அமேசான் பிரைமில்  வெளியாகும் ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’! எப்போது தெரியுமா?

அறிமுக இயக்குனர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியாகத் தயாராக இருக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள்’. இந்தப் படத்தில் 5 டைரக்டர்கள் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப்போத்தன் உட்பட பல திரைநட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த ஐந்து இயக்குனர்களில் ஒருவர் வில்லனாக நடித்துள்ளார். அது யார் என்பது சஸ்பென்ஸ் ஆக உள்ளது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் பாடல் வெளியீட்டு விழா, மார்ச் 17-ம் தேதி நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அது
 

அமேசான் பிரைமில்  வெளியாகும் ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’! எப்போது தெரியுமா?றிமுக இயக்குனர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியாகத் தயாராக இருக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள்’.

இந்தப் படத்தில்  5 டைரக்டர்கள் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப்போத்தன் உட்பட பல திரைநட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த ஐந்து இயக்குனர்களில் ஒருவர் வில்லனாக நடித்துள்ளார். அது யார் என்பது சஸ்பென்ஸ் ஆக உள்ளது

இந்தப் படத்தின்  படப்பிடிப்பு  முடிந்த நிலையில் பாடல் வெளியீட்டு விழா, மார்ச் 17-ம் தேதி நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  அது ரத்து செய்யப்பட்டது.  ஜோதிகாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம் ஏப்ரல் மாதத்தில் திரையரங்குகளில் வெளியிட தயார் நிலையில் இருந்தது.

தற்போதைய சூழ்நிலையில் திரைக்கு வரத் தாமதமாகும் ஆதலால் அமேசான் பிரைம் நிறுவனம் மூலம் வெளியிடமுடிவு செய்யப்பட்டு  ரூ.9 கோடிக்கு  விற்பனை உரிமை வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த முடிவிற்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் லாக்டவுன் முடிந்ததும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படம் மே 25 ஆம் தேதி அமேசானில்  நேரடியாக வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

A1TamilNews.com

From around the web