தூது போனாரா மூத்த பத்திரிக்கையாளார்?

உச்ச நட்சத்திரத்தை சும்மா பாத்து விட்டு வந்தேன். முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ க்வான் பற்றி பேசினோம் என்று மூத்த பத்திரிக்கையாளார் படம் போட்டு கூறியுள்ளார். ஆனால் அவர் மத்திய ஆட்சியாளர் சார்பில் தூதுவராகப் போயுள்ளார் என்று கிசுகிசுக்கப் படுகிறது. டிமானிடைசேஷன் அமல்படுத்தியது சரியில்லை என்று கூறியது ஆளும் தரப்பை அப்செட் ஆக்கியுள்ளதால் சமாதானப்படுத்தி, நல்ல வார்த்தை ஏதும் சொல்ல வைக்க முடியுமா என்ற பரிட்சார்த்த முன்னோட்டம் தான் பத்திரிக்கையாளர் சந்திப்பாம். பத்திரிக்கையாளர்னா பேட்டி
 
தூது போனாரா மூத்த பத்திரிக்கையாளார்?
உச்ச நட்சத்திரத்தை சும்மா பாத்து விட்டு வந்தேன். முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ க்வான் பற்றி பேசினோம் என்று மூத்த பத்திரிக்கையாளார் படம் போட்டு கூறியுள்ளார். ஆனால் அவர் மத்திய ஆட்சியாளர் சார்பில் தூதுவராகப் போயுள்ளார் என்று கிசுகிசுக்கப் படுகிறது.
 
டிமானிடைசேஷன் அமல்படுத்தியது சரியில்லை என்று கூறியது ஆளும் தரப்பை அப்செட் ஆக்கியுள்ளதால் சமாதானப்படுத்தி, நல்ல வார்த்தை ஏதும் சொல்ல வைக்க முடியுமா என்ற பரிட்சார்த்த முன்னோட்டம் தான் பத்திரிக்கையாளர் சந்திப்பாம்.
 
பத்திரிக்கையாளர்னா பேட்டி எடுப்பாங்க. தற்கால நிலவரம் குறித்து கருத்து கேப்பாங்க. இவரு ஒன்னுமே பேசல்ல. சிங்கப்பூர் பத்தி பேசினோம்ன்னு வாலண்டியராக வண்டியிலே ஏறுனது தான் அரசியல் கிசுகிசுப்புக்கு காரணமாம்.
 
சூப்பரை வளைக்கலாமான்னு எதிர்தரப்பு ஆந்திராக்காரர் மூலம் வலை வீசுவதாகவும் அதைத் தடுக்க இந்த சந்திப்பு மூலம் தூது சொல்லப்பட்டதாம். மே மாசம் போட்டியிடலாமா வேண்டாமான்னு யோசனையில் இருக்கும் உச்ச நட்சத்திரம், அடிச்சா சிக்சரா இருக்கனும்ன்னு திட்டம் போடுறாராம். 
 
ஆளூம் தரப்புடன் சேர்ந்தா முதலுக்கே மோசம். எதிரணியில் வாலண்டியராப் போய்ச் சேந்தா மதிப்பு கிடைக்குமா என தீவிர டிஸ்கஷனில் இருப்பவருக்கு, பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒரு வகையில் பலம் தானாம். தேசியக் கூட்டணியுடன் தென் மாநிலங்களில் தேசியக் கட்சியா ஸ்டார்ட் பண்ண முடியும்னா மே மாசம் கோதாவில் இறங்க வாய்ப்பு இருக்காம்.
 
– குவாட்டர் கோவாலு

From around the web