இப்படியே போச்சுன்னா தமிழ் மொழியை காப்பது யார்? – காவல் ஆய்வாளரின் கவலை!

புவனகிரி: தமிழ் மொழியை யார் காப்பான் என்று காவல் ஆய்வாளர் க.அம்பேத்கார் கவலை தெரிவித்துள்ளார். அவருடைய ஃபேஸ்புக் பதிவு வைரலாகி உள்ளது. இது தான் அந்தப் பதிவு: “நம்ம ஊர்ல ஸ்டேஷனுக்கு முன்னாடியே தியேட்டர்,காலையில் பத்து மணிக்கெல்லாம் திடீர்னு மேள சத்தம் காது ஜவ்வு கிழிந்து போகிற அளவுக்கு ,என்னன்னு போய் பார்த்து வர நம்ம காவலரை அனுப்பி வச்சேன்,காப்பான் ரிலீஸ் அதுக்காக பசங்க நாலைந்துபேர் மேளம் ஏற்பாடு பண்ணி அடிச்சிட்டு இருக்காங்கன்னு சொன்னார்,படிக்கிற பசங்களான்னு
 

இப்படியே போச்சுன்னா தமிழ் மொழியை காப்பது யார்? – காவல் ஆய்வாளரின் கவலை!

 

புவனகிரி: தமிழ் மொழியை யார் காப்பான் என்று காவல் ஆய்வாளர் க.அம்பேத்கார் கவலை தெரிவித்துள்ளார். அவருடைய ஃபேஸ்புக் பதிவு வைரலாகி உள்ளது.

இது தான் அந்தப் பதிவு:

“நம்ம ஊர்ல ஸ்டேஷனுக்கு முன்னாடியே தியேட்டர்,காலையில் பத்து மணிக்கெல்லாம் திடீர்னு மேள சத்தம் காது ஜவ்வு கிழிந்து போகிற அளவுக்கு ,என்னன்னு போய் பார்த்து வர நம்ம காவலரை அனுப்பி வச்சேன்,காப்பான் ரிலீஸ் அதுக்காக பசங்க நாலைந்துபேர் மேளம் ஏற்பாடு பண்ணி அடிச்சிட்டு இருக்காங்கன்னு சொன்னார்,படிக்கிற பசங்களான்னு கேட்டேன்,ஆமான்னு சொன்னார்,

அவர்களை வரசொல்லி ஒரு கடிதம் எழுதி கொடுத்திட்டு போக சொன்னேன் காப்பிஅடிக்க கூடாது…இதுதான் நிபந்தனை..எழுதி கொடுத்தார்கள். இதைத்தான் வாசிக்கின்றீர்கள்,கல்லூரி படிக்கின்ற மாணவர்கள்.இப்படியே நிலைமை போனால் யார் காப்பான் இவர்களையும் இவர்களின் தமிழையும் ?”

கல்லூரி மாணவர்கள் எழுதிக் கொடுத்த கடிதங்களில் தப்பும் தவறுமாக தமிழை எழுதியிருந்ததைத் தான் அப்படி சுட்டிக் காட்டியுள்ளார். 

நம்ம ஊர்ல ஸ்டேஷனுக்கு முன்னாடியே தியேட்டர்,காலையில் பத்து மணிக்கெல்லாம் திடீர்னு மேள சத்தம் காது ஜவ்வு கிழிந்து போகிற…

Posted by Ambethkar K on Friday, September 20, 2019

அதைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவைத் தான் குற்றம் சாட்டுகிறார் என்று சிலர் கருத்து தெரிவித்ததையொட்டி மேலும் ஒரு பதிவில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

இருக்கின்ற நடிகரில் சுய ஒழுக்கத்தை கடைபிடிப்பவராக நடிகர் சூர்யா அவர்களை பிடிக்கும்,
காதலில் கண்ணியத்தை கடைப்பிடித்து ,கரம் பிடித்த செயல் மிகவும் பிடிக்கும். காவல்துறை அதிகாரியாக மிடுக்குடன் நடித்த படங்கள் மிகவும் பிடிக்கும்..ஏழைகளின் படிப்பிற்கு ஏணியாக இருக்கின்ற அவரது முயற்சிகள் மிகவும் பிடிக்கும்.

இப்படி நிறைய அவரைப்பிடிக்கும். வைரல் ஆகி விட்டது அந்த ஒரு பதிவு ,அவரைக்குறை சொல்வதற்கான பதிவல்ல அது, அனைத்து நடிகர்களின் ரசிகர்களுமே செய்கின்ற சிறு தவறுதான் தமிழில் தடுமாறுவது என்பது, அதற்கு இவர் என்ன செய்வார்?. 

கோபம் அனைத்தும் இந்த மாதிரி இளைஞர்களுக்கு சரிவர தமிழைப் போதிக்காமல் விட்ட அவர்களின் ஆசிரியர்கள் மீதுதான்.

ஆசிரியர் சமுதாயமே, எவ்வளவு மோசமான சூழலுக்கு மாணவர்களை கொண்டு சென்றுக் கொண்டிருக்கின்றோம் என்பதை சிறிதாவது உணர்ந்துகொள்ளுங்கள்..இனியாவது
சிறுவயதில் இருந்து குறையில்லா தமிழை போதித்து வர வேண்டுகிறேன்.

இப்படிக்கு
அம்பேத்கார்
காவல் ஆய்வாளர் ,
வகுப்பும்,தேர்வும்
தமிழ்வழிக் கல்வியில்
அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி ,
சென்னை.

//தமிழையும் காப்பான் இனி//

காவல் ஆய்வாளர் க.அம்பேத்கரின் இந்தப் பதிவும் வைரலாகி வருகிறது. காவல் ஆய்வாளர் ஒருவர் தமிழ் மொழி மீது கொண்டுள்ள அதீத ஆர்வமும் பற்றும் வியப்பூட்டுகின்றன.

– வணக்கம் இந்தியா

 

 

From around the web