சென்னையில் பெப்சி நிறுவனத்திற்கு எதிராக இளைஞர்கள், மாணவர்கள் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை: காப்புரிமை பெற்றுள்ள உருளைக் கிழங்கை பயிரிட்டதாக, விவசாயிகள் மீது வழக்கு தொடர்ந்துள்ள பெப்சி நிறுவனத்திற்கு எதிராக சென்னையில் திங்கட் கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில் கூறப்பட்டுள்ளதாவது: “ லேஸ் சிப்ஸ்கள் தயாரிப்பதற்காக காப்புரிமை பெற்ற உருளைக் கிழங்கு வகையை விவசாயிகள் பயிரிட்டுள்ளதற்காக, ஒவ்வொரு விவசாயியும் 1 கோடியே 5 லட்சம் ரூபாய் இழப்பீடு
 

சென்னையில் பெப்சி நிறுவனத்திற்கு எதிராக இளைஞர்கள், மாணவர்கள் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்!
சென்னை: காப்புரிமை பெற்றுள்ள உருளைக் கிழங்கை பயிரிட்டதாக, விவசாயிகள் மீது வழக்கு தொடர்ந்துள்ள பெப்சி நிறுவனத்திற்கு எதிராக சென்னையில் திங்கட் கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

“ லேஸ் சிப்ஸ்கள் தயாரிப்பதற்காக காப்புரிமை பெற்ற உருளைக் கிழங்கு வகையை விவசாயிகள் பயிரிட்டுள்ளதற்காக, ஒவ்வொரு விவசாயியும் 1 கோடியே 5 லட்சம் ரூபாய் இழப்பீடு தரவேண்டும் என்று அகமதாபாத் நீதிமன்றத்தில் பெப்சி நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்திய விவசாயத்தில் அன்னிய நிறுவனங்களை அனுமதித்தால், விவசாயிகள் நடுத்தெருவில் நிறுத்தப்படுவார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். மத்திய அரசு மவுனம் காப்பது கண்டிக்கத் தக்கது. பெப்சி நிறுவனம், இந்திய விவசாயிகள் மீது தொடரப்பட்டுள்ள வழக்கை திரும்பப் பெறுவதுடன் மன்னிப்பு கேட்க வேண்டும்.

அது வரையிலும் பெப்சி நிறுவன தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களை கேட்டுக் கொள்கிறோம். தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துமாறு கோரிக்கை விடுக்கிறோம். சென்னையில் ஏப்ரல் 29ம் தேதி திங்கட்கிழமை காலை 10:30 மணிக்கு விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெறும். பங்கேற்று ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்,” என்று கூறப்பட்டுள்ளது.

பெப்சி நிறுவனம் விவசாயிகள் மீது வழக்கு தொடர்ந்ததைத் தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு உலக அளவில் எதிராக கண்டனங்கள் குவிந்து வருகிறது.

 

From around the web