உருளைக்கிழங்கு கட்லெட் …!

தேவையான பொருள்கள்: உருளைக்கிழங்கு – 3 மிளகாய் தூள் – 1/2 டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டேபிள்ஸ்பூன் கரம் மசாலா – 1 டீஸ்பூன் முட்டை – 2 பிரட் துண்டுகள் – 2 அல்லது 3 உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் பெரிய வெங்காயம் – 1 செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்து வைக்க வேண்டும். பிரட் துண்டுகளின் ஓரங்களை எடுத்து விட்டு மிக்சியில்
 

உருளைக்கிழங்கு கட்லெட் …!தேவையான பொருள்கள்:

உருளைக்கிழங்கு – 3
மிளகாய் தூள் – 1/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
முட்டை – 2
பிரட் துண்டுகள் – 2 அல்லது 3
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1

செய்முறை:
உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்து வைக்க வேண்டும். பிரட் துண்டுகளின் ஓரங்களை எடுத்து விட்டு மிக்சியில் போட்டு தூளாக்கிக் கொள்ள வேண்டும். முட்டைகளை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி கலக்கி வைக்க வேண்டும்.

எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் போட்டு வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமானதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளற வேண்டும்.

உருளைக்கிழங்கை சேர்க்க வேண்டும். கரம் மசாலா சேர்த்து கிளறி விட்டு ஆறவிட வேண்டும்.சிறு சிறு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி பிரட் தூளில் பிரட்டி எண்ணெய் சூடான உடன் மிதமான சூட்டில் வைத்து கட்லெட்களை முட்டை கலவையில் டிப் பண்ணி போட வேண்டியது தான். இரண்டு பக்கமும் பொன்னிறமானவுடன் எடுத்து தக்காளி சாஸுடன் பரிமாற சுவையான கட்லெட் ரெடி.

A1TamilNews.com

From around the web