சாலைகளில் வருபவர்களை காவல் துறை துன்புறுத்தக் கூடாது! உயர்நீதிமன்றம் அதிரடி!

கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களான பால்,மளிகை, காய்கறி இவற்றை வாங்குவதற்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதையும் மீறி அவசர மற்றும் அவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியில் வருபவர்களை காவல்துறை துன்புறுத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. பொதுமக்களை காவல் துறை துன்புறுத்துவதாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.எல்.ரவி, பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். தினக்கூலிகள், தெரு வியாபாரிகள், வெளி
 

சாலைகளில் வருபவர்களை காவல் துறை துன்புறுத்தக் கூடாது! உயர்நீதிமன்றம் அதிரடி!

கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களான பால்,மளிகை, காய்கறி இவற்றை வாங்குவதற்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதையும் மீறி அவசர மற்றும் அவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியில் வருபவர்களை காவல்துறை துன்புறுத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

பொதுமக்களை காவல் துறை துன்புறுத்துவதாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.எல்.ரவி, பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். தினக்கூலிகள், தெரு வியாபாரிகள், வெளி மாநிலங்களிலிருந்து பணிக்கு வந்த தொழிலாளர்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

சாலையில் நடந்து வருபவர்கள் மீது தடியடிப் பிரயோகம் செய்யப்படுகிறது. சட்டத்திற்குப் புறம்பாக செயல்படுபவர்களைக் தண்டிப்பதற்கு காவல்துறைக்கு அதிகாரம் இல்லை எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அடங்கிய பெஞ்ச் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. காவல் துறை நடுநிலையான அணுகுமுறையைக் கையாளவேண்டும். மனித உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் கடைக்கோடி சராசரி மனிதன் கூட எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது.
ஊரடங்கை மீறி பொதுமக்கள் சாலைகளில் வந்தால் அவர்களின் தேவைகளை கேட்டறிந்து உதவி செய்வதே காவல் துறையின் கடமை என்றும் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

A1TamilNews.com

From around the web