சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – கபோ ரோஹோ

மாட்டுப் பண்ணையில் பசங்க ரெண்டு பேரும் ரொம்ப கவலைப்பட்டு விட்டார்கள். மாடுங்களை இப்படி டார்ச்சர் பண்ணித்தான் மில்க் நம்ம வீட்டுக்கு வருதா டாடி. இனிமேல் எங்களுக்கு இந்த மில்க் வேண்டாம்ன்னு ஒரே குரலில் சொன்னார்கள். வண்டி கபோ ரோஹோ நோக்கிப் போனாலும் பேச்செல்லாம் இப்படி மாட்டுப் பண்ணை விசிட் பத்தியே போய்க்கிட்டு இருந்தது. நண்பனுக்கும் எனக்கும் எப்படி இதை திசை திருப்புவதுன்னு தெரியல்ல. மெயின் ரோட்டிலிருந்து ஒரு சின்ன ரோட்டிற்குத் திரும்பி ஒரு சிற்றூரில் பெட்ரோல்
 


 

மாட்டுப் பண்ணையில் பசங்க ரெண்டு பேரும் ரொம்ப கவலைப்பட்டு விட்டார்கள். மாடுங்களை இப்படி டார்ச்சர் பண்ணித்தான் மில்க் நம்ம வீட்டுக்கு வருதா டாடி. இனிமேல் எங்களுக்கு இந்த மில்க் வேண்டாம்ன்னு ஒரே குரலில் சொன்னார்கள்.

வண்டி கபோ ரோஹோ நோக்கிப் போனாலும் பேச்செல்லாம் இப்படி மாட்டுப் பண்ணை விசிட் பத்தியே போய்க்கிட்டு இருந்தது. நண்பனுக்கும் எனக்கும் எப்படி இதை திசை திருப்புவதுன்னு தெரியல்ல. மெயின் ரோட்டிலிருந்து ஒரு சின்ன ரோட்டிற்குத் திரும்பி ஒரு சிற்றூரில் பெட்ரோல் போடனும்ன்னு காரை நிறுத்தினோம்.

கபோ ரோஹோவுக்கு பத்து பதினைந்து மைல்கள் முன்னாடி இருக்கலாம். ரோட்டோரத்தில் சிக்கன் கபாப் போல் ஒரு வகை உணவு இருந்தது. நீள குச்சியில் சொருகி, க்ரில் செய்து தருகிறார்கள். லைட்டாக பசிச்சது மாதிரியும் இருந்தது. நண்பனும், டின்னருக்கு முன்னால் கபோ ரோஹோ வில் எதுவும் கிடைக்காது என்று சொன்னதால் ஆளுக்கு ரெண்டு குச்சியில் வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.

கபோ ரோஹோ ஊர் ஒரு புறம் என்றால், லைட் ஹவுஸும் பீச்சும் ஒதுக்குப் புறம் தூரமாக இருக்கிறது. ஊர் எல்லையிலேயே இரண்டு வழி தார்ச்சாலை முடிந்து விட்டது. ஒற்றைவழி தார்ச்சாலையில் ஒரு சில மைல்கள் போயிருப்போம். பின்னர் குண்டும் குழியுமான ரோடு என்று சொல்லும் வகையில் பாதை போல் இருந்தது. காரில் அதிலும் ஒரிரு மைல்கள் சென்ற பிறகு, ஒரு பெரிய பார்க்கிங் இடம் இருந்தது. அங்கே காரை பார்க் செய்து விட்டு லைட் ஹவுஸ் நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – கபோ ரோஹோ

ஜீப் செல்லும் வகையில் இரண்டு டயர்களுக்கு மட்டும் கற்களால் பாதை போட்டிருந்தார்கள். லைட் ஹவுஸ் அலுவலர்கள் மட்டும் செல்ல முடியும். நடந்தோம் நடந்தோம்.. மூச்சு வாங்க நடந்தோம். ஒரு குறிப்பிட்ட பகுதியை அடைந்தால், அங்கிருந்து மூன்று பக்கமும் கடல் இருப்பது போல் தெரிந்தது. ஆமாம், இது போர்ட்டோ ரிக்கோவின் தென் மேற்கு கோடி என்பதால் சுற்றிலும் கடல் காட்சி அளிக்கிறது.

இன்னும் மேலே சென்றால் பழமையான இன்னும் பராமரிப்பில் உள்ள லைட் ஹவுஸ் இருக்கிறது. அதை வெளியே இருந்தே பார்த்து விட்டு கடலுக்கருகே சென்றால், அடேங்கப்பா, என்ன ஒரு ஆழத்தில் கடல்!. மலையின் ஒரு புறம் துண்டாக உடைந்து கடலுக்குள் விழுந்து விட்டது போல் ‘க்ளிஃப்கள்’. மிகப்பெரிய அதிசயமாக தோற்றமளித்தது. முதலில் பயங்கரமாகத் தெரிந்தாலும் பின்னர் பழகிவிட்டது. சில காதல் ஜோடிகள் எல்லை வரைச் சென்று நின்று படமெடுத்துக் கொண்டார்கள்.

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – கபோ ரோஹோ

கீழே அலைகள் வந்து பாறைகளில் மோதும் காட்சியும் அசத்தல். சிலர் எங்கிருந்தோ படகுகளில் வந்து கீழிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தனர். எட்டிப் பார்த்தாலே பயங்கரமாக இருந்தது. எங்க வீட்டு அம்மணி எங்க யாரையும் அந்தப் பக்கமே விடல்லியே. மாலை நேர வெயில், அது ஒரு பிரம்மாண்டமான ரம்மியமான இடம். சற்று நேரம் சுற்றி சுற்றிப் பார்த்து விட்டு, அங்கிருந்து கீழே பீச் நோக்கி இறங்கினோம்.

மலைச்சரிவில் இறங்குவது போல் இறங்கி பீச் பக்கம் வந்தோம். இறங்கும் போது மூன்று குட்டி வளைகுடாக்கள் தனித்தனியே இருந்தது போல் தெரிந்தது. மூன்றிலும் வெவ்வேறு நிறங்களில் தண்ணீர் தெரிந்தது. முதல் வளைகுடா பக்கத்தில் செல்ல முடிந்தது. அங்கே தான் பீச்சும் இருக்கிறது. ஆழம் இல்லை. நிறைய குடும்பங்கள் சேர், டெண்ட் போட்டு அங்கே நாள் முழுவதும் கழித்தது போல் தெரிந்தது. கடலில் குளித்து விட்டு ஷவரில் குளிக்கும் வசதி எல்லாம் கிடையாது. மெயின் ரோட்டுக்கு போகனும் என்றாலே ஐந்தாறு மைல் போகனுமே.. கால்களை நனைத்து மட்டும் கொஞ்ச நேரம் விளையாடினோம்.

பின்னர் கீழே உள்ள பாதையில் காருக்கு நடந்து சென்றோம். இருட்டத் தொடங்கி விட்டது. காரை எடுத்துக் கொண்டு ஒரிரு மைல்கள் சென்றோம். இடப்பக்கம் ஒரு ரிசார்ட் இருந்தது. உள்ளே போகச் சொன்னன் நண்பன். அங்கே கடலை ஒட்டி ஒரு பிரம்மாண்டமான ரெஸ்டாரண்ட். விதவிதமான பாரம்பரிய அலங்காரங்கள் உட்புறம் இருந்தது. அங்கே இருந்தும் சாப்பிடலாம், கடலையொட்டி உள்ள கொட்டகையில் இருந்தும் சாப்பிடலாம். நாங்கள் கடலையொட்டி இருந்த இடத்திற்குச் சென்றோம். ஸ்பானிஷ், ஆங்கில உணவுகள். சீ ஃபுட்ஸ் நன்றாக இருந்தது.

சாப்பிட்டு வெளியே வந்து காரை எடுக்கச் செல்லும் போது அங்கே ஒரு பப்பாளி மரம் காய்த்துக் குலுங்கிக் கொண்டிருந்தது. கைக்கு எட்டும் உயரத்தில் பழமாகவும் சில இருந்தன. நண்பன் எட்டிப் பிடித்து நான்கைந்து பழங்களைப் பறித்தார். அமெரிக்காவில் கடைகளில் கிடைக்கும் பப்பாளியை விட, நம்மூர் நாட்டுப்புற பப்பாளி போல் இருந்தது. வீட்டம்மாவுக்கு சந்தோஷமோ சந்தோஷம். ரெஸ்ட்டாரண்ட் பில்லுக்கு இது போனஸ்ன்னு சொல்லிட்டு காருக்குப் போனோம்.

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – கபோ ரோஹோ

ரிட்டர்ன் ஒன்றரை மணி நேரம் நானும் நண்பனும் பேசிக்கொண்டே வந்து சேர்ந்தோம். மற்ற மூவரும் நல்ல அசதி என்று தூங்கி விட்டார்கள். போர்ட்டோ ரிக்கோவின் தென்மேற்கு கரையைப் பார்த்து வந்த மகிழ்ச்சியுடன் மற்றுமொரு சனிக்கிழமை இனிதே முடிந்தது.

இன்னும் இருக்கிறது போர்ட்டோ ரிக்கோ…

– அட்லாண்டா கண்ணன்

From around the web