இந்திரா காந்தியின் பேத்தி! மிரட்டல்களுக்குப் பயப்பட மாட்டேன்! பிரியங்கா காந்தி அதிரடி!1

உத்தரப் பிரதேச மாநிலம் ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தியின் அடுத்தடுத்த மரணங்களைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு உத்தரப் பிரதேசத்தில் செல்வாக்கு குறையத் தொடங்கியது. பாபர் மசூதி இடிப்பு, ராமர் கோவில் என மத அரசியலை முன் வைத்தும், மாயாவதி உதவியுடனும் ஆட்சி அதிகாரத்தை எட்டிப்பிடித்த பாஜக, வலுவான நிலையில் உ.பி.யில் நிலைத்து நின்று விட்டது. எதிரணியினர் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுகுண் சமாஜ் என நான்காகப் பிளவுபட்டுக் கிடப்பதும்
 
இந்திரா காந்தியின் பேத்தி! மிரட்டல்களுக்குப் பயப்பட மாட்டேன்! பிரியங்கா காந்தி அதிரடி!1த்தரப் பிரதேச மாநிலம் ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தியின் அடுத்தடுத்த மரணங்களைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு உத்தரப் பிரதேசத்தில் செல்வாக்கு குறையத் தொடங்கியது.
 
பாபர் மசூதி இடிப்பு, ராமர் கோவில் என மத அரசியலை முன் வைத்தும், மாயாவதி உதவியுடனும் ஆட்சி அதிகாரத்தை எட்டிப்பிடித்த பாஜக, வலுவான நிலையில் உ.பி.யில் நிலைத்து நின்று விட்டது. எதிரணியினர் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுகுண் சமாஜ் என நான்காகப் பிளவுபட்டுக் கிடப்பதும் பாஜகவுக்கு வசதியாகப் போய்விட்டது.
 
இந்திரா காந்தி குடும்பத்தை கைவிடாத அமேதி தொகுதி மக்கள் கூட ராகுல் காந்தியை தோற்கடித்து விட்டனர். காங்கிரஸை உ.பி.யில் வலுவடையச் செய்வதற்காக பிரியங்கா காந்தி களமிறக்கப் பட்டுள்ளார். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் உ.பி.யில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராகவும் முன்னிறுத்தப்படும் வாய்ப்பும் உள்ளது.
 
அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள் மூலம்உ.பி.யில் யோகி ஆதித்யநாத் தலைமியிலான பாஜக அரசுக்கு சிம்ம சொப்பனமாக மாறிவருகிறார் பிரியங்கா காந்தி. பாஜகவின் வழக்கமான பாணியில் பிரியங்காவை அவதூறாகப் பேசி வருகிறார்கள். பாஜக அரசுக்கு சவால் விடுக்கும் வகையில் ஃபேஸ்புக்கில் அதிரடியாக பதிவிட்டுள்ளார் பிரியங்கா காந்தி.
 
“மக்கள் சேவகி என்ற முறையில், உத்தரபிரதேச மக்களுக்கு சேவை செய்வதே எனது கடமை. மக்கள் முன்பு உண்மைகளை முன்வைப்பதுதான் என் வேலையே தவிர, அரசிற்காக பிரச்சாரம் செய்வது அல்ல. 
 
பல்வேறு துறைகள் மூலமாக உ.பி. அரசு என்னை மிரட்டி வருகிறது. உங்கள் விருப்பம்போல் என் மீது நடவடிக்கை எடுக்கலாம். உண்மையை தெரியப்படுத்தும் செயலை தொடர்ந்து செய்வேன். நான் இந்திரா காந்தியின் பேத்தி. சில எதிர்க்கட்சி தலைவர்களைப் போல், அறிவிக்கப்படாத பாஜகவின்  செய்தித் தொடர்பாளர் அல்ல,” என்று கூறியுள்ளார்.
 
சமீபகாலமாக மாயாவதி பாஜகவுக்கு ஆதரவான கருத்துக்களை கூறி வருவதால், அவரையும் சேர்த்தே இந்த அறிக்கையில் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.
 

From around the web