உடன் பிறந்தோர்  நலம் வாழ  கன்னியவள்  பொங்கலிட்டாள்!

கதிரவனின் கரங்கள் அணைத்து கதிரிங்கே விளைந்ததின்று ! கார் ,கூதிர் நாளில் வளர்ந்து முன் பனியில் கதிர் முற்றி நெல் மணியை நாம் உண்ண வந்ததொரு தை நாளாம் ! வட செலவின் துவக்கத்திலே பழையவை தனைக் கழித்து புதியன இல் புகுத்தி பீளை,ஆவாரம் மலரெடுத்து வேப்பிலை தனைச் சேர்த்து வீட்டுக் கூரையில் அவை இருக்க வேண்டாதவை எரித்து புதியவராய் பிறப்போமிங்கே ! புத்தாடை தனை உடுத்தி முக்கனியில் வாழை வைத்து புது அரிசி படியிலிட்டு தித்திக்கும் பொங்கலிட்டு திகட்டாத கரும்பு
 

உடன் பிறந்தோர்  நலம் வாழ  கன்னியவள்  பொங்கலிட்டாள்!திரவனின் கரங்கள் அணைத்து 
கதிரிங்கே விளைந்ததின்று !
கார் ,கூதிர் நாளில் வளர்ந்து 
முன் பனியில் கதிர் முற்றி 
நெல் மணியை நாம் உண்ண 
வந்ததொரு தை  நாளாம் !

வட செலவின் துவக்கத்திலே 
பழையவை தனைக்  கழித்து 
புதியன இல் புகுத்தி
பீளை,ஆவாரம் மலரெடுத்து 
வேப்பிலை தனைச்
சேர்த்து வீட்டுக் 
கூரையில் அவை இருக்க 
வேண்டாதவை எரித்து 
புதியவராய் பிறப்போமிங்கே !

புத்தாடை தனை உடுத்தி 
முக்கனியில் வாழை வைத்து 
புது அரிசி படியிலிட்டு 
தித்திக்கும் பொங்கலிட்டு 
திகட்டாத கரும்பு வெட்டி 
எத்திக்கும் மகிழ்ச்சி பொங்க 
செந்தமிழில் சொல் எடுத்து 
பைந்தமிழில் பாட்டிசைத்து 
எங்கும் நிறை கதிரவனை 
கரம் கூப்பி வணங்கிடுவோம்  !

சோறு தனை எமக்குத் தர 
ஏர் இழுத்த காளையவன்,
ஆநிரைத்  தோழனவன் 
அவன் புகழ் பார் ஓங்க 
போற்றிடுவோம் பொங்கலிட்டு !

பானையிலே  மஞ்சள் கட்டி 
அதை இழைத்து முகத்திலிட்டு 
உடன் பிறந்தோர்  நலம் வாழ 
கன்னியவள்  பொங்கலிட்டாள்

இத்தனையும் நிகழுமெங்கள் 
தாய்த் தமிழ் திருநாட்டை
நினைவினிலே  யாம் கொணர்ந்து 
புதுப் பானை பொங்கலிட்டோம் !

பொங்கலது  பொங்கட்டும் 
மகிழ்ச்சி என்றும் தங்கட்டும் !
அனைவருக்கும்  தைத் திருநாள்
வாழ்த்துகள் !

– பிரதீபா பிரேம், அட்லாண்டா, யு.எஸ்.ஏ

From around the web