பிரதமர் மோடிக்காக அமெரிக்காவிலிருந்து “கை தட்டிய“ நடிகை.. டெல்லிக்கு கேட்டதா?

ஒரு நாள் மக்கள் ஊரடங்கின் போது மாலை 5 மணிக்கு, வீட்டு பால்கனியில் நின்று கைத்தட்டி, கொரோனாவை எதிர்த்துப் போராடும் மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி செலுத்துங்கள் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்து இருந்தார். ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்து மாலை 5 மணி அளவில் வீட்டில் மணி அடித்து அல்லது கை தட்டி மருத்துவத் துறையினருக்கு நன்றி தெரிவித்து இருந்தனர். இந்தியாவுக்கு வெளியே அமெரிக்காவின் மேற்கே உள்ள கலிஃபோர்னியா மாநிலத்தின் லாஸ்
 

பிரதமர் மோடிக்காக அமெரிக்காவிலிருந்து “கை தட்டிய“ நடிகை.. டெல்லிக்கு கேட்டதா?ரு நாள் மக்கள் ஊரடங்கின் போது மாலை 5 மணிக்கு, வீட்டு பால்கனியில் நின்று கைத்தட்டி, கொரோனாவை எதிர்த்துப் போராடும் மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி செலுத்துங்கள் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்து இருந்தார்.

ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்து மாலை 5 மணி அளவில் வீட்டில் மணி அடித்து அல்லது கை தட்டி மருத்துவத் துறையினருக்கு நன்றி தெரிவித்து இருந்தனர்.

இந்தியாவுக்கு வெளியே அமெரிக்காவின் மேற்கே உள்ள கலிஃபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவும் தன்னுடைய வீட்டு பால்கனியில் நின்று கைத்தட்டி அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

இது குறித்து பிரியங்கா சோப்ரா கூறியிருப்பதாவது,  “ கொரோனாவை எதிர்த்துப் போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், முதல்நிலை ஊழியர்களின் பணிகளை உலகம் முழுவதிலிருந்தும், பால்கனியில் நின்று கைதட்டி பாராட்டி வருகிறார்கள். நான் இந்தியாவில் அவர்களுடன் சேர்ந்து கொள்ள முடியவில்லை ஆனால் மனதளவில் அங்கே இருக்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இந்தியாவில் மாலை 5 மணி என்பது கலிஃபோர்னியாவில் அதிகாலை 4:30 மணி ஆகும். ஆனால் அம்மணி போட்டு இருக்கிற படத்தப் பார்த்தால் அவஙக் ஊர்லேநல்லா விடிஞ்சு சூரியன் எழுந்திருச்ச பிறகு கைத்தட்டுன மாதிரில்லே தெரியுது. அப்ப இந்தியாவில் நல்லா இருட்டிருக்குமே!. எப்படியோ, டெல்லியில் பிரதமர் மோடிக்கு பிரியங்கா சோப்ராவின் கைத்தட்டல் கேட்டிருந்தா சரி!

http://www.A1TamilNews.com

From around the web