“ஒரு மாதம் இலவச சேவை” – செல்போன் நிறுவனங்களுக்கு பிரியங்கா காந்தி கோரிக்கை!

கொரோனா வைரஸ் பரவிவரும் இந்த இக்கட்டான நேரத்தில் செல்போன் சேவையை ஒரு மாதம் இலவசமாக வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். ஜியோ நிறுவனத்தின் முகேஷ் அம்பானி, வோடோஃபோன்-ஐடியா குமார் மங்கலம் பிர்லா, பிஎஸ்என்எல் பி.கே.புர்வார், ஏர்டெல் சுனில் பார்தி மிட்டல் ஆகியோருக்கு கடிதம் மூலம் பிரியங்கா காந்தி விடுத்துள்ள கோரிக்கை வருமாறு, “ இன்றைய சூழலில் தொலைதொடர்பு நிறுவனங்கள் ஒரு நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்த முடியும். ஏராளமானோர் கட்டணம்
 

“ஒரு மாதம் இலவச சேவை” – செல்போன் நிறுவனங்களுக்கு பிரியங்கா காந்தி கோரிக்கை!கொரோனா வைரஸ் பரவிவரும் இந்த இக்கட்டான நேரத்தில் செல்போன் சேவையை ஒரு மாதம் இலவசமாக வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜியோ நிறுவனத்தின் முகேஷ் அம்பானி, வோடோஃபோன்-ஐடியா குமார் மங்கலம் பிர்லா, பிஎஸ்என்எல் பி.கே.புர்வார், ஏர்டெல் சுனில் பார்தி மிட்டல் ஆகியோருக்கு கடிதம் மூலம் பிரியங்கா காந்தி விடுத்துள்ள கோரிக்கை வருமாறு,

“ இன்றைய சூழலில் தொலைதொடர்பு நிறுவனங்கள் ஒரு நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்த முடியும். ஏராளமானோர் கட்டணம் ரீசார்ஜ் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். அதாவது, அவர்களுடைய உறவினர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

உங்கள் நிறுவனங்களின் செல்போன் சேவையை அடுத்த மாதம் முழுவதும் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்குமாறு உங்கள் அனைவரையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். பயணம் செய்ய முடியாத மக்களுக்கு தங்கள் உறவினர்களுடன் பேசிக் கொள்வதற்கு உதவியாக இருக்கும்.” என்று பிரியங்கா காந்தி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

செல்போன் நிறுவனங்கள் பிரியங்கா காந்தியின் கோரிக்கையை ஏற்குமா? மத்திய அரசு தரப்பில் இத்தகைய கோரிக்கை வலியுறுத்தப்படுமா?

A1TamilNews.com

From around the web