான் வரும். அங்கே தான் நாம போறோம்ன்னாரு.
சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ –  பார்க்-கும் பன்றிக்கறியும்
இருந்தாலும்ன்னு நான் இழுக்க, இந்தப்பாரு, உள்ளூர்காரங்ககிட்டே கேட்டுட்டுத்தான் தேங்காய், இளநீர், மாங்காய், வாழைன்னு பறிக்கிறேன். இங்கே உள்ளவங்க சொந்ததோட்டம் எது, தானா முளைச்சது எதுன்னு தெரிஞ்சா போதும். ஒன்னும் பிரச்சனை இல்லைன்னு சொன்னார். இருந்தாலும் தனியாப் போகும் யாரும் இந்த ரிஸ்க் எடுக்க வேண்டாம்னு தான் நான் சொல்லுவேன். எது யாருதுன்னு நமக்கு தெரியாதுல்லே.
 
மாங்காய்ன்னு கேட்டதும் பையன், அங்கிள் மாங்காய் நீங்க தரவே இல்லேன்னான். நாளைக்கு கிடைச்சுடும்பான்னு பதில் சொல்ல, எனக்கென்னமோ சுற்றுலா வந்த மாதிரி தெரியல்லே. என்னமோ சொந்தக்காரங்க ஊருக்குப் போய் தோட்டம் தொறவு பாத்த மாதிரி ஃபீலிங்.
 
சாலைகள் வளைஞ்சு நெளிஞ்சு போய்கிட்டே இருந்துது. ஒரு இடத்தில் பார்க் பெஞ்சுகள் கண்ணில் பட்டது. இங்கதாம்ப்பா கொஞ்ச நேரம் இறங்கி பாத்துட்டு, பசிச்சா சாப்பிட்டுட்டு அடுத்த இடம் போலாம்ன்னு சொன்னார்.காரை நிறுத்திட்டு நடந்தோம். ஒரு சில குடும்பங்கள் கண்ணில் பட்டார்கள். மத்தபடி நட்டநடு காட்டுக்குள், இயற்கை காற்றில் இதமான ஃபீலிங். பாக்குறதுக்குன்னு சுத்தி மரங்கள், காடு தான். பிக்னிக் ஏரியான்னு டேபிள் போட்டு வசதி பண்ணி வச்சிருக்காங்க. 
 
குடும்பத்தோடு போனா, ஏதாவது விளையாடிட்டு சாப்பிட்டுட்டு வர நல்ல இடம். இங்கே மக்கள் வாராவாரம் இப்படி ஏதாவது ஒரு இடத்துக்குப் போவாங்களாம். பீச் பிடிக்கிறவங்க பீச்சுக்கு, மலைகள் பிடிக்கிறவங்க இந்த மாதிரி எடத்துக்கு வருவாங்களாம்.
 
அங்கே கொஞ்ச நேரம் சுத்திப் பாத்துட்டு அடுத்து ஒரு இடத்துக்குப் போனோம். அதை நீச்சல்குளம்னுன்னு சொல்றாங்க. ப்ளூ வாட்டர் பூல்ன்னு ஆங்கிலத்தில் சொல்றாங்க. இயற்கையான நீச்சல்குளம் போல் இருக்கிறது. நாங்க பாக்கும் போது யாரும் இறங்கி குளிக்கல்ல. குளிக்கலாமா இல்லையான்னும் தெரியல்ல. பசிக்க ஆரம்பிச்சுது. அங்கே ஒரு இடத்தில் உக்காந்து சாப்பிட்டுட்டு கிளம்பினோம்.
 
அங்கேருந்து கயேன்னு ஒரு ஊருக்கு போறோம். ஷாப்பிங் பண்ணலாம்னா கடைகள் இருக்குன்னார். வழியிலே ஒரு சின்ன ஊர் வந்தது. டூரிஸ்டுகள் நிறைய கூட்டமா இருந்தாங்க. ஒரே திருவிழா மாதிரி இருந்தது. அங்கே பன்றிக்கறி ஸ்பெஷலாம். இறங்கி நடந்தோம். டூரிஸ்ட் ப்ளேசஸ்களுக்கு உரிய கடைகள், பார்த்துக் கொண்டே உள்ளே போனால் ஒரு தெரு முழுக்க பன்றிக்கறி கடைகள். எங்கே திரும்பினாலும் முழு பன்றியை கம்பியில் சொருகி க்ரில் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அல்லது க்ரில் பண்ணி சாப்பிடுவதற்கு கொஞ்சம் கொஞ்சமாக வெட்டிக் கொண்டிருக்கிறார்கள். போர்க் ரோஸ்ட்டாம். அந்த ஊரு ஸ்பெஷல் உணவாம். 
 
நமக்கு பார்க்குறதுக்கே ஒருமாதிரி இருந்துச்சு. டேஸ்ட் பாக்கலாமான்னு நண்பன் கேட்க, சாமி இதைப் பார்த்தா சாப்பிட மனசு வராது. முழு ஆளை கட்டி வச்சு வேக வச்சமாதிரி பண்றாங்க. வேணாம்பா, பசங்க மிரண்ட மாதிரி தெரியுது இடத்தை காலி பண்ணுவோம்ன்னு கிளம்பிட்டோம்.
 
ரொம்ப நேரம் அமைதியாக இருந்த மனைவி, இங்கேல்லாம் நாம வந்திருக்கனுமான்னு கேட்க, நண்பன் கொஞ்சம் அப்செட். இல்லேப்பா, இந்த ஊரில் என்ன இருக்குன்னு காட்டத்தானே வந்தாரு. நமக்கு இது புதுசு. அதான் ஒரு மாதிரி இருக்கு. அவங்களுக்கு வழக்கமான சாப்பாடு. நோ எமோஷன்ஸ் ப்ளீஸ்ன்னு சொல்லி சமாளிச்சோம். பசங்க கப்சிப்.. குடும்பத்தோட போறதுக்கு கொஞ்சம் வித்தியாசமான இடம் தான்.
 
அடுத்து அங்கேயிருந்து, மலையில் இறங்கி கீழே கயே ஊருக்குள் வந்தோம். ஷாப்பிங் மாலில் சுத்திட்டு.. அங்கே ஒரு தியேட்டரில் பசங்களுக்காக ஒரு படம் பாத்துட்டு வீட்டுக்கு வந்தோம். வழியிலேயே பிட்ஸா வாங்கிட்டு வந்துட்டோம்.
 
வீக்டேஸ்க்கு ப்ளான் போட்டு கொடுத்துட்டாரு நண்பர். போர்ட்டோ ரிக்கோவை இன்னும் சுத்திப் பார்ப்போம்.
 
-அட்லாண்டா கண்ணன்
 
முந்தைய வாரம்
 

From around the web