தனியார் பள்ளிகள், கல்லூரிகள் தவணை முறையில் கல்விக் கட்டணம் வசூலிக்கலாம்! தமிழக அரசு அனுமதி!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருந்த தொடர் ஊரடங்கால் பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி கட்டணங்களை வசூல் செய்ய தமிழக அரசு தடை விதித்திருந்தது. இதனை எதிர்த்து தமிழக தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தது. தற்போது நடத்தப்பட்ட விசாரணையில் பதில் அளித்த தமிழக அரசு தனியார் கல்வி நிறுவனங்கள் கல்வி கட்டணத்தை தவணை முறையில் வசூலிக்கலாம் என அறிவித்துள்ளது. அதன்படி 2020ம் ஆண்டிற்கான கல்விக் கட்டணத்தை ஆகஸ்டு, டிசம்பர் என
 

தனியார் பள்ளிகள், கல்லூரிகள் தவணை முறையில் கல்விக் கட்டணம் வசூலிக்கலாம்! தமிழக அரசு அனுமதி!கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருந்த தொடர் ஊரடங்கால் பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.

பள்ளி, கல்லூரி கட்டணங்களை வசூல் செய்ய தமிழக அரசு தடை விதித்திருந்தது. இதனை எதிர்த்து தமிழக தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தது.

தற்போது நடத்தப்பட்ட விசாரணையில் பதில் அளித்த தமிழக அரசு தனியார் கல்வி நிறுவனங்கள் கல்வி கட்டணத்தை தவணை முறையில் வசூலிக்கலாம் என அறிவித்துள்ளது.

அதன்படி 2020ம் ஆண்டிற்கான கல்விக் கட்டணத்தை ஆகஸ்டு, டிசம்பர் என இரண்டு தவணைகளில் அல்லது மூன்றாவது தவணையாக 2021ம் மார்ச் மாதத்திலும் வசூலித்துக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web