வெனிசூலாவில் ஏப்ரல் மாதம் தேர்தல்.. அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணிந்தது அரசு!

கராகஸ்: தென் அமெரிக்காவின் முக்கிய நாடுகளில் ஒன்றான வெனிசூலாவில் ஏப்ரல் மாதம் 22ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அதிபராக இருக்கும் நிக்கோலஸ் மதுரோ சட்ட திருத்தம் கொண்டு வந்து, சர்வாதிகார ஆட்சிக்கு வழி செய்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. எதிர்க்கட்சியினர் இதை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றனர். டாமினிக்கன் ரிபப்ளிக் நாடு இரு தரப்பிற்கும் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்தது. ஆளும் தரப்பு தங்களுடைய கோரிக்கையை முன் வைத்தது. அதில் உள்ள தேர்தல்
 

வெனிசூலாவில் ஏப்ரல் மாதம் தேர்தல்.. அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணிந்தது அரசு!

கராகஸ்: தென் அமெரிக்காவின் முக்கிய நாடுகளில் ஒன்றான வெனிசூலாவில் ஏப்ரல் மாதம் 22ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அதிபராக இருக்கும் நிக்கோலஸ் மதுரோ சட்ட திருத்தம் கொண்டு வந்து, சர்வாதிகார ஆட்சிக்கு வழி செய்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. எதிர்க்கட்சியினர் இதை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றனர்.

டாமினிக்கன் ரிபப்ளிக் நாடு இரு தரப்பிற்கும் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்தது. ஆளும் தரப்பு தங்களுடைய கோரிக்கையை முன் வைத்தது. அதில் உள்ள தேர்தல் தொடர்பான சட்ட திருத்தங்கள் தங்களுக்கு உடன்பாடில்லை. ஆளும் தரப்பு கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால், தங்கள் தரப்பு கோரிக்கைகளையும் முழுமையாக ஏற்கவேண்டும் என்று கெடு விதித்தார்கள்.

ஆளும் தரப்பு மறுக்கவே பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. உடனடியாக தேர்தலை நடத்தி மீண்டும் ஆட்சியை கைப்பற்றவும் முயன்றார்கள். அது ஜனநாயகத்துக்கு பேராபத்து, தேர்தலை தள்ளிப்போட்டு எதிர்க்கட்சிகளுக்கு உரிய அவகாசம் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் கோரினார்கள்.

அதை ஆளும் தரப்பினர் அலட்சியம் செய்தால், வெனிசூலாவுக்கு பொருளாதார தடை விதிக்கவும் அமெரிக்கா முடிவு செய்தது. ஏற்கனவே கடும் பணவீக்கத்தால் தத்தளிக்கும் சூழலில், அமெரிக்காவின் கோரிக்கையை அதிபர் /?? ஏற்றுக் கொண்டார்.

வெனிசூலாவின் அதிபராக மீண்டும் நிக்கோலஸ் மதுரோ ஆட்சியைப் பிடிப்பாரா அல்லது எதிரணியின் ஹூலியோ போர்ஜெஸ் அதிபர் ஆவாரா என்பதற்கான விடை ஏப்ரல் 22ம் தேதி, தெரிந்து விடும்.

 

From around the web