குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக அமெரிக்கத் தலைநகரில் ஆர்ப்பாட்டம்!

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ள நிலையில், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களும், தமிழர்களும் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். அமெரிக்காவில் பல்வேறு இந்தியக் குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள இந்திய தூதரகத்திற்கு எதிரே ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உலகத் தமிழ் அமைப்பு முன்னெடுக்கும் இந்த போராட்டம், ஞாயிறு காலை 11 மணி முதல் 1 மணி வரையிலும் நடைபெற உள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள்
 

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக அமெரிக்கத் தலைநகரில் ஆர்ப்பாட்டம்!குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ள நிலையில், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களும், தமிழர்களும் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.

அமெரிக்காவில் பல்வேறு இந்தியக் குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள இந்திய தூதரகத்திற்கு எதிரே ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உலகத் தமிழ் அமைப்பு முன்னெடுக்கும் இந்த போராட்டம், ஞாயிறு காலை 11 மணி முதல் 1 மணி வரையிலும் நடைபெற உள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மாணவர்களுக்கு எதிரான வன்முறை, ஈழத்தமிழர்களுக்கு எதிரான இன ஒதுக்கல் கொள்கை ஆகியவற்றை  நிராகரித்தலும், எதிரான போராட்டமும் நடைபெறும் என்று உலகத் தமிழ் அமைப்பின் சார்பில் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

கிழக்கு அமெரிக்காவின் மாநிலங்களில் உள்ள அனைவரும் பங்கேற்று தலைநகர் வாஷிங்டனை அதிரச் செய்வோம் என்று அழைப்பு விடுத்துள்ளார்கள். உலகத் தமிழ் அமைப்புடன் பல்வேறு அமைப்புகளும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள இந்திய தூதரகத்திற்கு எதிரேயும் போராட்டம் நடைபெற்றுள்ளது.

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக திமுக தலைமையில் தமிழ்நாட்டில் 23ம் தேதி போராட்டம் நடைபெற உள்ள நிலையில், உலகத் தமிழர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

A1TamilNews.com

From around the web