வாஷிங்டனில் குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டம்… அமெரிக்கர்கள் ஆதரவு!

இந்திய குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக உலகத் தமிழ் அமைப்பு நடத்திய போரட்டத்தில் அமெரிக்கர்கள் பங்கேற்று ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்திய குடியுரிமைச் சட்டத் திருத்தத்தில் மத, இன அடிப்படையில் இஸ்லாமியர்களும், இலங்கைத் தமிழர்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்கத் தலைநகரில் இந்திய அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. வாஷிங்டனில் அமைந்துள்ள இந்திய தூதரகத்திற்கு எதிரில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு அருகே, ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற இந்த போராட்டத்தில் சுமார் 700 பேர்
 

வாஷிங்டனில் குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டம்… அமெரிக்கர்கள் ஆதரவு!ந்திய குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக உலகத் தமிழ் அமைப்பு நடத்திய போரட்டத்தில் அமெரிக்கர்கள் பங்கேற்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்திய குடியுரிமைச் சட்டத் திருத்தத்தில் மத, இன அடிப்படையில் இஸ்லாமியர்களும், இலங்கைத் தமிழர்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்கத் தலைநகரில் இந்திய அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. வாஷிங்டனில் அமைந்துள்ள இந்திய தூதரகத்திற்கு எதிரில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு அருகே, ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற இந்த போராட்டத்தில் சுமார் 700 பேர் பங்கேற்றுள்ளனர்.

NoCAA , NoNRC என்ற முழக்கங்களுடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, பஞ்சாப், காஷ்மீர், மேற்கு வங்காளம், பிகார், உத்திரபிரதேசம் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பெரும் எழுச்சியுடன் கலந்து கொண்டனர். அமெரிக்காவில் வசிக்கும் ஈழத்தமிழர்களும் பங்கேற்றனர்.

உலகத் தமிழ் அமைப்பு முன்னெடுத்த இந்த போராட்டத்தில் கருப்பின மக்கள் உள்பட அமெரிக்கர்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். மத, இன அடிப்படையில் குடியுரிமை வழங்குவது மனித நேயத்திற்கு எதிரானது என்று கருத்து தெரிவித்துள்ளார்கள். CMRI, BCMC, Great Truth, IAMC, ICNA, AIC, CFP, AIM, OFMI, ISPJ, AAMC, NAT போன்ற சுமார் 12 அமைப்புகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றதாக, உலகத் தமிழ் அமைப்பின் சார்பில் கூறப்பட்டது.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக இந்தியாவில் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், அமெரிக்காவிலும் போராட்டங்கள் தொடங்கியுள்ளது.

A1TamilNews.com

From around the web