புதுவையில் பொங்கல் பரிசுக்கு தடை போடும் துணை ஆளுநர் கிரண் பேடி.. முதல்வர் நாராயணசாமி போர்க்கொடி!

புதுச்சேரி : பொங்கல் பரிசாக அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் வைக்கத் தேவையான பொருட்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டத்திற்கு துணை ஆளுநர் கிரண் பேடி தடை போடுகிறார் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படும் என நாராயணசாமியின் அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. அதை நிராகரித்த துணை ஆளுநர் கிரண் பேடி, வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு உண்டு என கோப்பை
 
புதுச்சேரி : பொங்கல் பரிசாக அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் வைக்கத்  தேவையான பொருட்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டத்திற்கு துணை ஆளுநர் கிரண் பேடி தடை போடுகிறார் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
 
குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படும் என நாராயணசாமியின் அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. அதை நிராகரித்த துணை ஆளுநர் கிரண் பேடி, வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு உண்டு என கோப்பை திருப்பி அனுப்பியுள்ளார்.
 
கடந்த ஆண்டு, முதல்வருடன் பேசி வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே வரும் ஆண்டுகளில் பொங்கல் பரிசு வழங்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது. எனவே குடும்ப அட்டை உள்ள எல்லோருக்கும் வழங்க அனுமதிக்க முடியாது என கிரண் பேடி கூறியிருக்கிறார்.
 
முதல்வரோ, துணை ஆளுநரின் பரிந்துரையை அமைச்சரவை நிராகரித்து விட்டது. எனவே பழைய நிலையே தொடர்கிறது என்றுள்ளார். மேலும் அருகே உள்ள தமிழ்நாட்டில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. அதைப்போல் புதுச்சேரியிலும் வழங்க வேண்டும் என்பதே அவருடைய அரசின் முடிவு. 
 
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் நலத்திட்டங்களை தடை செய்வது துணை ஆளுநரின் எல்லைக்கு உட்பட்டது கிடையாது என்றும் கூறியுள்ளார். விரைவில் துணை ஆளுநரின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு முடிவு வரும் என்றும் சூசகமாக தெரிவித்துள்ளார் முதல்வர் நாராயணசாமி.
 
துணை ஆளுநராக நியமிக்கப்பட்டது முதலாகவே கிரண் பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் பனிப்போர் நடந்து வருவது குறிப்பிடத் தக்கது.
 
– வணக்கம் இந்தியா

From around the web