நாடு முழுக்க ‘கோபேக்மோடி’… புதுவையில் ‘கோபேக்பேடி’! #GoBackBedi

புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பெடியின் சர்வாதிகாரமான போக்கைக் கண்டித்து மாநிலத்தின் முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கடந்த 5 நாட்களாக தொடர் தர்ணா நடத்தி வருகின்றனர். ஆளுநர் மாளிகையான ராஜ் நிவாஸ் முன்பு சாலையில் அமர்ந்தபடி இந்தப் போராட்டம் தொடர்கிறது. ஆனால் இதைக் கண்டு கொள்ளாமல் பாதுகாப்பாக மாளிகையை விட்டு வெளியேறிய கிரண் பெடி, டெல்லிக்கு தனிப்பட்ட பயணமாகச் சென்றுவிட்டார். ஆளுநர் போனாலும் கவலையில்லை, தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தைத் தொடர்வோம்
 

நாடு முழுக்க ‘கோபேக்மோடி’… புதுவையில் ‘கோபேக்பேடி’! #GoBackBediபுதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பெடியின் சர்வாதிகாரமான போக்கைக் கண்டித்து மாநிலத்தின் முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கடந்த 5 நாட்களாக தொடர் தர்ணா நடத்தி வருகின்றனர். ஆளுநர் மாளிகையான ராஜ் நிவாஸ் முன்பு சாலையில் அமர்ந்தபடி இந்தப் போராட்டம் தொடர்கிறது.

ஆனால் இதைக் கண்டு கொள்ளாமல் பாதுகாப்பாக மாளிகையை விட்டு வெளியேறிய கிரண் பெடி, டெல்லிக்கு தனிப்பட்ட பயணமாகச் சென்றுவிட்டார். ஆளுநர் போனாலும் கவலையில்லை, தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தைத் தொடர்வோம் என்று முதல்வர் நாராயணசாமி நடுச் சாலையில் தர்ணாவைத் தொடர்கிறார்.

இன்று ஆளுநர் கிரண் பெடிக்கு எதிராக கருப்புக் கொடியை ஏற்றி போராட்டம் நடத்தி வரும் நாராயணசாமி, கிரண் பெடியை பதவி விலகக் கோரியுள்ளார். அவரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என குடியரசுத் தலைவருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து இன்று பேசிய முதல்வர் நாராயணசாமி, “புதுவைப் பிரச்சினைகள், இப்போதைய போராட்டம் குறித்து பொது விவாதம் நடத்தத் தயாரா என்று ஆளுநர் கிரண் பெடி சவால் விடுத்துள்ளார். நான் எந்த நேரத்திலும் தயார். எங்கே எப்போது விவாதம் வைத்துக் கொள்ளலாம் என்று அவர் சொல்லட்டும். கடற்கரையில் காந்தி சிலை அருகே கூட வைத்துக் கொள்ளலாம். என்னுடைய ஒரே ஒரு கேள்விக்குக்கூட அந்த அம்மையாரால் பதில் சொல்ல முடியாது. அத்தனை அராஜகங்களை அவர் செய்து வருகிறார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை, நியமிக்கப்பட்ட ஆளுநர் ஒருவர் நடுத்தெருவுக்கு கொண்டு வந்திருக்கிறார். இதை விட கேவலம் என்ன இருக்கிறது. இதனை மத்திய அரசும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் வேதனை. எத்தனை நாட்களானாலும் எங்கள் போராட்டம் தொடரும். கிரண் பெடியே திரும்பப் போ என புதுவை மக்களே ஒன்று திரண்டு குரல் கொடுக்கின்றனர். அடுத்து, மாபெரும் வேலை நிறுத்தம், உண்ணாவிரதம், சிறை நிரப்பும் போராட்டம் என அனைத்து வகைப் போராட்டங்களையும் முன்னெடுக்க உள்ளோம்,” என்றார்.

– வணக்கம் இந்தியா

From around the web